Wednesday, July 31, 2013

என் முகநூல் பதிவுகள் -4




கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.

மாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.

நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.

அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.


                                                                          புலவர்  சா  இராமாநுசம்  

12 comments :

  1. அருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. சிந்தனைக்களஞ்சியம்!

    ReplyDelete
  3. அனைத்துமே சிந்திக்க வேண்டியவைகள்

    ReplyDelete
  4. அனைத்துமே அருமையான கருத்துக்கள் ஐயா நன்றி

    ReplyDelete
  5. அருமையான கருத்துக்கள்

    ReplyDelete
  6. ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

    தங்களுக்கே உரிய சிந்தனை அருமை ஐயா

    ReplyDelete
  7. எம்ஜியார் பாடிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் பாடல் சட்டென நினைவுக்கு வருகிறது அய்யா.....

    உடல் உழைக்க சொல்வேன் அதில் பிழைக்க சொல்வேன் அவர் உரிமை பொருட்களை தொடமாட்டேன்....வரிகள் அசத்தலாக இருக்கும்...!

    ReplyDelete
  8. நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது போன்ற நீதியுரைகளிலின்று வாழ்க்கைக்குத் தேவையான நன்முத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  9. இனியன கூறும் தங்களின் நல்லிதையத்தை வணகுகின்றேன் ஐயா ...!!!!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...