Monday, September 9, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் . பகுதி -1அன்பின்  இனிய  உறவுகளே!
              வணக்கம்!

         நான்  முன்னரே  அறிவித்திருந்தவாறு   என்  ஐரோப்பிய  சுற்றுப்
பயணத்தைப  பற்றிய  குறிப்புகளையும்  கண்ட  கண்கவர்  காட்சிகளையும்
எடுத்த  புகைப்  படங்களையும் , இன்று முதல்  நாடு  வாரியாக  தொடர்ந்து
வெளியிடுகிறேன்

       அதற்கு  முன்னதாக  நான்  பாரிஸ்  நகரில்  தங்கியிருந்த போது
அங்கேயே  தங்கி வாழ்ந்து கொண்டு  தன்னோடு  நகரில் (பாரிஸ்)
தங்கி வாழும் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்  குடும்பங்களையும்  இணைத்து
கம்பன் கழகம் என்ற அமைப்பை  உருவாக்கி மிகமிகச்  சிறப்பாக  நடத்தி வரும் வெண்பா வேந்தரும் அயல் நாட்டில் தமிழை வளர்க்கும் அன்பருமாகிய  கவிஞர்  கி  பாரதிதாசன்  அவர்கள் நேரில் என்னை வந்து  சந்தித்தை  நான்  என் வாழ்நாளில் பெற்ற மறக்க  இயலாத பயன் என்றே
கருதுகிறேன்.

       நகருக்குப்  புறத்தே   சுமார் ஐம்பது  மைல்களுக்கு  அப்பால்  எங்கள்
குழு தங்கியிந்த  விடுதி  இருந்ததால்  பாரிஸ் நகரின்  வரைப் படத்தில்  அது வரவில்லை அதனால்  வரும்  வழி  கண்டு பிடிக்க முடியாமல் இரவு
ஒன்பது  முதல்  பல்வேறு  வகையில் அலைந்து  இரவு பன்னிரண்டு  மணி
அளவில் அறைக்கு வந்தார். அவரோடு கம்பன்  கழக உறுப்பினர் மூவரும்
வந்து சிறப்பித்தனர்.

      வந்த அனைவரும்  எனக்கும் என்னோடு அறையில் தங்கியிருந்த  அகில  பாரத மூத்தகுடிமக்கள் சங்கத்தலைவரும்  பயணக் குழுவின் அமைப் பாளருமாகி  திருமிகு அ சாமிநாதன் அவர்களுக்கும்  தங்கள் கம்பன்  கழத்தின்  சார்பாக  பொன்னாடை  போர்த்தி  பரிசுப்  பொருளும் வழங்கி
கம்பன் கழகம்  நடத்திய விழா மலரையும் தந்தார்கள்

      மேலும் கிட்டதட்ட  ஒரு மணி  நேரம்  உரையாடி  மகிழ்ந்தோம்
அதுமட்டுமல்ல, நாங்கள்  ஐம்பதுபேர்  குழுவாக வருது முன் கூட்டியே
தெரிந்திருந்தால் எங்கள்  பாரிஸ் கம்பன் கழகத்தில் உங்கள்  அனைவருக்கும்  சிறந்த வரவேற்பு  கொடுத்திருப்போம் என்று அவர்கள்
கூறிய போது  நாங்கள்  இருவரும் நெகிழ்ந்து போனோம்.

      மறுநாள்  காலை நாங்கள் பாரிஸை விட்டு பெல்ஜியம்  போக
வேண்டி  இருந்ததால் பிரியா விடை பெற்று அவர்கள்  செல்ல வழி
யனுப்பி விட்டு நாங்கள் சற்று .நேரம் கண் துயின்றோம்.

                                        புலவர்  சா  இராமாநுசம்

 புகைப் படங்கள்!

30 comments :

 1. கவிஞர் பாரதி தாசன் வலைப்பதிவு நான் தினமும் சென்று படிக்கும் ஒன்றாகும்.

  தங்கள் கவிதைகள் போல் அவரது கவிதைகளும் மரபுக் கவிதைகள்.

  அண்மையில் தொடர்ந்து ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதினார். சாஹித்ய அகடெமி இவரை கௌரவிக்க வேண்டுமென நான் நினைத்தேன்.

  இவரது பல பாடல்களுக்கு நான் மெட்டு போட்டு அனுப்பியது உண்டு. அண்மையில் கூட எனக்காகவே ஒரு பதிவு எழுதினார்.

  இவரை நீங்கள் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி ஆக இருக்கிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 2. தாங்கள் ஐரோப்பாவுக்கு வந்த போது என்ன முயன்றும் என்னால் உங்களை நேரில் காணக் கிடைக்கவில்லை என்பது வருத்தமே...

  இங்கு எங்கள் கவிஞர் ஐயாவுடன் இணைந்து எடுத்த புகைப் படத்தையும் இனிய நினைவுகளையும் பகிர்ந்தமைகண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!

  தொடருங்கள்.. உங்கள் பயணப் பதிவுகளை.. காணும் ஆவலில் நானும்....

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

  த ம.2

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 3. பிள்ளையார் சதுர்த்தி அன்று ஐரோப்பிய பயணப்
  பதிவினைப் பிள்ளையார் சுழி
  போட்டு துவங்கி இருப்பது மகிழ்ச்சி.
  படித்தும் கண்டும் இன்புற்றேன்.
  தொடர் விருந்திற்காகக் காத்திருக்கிறேன்.
  நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 4. இதற்குத்தான் காத்திருந்தோம்!சுற்றிக்காட்டுங்கள்;களிப்பூட்டுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 5. ஐயா!
  எங்கள் விடுமுறை காலத்தில் வந்து சென்றுள்ளீர்கள்.பாரிஸ் கம்பன் கழகத்தின் கவிஞர் பாரதிதாசன் அண்ணன் தங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.பாரிசில் அவர் தமிழையும், தமிழார்வலர்களையும் போற்றுவதில் மிகப் பெரிய மனதுடன் செயற்படுபவர். அவருக்கு நன்றி!
  அடுத்தமுறை சிலசமயம் தமிழ்நாட்டிலேயே சந்திக்கலாம்.
  தங்கள் பயணம் சிறப்புற அமைந்ததில் , நமக்கும் மகிழ்வே!

  ReplyDelete
 6. தொடக்கமே அருமை ஐயா. தொடருங்கள் தொடர்கிறோம் நன்றி

  ReplyDelete
 7. iஇந்தப் பயணக் கட்டுரையைத் தான் எதிர் பார்த்திருந்தோம். மிக்க மகிழ்ச்சி உலகம் சுற்றிய அனுபவத்தை பதிவாகத் தொடங்கியதில் மகிழ்ச்சி ஐயா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 8. பயணக்கட்டுரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தொடருங்கள் ஐயா.

  ReplyDelete
 9. பயணக்கட்டுரையையும் படங்களையும் தொடருங்கள் ஓசியில் நாங்களும், பார்த்து விடுவோம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 10. மகிழ்வான தருணம் .அடுத்து எமது சுவிஸ் நாட்டின் விபரமும் வரவிருக்கிறது நான் தான் சேர்ந்து நின்று ஒரு படத்தையேனும் எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதே .இருப்பினும் கிட்ட நின்று பேசியது போல் அந்த உரையாடல் இன்னமும் என் மனதில் பசுமையாக நிற்கின்றது ஐயா .மேலும் தொடரட்டும் தங்களின் பயண அனுபவங்கள் இனிதாக .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 11. தொடருங்கள்... தொடர்ந்து வாசிக்கிறோம்...

  படங்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும், மிக்க நன்றி!

   Delete
 12. பயணத்தில் தங்களோடு பயணிக்க முடியாவிட்டாலும் தங்கள் கட்டுரை மூலம் உலகை சுற்றிப் பார்க்கும் அனுபவம் கிட்டும் என நம்புகிறேன்.

  ReplyDelete
 13. படங்கள் கண்டு மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 14. பாரதி தாசன் அற்புதமான மரபுக்கவிதை எழுதும் கவிஞர்...

  அறிவேன் அப்பா இவரை நான்...

  இவர் உங்களை வந்து பார்த்தது மட்டுமில்லாது பொன்னாடை போர்த்தி சிறப்பித்தது சந்தோஷம்.

  அதோடு பயணக்குழு அமைப்பாளர் சாமிநாதன் சாருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தது சந்தோஷம் அப்பா...

  ReplyDelete
 15. வணக்கம் ஐயா.
  பதிவர் திருவிழாவில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஐரோப்பிய பயணம் நன்றாக இருந்தது என்று அப்போது சொன்னீர்கள். நீண்ட நேரம் பேச முடியவில்லை. உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கிறேன்.
  கவிஞர் திரு பாரதிதாசன் அவர்களை சந்தித்தது நிச்சயம் ஒரு நெகிழ்வான, மகிழ்வான நிகழ்ச்சிதான். உங்களை பெருமைபடுத்தியத்தில் நாங்களும் பெருமை பெற்றோம்.
  அன்புடன்,
  ரஞ்சனி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா!

   Delete
 16. தங்கள் பயண அனுபவங்களை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்தேன். திரு.பாரதிதாசன் ஐயா தங்களை வந்து சந்தித்தமை அறிந்து மிக்க மகிழ்ச்சி. தமிழால் இணைந்த மனங்களின் சங்கமம் சிறப்பு. மற்றப் பகுதிகளையும் வாசிக்கிறேன் ஐயா.

  ReplyDelete
 17. தமிழ் உணர்வின் காரணமாக, இரவு பன்னிரண்டு மணி ஆனபோதும் தங்களை வந்து பார்த்து கவுரவம் செய்த கம்பன்கழகம் கவிஞர் கி பாரதிதாசன் மற்றும் அவரோடு வந்த கம்பன் கழக உறுப்பினர்கள் மூவருக்கும் நன்றி! வாழ்க தமிழ்!

  ReplyDelete
 18. இரவிலும் உறவை வளர்த்த அய்யா பாரதிதாசன்தாசன் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...