Saturday, July 20, 2013

என் முகநூல் பதிவுகள் -4





         பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. நிலையாமையை ஆராய்ந்து முற்றும் துறத்தல் நன்கு இனிது.

                  இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்புகளை அறிய முடியாமல் வீண்
கோபம் கொண்டால், அவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.


                   நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பதும் இழிதகைமையான போக்கு போன்றதாகும்


            தூக்கம் இல்லாதவர்கள் !

திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.

                                புலவர்  சா  இராமாநுசம்

                           

26 comments :

  1. தூக்கம் இல்லாதவர்கள் - உண்மைகள்...

    ReplyDelete
  2. சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  3. உண்மையான மென்மையான வரிகள்

    ReplyDelete
  4. சிறப்பான வரிகள் மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. “ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை.“

    அப்போ... ஆணை விரும்பும் தலைமகள் நன்றாக துாங்குவார்களா...?
    நீங்கள் ஓர் ஆணாக இருந்ததால் இப்படிச் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    மற்ற கருத்துக்கள் அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மகளே!

      “ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் ,என்று சொல்லும் போது, அங்கே உம் சேர்ந்திருப்பதை விவரித்தால் தூக்கமின்மை தலைவிக்கு மட்டுமல்ல, தலைமகனுக்கும் என்பதே பொருள்! பெரும்பாலும் நம் இலக்கியங்கள் தலைமகள் துயரங்களைத்தானே அதிகமாக சொல்லுகின்றன! நன்றி!

      Delete
    2. “உம்“மொன்று சேர்ந்ததை நானோ உணரவில்லை!
      “கம்“மென்று செல்வேன் கவி!

      விளக்கத்திற்கு மிக்க நன்றி புலவர் ஐயா.

      Delete
  6. திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.


    சிறப்பான வரிகள் ஐயா....

    ReplyDelete
  7. நிஜமான வரிகள்....சிறப்பு..

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு..... முகநூலில் பகிர்ந்ததை எங்களுடனும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. உண்மையான வரிகள்அய்யா. நன்றி

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  11. மனதில் கொள்ளவேண்டிய கருத்துக்கள்

    ReplyDelete
  12. சிறப்பான கருத்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. வணக்கம் புலவர் ஐயா.
    உங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...