Tuesday, May 28, 2013

சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -பலனின்றி சுருண்டது அந்தோ பசி யாலே !



கோடைக் காலம் வந்து துவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்த துவே !
ஆடை முழுதும் நனைந் திடவே -உடல்
ஆனதே குளித்த தாய் ஆகிடவே !
ஓடை போல நிலமெல் லாம்- காண
உருவம் பெற்று வெடித் தனவே !
வீ(ட்)டை விட்டே வெளி வரவே -மனம்
விரும்பா நிலையை அனல் தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே -அற
பசுமை முற்றும் நீங்கி டவே !
உச்சியில் வெய்யில் வந்த தெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்ட தனல் !
மூச்சை இழுத் தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயி லென -வெதும்பி
செப்பிட வார்தை செவி விழுமே !

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும் மண்ணில் !
எத்தனை வேகம் காட்டு கின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடு கின்றார் !
இத்தனை நாள் போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக் குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே !

வற்றிய நீர்நிலை இல் லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல் லாமே !
பற்றி எரிய முற்ற றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ் சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றி டவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசி யாலே !

புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. இந்தக் கொடுமை இன்று முதல் குறையலாம் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஐயா...

    ReplyDelete
  2. வெயில் கொடுமையிலும் தங்கள் வார்த்தைகளில் உள்ளம் குளிர்ந்தது ஐயா. வெளியில் எங்கும் செல்லாதிருங்கள்.

    ReplyDelete
  3. இங்கும் வெயில் கொடுமை மிகவும் அதிகம் தான்......

    புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை! :(

    ReplyDelete
  4. வெம்மையின் உக்கிரம் கண்டு மனம் வெதும்பி விதைத்த பாடலிலும் உணரமுடிகிறது கோடையின் கொடுமையை! இதுவும் கடந்துபோகும் என்றே ஆற்றிக்கொள்ளவேண்டியுள்ளது மனத்தை!

    ReplyDelete
  5. கொழுத்தும் வெயில் பெரும் தொல்லை தான்.கொழுத்தும் வெயிலைக் கூட ரசிக்க வைக்கின்றது உங்கள் கவிதை

    ReplyDelete
  6. மிஞ்சி வெளுத்த வெயிலாலே
    மீறி வந்த கவிமழையால்
    நெஞ்சம் குளிர்ந்த நிலையாகி
    நிறைந்த வண்ணம் கேட்கின்றேன்!
    வஞ்சம் ஏதும் இதிலில்லை!
    வாட்டும் குளிரோ குறைவதற்கே
    கொஞ்சம் இங்கே அனுப்பிவைப்பீர்!
    கூதல் அஞ்சி ஓடுதற்கே!

    ம்ம்ம்....


    கவிதை அருமை புலவர் ஐயா.





    ReplyDelete
  7. ஆமாங்கையா,எல்லா ஊரிலும் இதுபோலத்தான் உள்ளது .

    ReplyDelete
  8. ஆம் ஐயா!சுட்டெரித்து விட்டது.ஒரு மழை கொட்டினால் நல்லது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...