எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம்
என்றே-என
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை
சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
புலவர் சா இராமாநுசம்
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை
சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
புலவர் சா இராமாநுசம்
ஆசிரியர்களின் கடமையையும் மாணவர்களின் விருப்பத்தையும் எதிர்கால கடமைகளையும் மாணவர்களுக்கு சொல்லித்தரும் கவிதை நன்று அய்யா
ReplyDeleteஎழுத்தறிவித்த இறைவனுக்கு நன்றி சொல்வோம் இந்நாளில். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteகல்விக் கண் திறந்த கடவுளராம் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கவியதில் அழகிய அறிவுரைகள் தந்தீர்கள்!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
அரிய நற் கருத்தைத் தந்த அன்பு இதயத்தை
ReplyDeleteவணங்குகின்றேன் ஐயா .
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஇயற்கைத் தாய்க்கு தொடர்ந்து துரோகம் செய்தால் ,அவள் பொங்கி எழும்போது நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை தாங்கள் உணர்த்திய விதம்அருமை அய்யா !
ReplyDeleteத.ம 5.