Wednesday, June 26, 2013

நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ் நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!





மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதை –என்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றே –பலர்
     இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானே –அன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கினீர்  மறுமொழி  தம்மை – என்னை
     வாழ்திட,, வளர்ந்திட, வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ண தாமே –திரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கி–பின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சினில்  தாங்கிக்,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும் –அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன் – மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன் –முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர் – நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றே –எனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர் – வாழ்
        நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!

                   புலவர் சா இராமாநுசம்

31 comments :

  1. தமிழ்மொழிதான் தேனே! ரொமபச் சரி ஐயா... அமிழ்தினுமினியதன்றோ நம் மொழி. எங்களின் மறு மொழிக் கருத்துக்களை மிக மதித்து பாப் புனைந்து கெளரவித்திருக்கும் உங்களின் பாங்கில் மனம் மயங்கி நிற்கிறேன். நாங்கள்தான் உங்களுக்கு உரைக்க வேண்டும்- நன்றி, நன்றி நன்றி புலவரையா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  2. உறவுகள் என்றும் நீடிக்கும் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
  4. நாங்கள் எப்போதும் உங்கள் துணை நிற்போம் ஐயா... எங்களுடனான தங்களது நட்பை கவிதையாக வடித்த விதம் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  5. உங்கள் மரபுக்கவிதைகள் நீங்கள் தமிழ்ச்சமுதாயத்திற்குத் தரும் அன்புப் பரிசாகும்.

    மழை கால மேகம் போல உங்கள் கவிதை மழை தமிழக்மெங்கும் பொழிகிறது.

    தமிழ் மக்கள் உள்ளங்கள் பச்சை பசேல் என உவகையுடன் பெருமிதம் கொள்கிறது.

    இராமனின் அருளால் இராமானுசம் சதம் அடிப்பார் அது வரை நிதம் ஒரு கவிதை எழுதவேண்டும்

    என்பதுவே எனது ஆவல்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  6. Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  7. ஏழ்பிறப்பும் இணந்திருக்கும் இந்த சொந்தங்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  8. அழகான கவிதையில் அருமையான பலவிடயங்களை பகிர்ந்து வருகிறீர்கள் ஐயா!...

    விலகாத சொந்தங்கள் நாங்கள் உங்களுக்கு.
    விரைந்திடுங்கள் இன்னும் இன்னும்
    தொடருகிறோம்...
    துணையிருப்போம்!.

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  9. தரமாக தந்திட முயல்வேன் நானே –அன்னை
    தமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே!//உங்கள் கவிதையின் தரம் ஊரறிந்ததாயிற்றே ஐயா,தளர்வின்றி தொடருங்கள் ஐயா

    ReplyDelete
  10. உங்கள் தமிழினை சுவைக்க என்றும் துணைவருவோம்! தொடருங்கள் தமிழ் பணியை! நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  11. அன்னைத்தமிழுடன் தொடர்கிறேன் .

    ReplyDelete
  12. உள்ளத்தில் எழுகின்ற எண்ண தாமே –திரண்டு
    உருவாக, கருவாகி, கவிதை ஆமே!///நீங்க சொன்னா சரிதான் அய்யா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  13. மறவாது எழுதுவேன்! மரபில் கவிதை –என்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே!
    இறவாது வாழ்வது அதுதான் என்றே –பலர்
    இயம்பிட, உள்ளத்தில் ஏற்றேன் இன்றே!
    தரமாக தந்திட முயல்வேன் நானே –அன்னை
    தமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே!

    வணங்குகின்றேன் ஐயா வளமான கவிதை அது
    வாழ்நாள் முழுதும் இன்பம் ஊட்டட்டும் .

    ReplyDelete
  14. தமிழின் இனிமையைக் குழைத்து அற்புதப்பாக்கள் தரும் மாண்புக்கு நாங்களன்றோ தங்களுக்கு தலைவணங்கி நன்றி சொல்லவேண்டும். இனிதே தொடரட்டும் இன்தமிழ்ப்பாக்கள். நன்றியும் பாராட்டும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  15. தங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் - இனிமையான பாக்கள் தருவதற்கு.

    மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  16. உறவு தொடரும் அய்யா.

    மரபுக் கவிதையில்
    எண்ணக் குவியல்களுக்கு
    உரு கொடுத்து
    பாக்களாய்
    பகிருங்கள் அய்யா

    காத்திருக்கின்றோம்
    தமிழ்முதம்
    பருகிட.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. இனிமைமிகு உறவெனவே நீங்கள் வந்தீர் -எமக்கு
    ஈடில்லா கவிச்சுவையைப் பருகத் தந்தீர்
    இனிஎவரும் கவிபுனைதல் எளிதே என்னும்
    மனஉறுதி தனைத்தந்து உயர்ந்தே நின்றீர்

    பாலையதன் இடைகாணும் சோலை போல-பசியில்
    பரிதவிப்போன் அடைந்துவிட்ட விருந்தைப் போல
    நாளைக்கொரு நற்கவிதை நல்கும் நீவீர்
    நலமோடும் வளமோடும் வாழ்க வாழ்க

    பழகுகின்ற பண்புதனில் குழந்தை போல-பதிவரை
    அரவணைத்துச் செல்வதில் அன்னை போல
    குழம்புகிற வேளைதனில் தலைவன் போல
    குணம்மாறும் அண்ணலேநீ வாழ்க வாழ்க

    வேலிருக்கும் வரையினிலே வினைகள் இல்லை-பெருகும்
    ஆறிருக்கும் வரையினிலே பஞ்சம் இல்லை
    நீரிருக்கும் வரையினிலே பதிவர் உலகில்
    நிகழ்ச்சிக்கும் பங்கமில்லை குறையும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete
  19. Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...