Wednesday, September 18, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி - ஐந்து

                    இலண்டன்(-3-8-2013)

         தேம்ஸ்  நதிக்கரையைக்  விட்டு மீண்டும்  பேருந்தில்
ஏறி பயணத்தை தொடந்தோம்  சைக்கிள்  பேரணியின் காரணமாக
சில இடங்களை  இறங்கிப் பார்க்க முடியாமல்  வண்டியில் மெதுவாகச்
சென்றவாறே பார்த்தோம்  பேரணி  கலையத் தொடங்கியது

           நகரின் மத்தியில் ஓரிடத்தில்  வண்டி நின்றது அங்கே ஒரு
சதுக்கம்! அதில்  சிங்கம் ஒன்று  மிகமிகப்  பெரியவடிவில் கல்லில்  சிலையாக  இருந்தது  மேலும்,  உயர்ந்த தூண் ஒன்றும்  மேடையில்
கோழிசிலை
ஒன்றும் அங்கே இருந்தன!  மக்கள் அவற்றின் மிக அருகே  சென்று

புகைபடங்கள்  எடுத்தனர்  கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் தொலைவில் இருந்தே  எடுத்தேன்

            பகல்  உணவு  உண்ணப்  புறப்பட்டோம்   தரமான உணவு
இந்தியன் உணவு விடுதியில் !ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது   அனைவரும்
உண்டபின் புறப்பட்டோம்  வழியில் இலண்டன் வீதிகளை வண்டியில்  போகும் போதே படமெடுத்தோம்  சிலவே நன்றாக வந்தன மீண்டும்
மிகப் பெரிய சதுக்கம், (பெயர் டிரஃபாஸ்கர்)! அரண்மனை, சிலருடைய சிலைகள்  காணப் பட்டன  பலரும் அவற்றை படமெடுக்க நானும்
எடுத்தேன்.
          அடுத்து நாங்கள்  சென்ற இடம் , மேடம் துசாட்ஸ் மெழுகுச்
சிலைகள் உள்ள அருங்காட்சியகம் பல வாயில்கள்  இருந்தாலும் எங்கும்
நீண்ட வரிசை  எங்கள் குழுவுக்கு முன்னரே முன்பதிவு செய்திருந்ததால்
எளிதாக  உள்ளே  சென்றோம்

          ஏகப்பட்ட சிலைகள் !அனைத்தும் சிலைகள்  என்று நினைக்க
இயலாதவாறு  உயிருடன்  கண் முன் தோற்றம் அளிப்பதாவே  கருத
முடிந்தது கூட்ட  நெரிசல்  தாங்க முடியாமல் நானும் என் நண்பரும் ஒருசில சிலைகளையே பட மெடுத்துக் கொண்டு ஒருமணி நேரத்திலேயே
வெளியில்  வந்து  அமர்ந்து கொண்டோம்!

          கண்ட  காட்சிகள்  கீழே……..


 

34 comments :

 1. கண்களுக்கு விருந்து படைக்கும் புகைப்படங்கள் ஐயா..

  ReplyDelete
 2. புகைப்படங்கள் கவர்ந்தன.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 3. நிஜமாக எது சிலை எது
  உண்மையான மனிதர்கள் என அனுமானிக்கவே
  முடியவில்லை,ஏதோ உங்கள் தயவில் நாங்களும்
  உங்கள் பதிவின் மூலம் ஐரோப்பாவை கண்டு மகிழ்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 4. பயண அனுபவங்களோடு அழகான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 5. படங்கள் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 6. மெழுகுச்சிலை அருமை....
  போக வேண்டிய ஆவலை தூண்டுகிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 7. மெழுகுச் சிலைகளைப் பார்த்து பிரமித்து நாமும் சிலையாகிப் போவோம் போலிருக்கே.

  நல்லதொரு பயணக்கட்டுரை. தொடரட்டும். பாராட்டுக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 8. அருமையான புகைப்படங்கள் அய்யா... அருமையான பயணக் கட்டுரை.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 9. ரசித்தேன். தொடரின் அடுத்த பகுதியை எதிர்பார்க்கும் அன்பன் கந்தசாமி.

  ReplyDelete
 10. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 11. மனதிற்கு இனிமையைத் தரும் ரசிக்கவைக்கும் நல்ல நல்ல விடயங்கள் அங்கு இருக்கின்றன என அறிந்துள்ளேன்.
  நானும் அங்கெல்லாம் சென்றதில்லை... அதற்கும் கொடுப்பனவு என்று ஒன்று இருக்கவேண்டும் ஐயா!...

  உண்மையில் நீங்கள் பாக்கியவான்தான். மகிழ்வாய் இருக்கிறது. படங்களைப் பார்த்து ரசித்தேன்.
  தொடருங்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 12. அடுத்தமுறைஎன்னையும்அதை்துச்செல்லுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 13. பயணத்தில் தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 14. இனிமையான பயணம் தான்.... படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 15. படங்கள் அருமை ஐயா. தொடருங்கள் தொடர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 16. சிலை செய்த கைகளுக்கு பாராட்டுக்கள். தங்கள் பதிவிலுள்ள படங்களை xlarge size – இல் வெளியிட்டு இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

   Delete
 17. மெழுகுச் சிலைகள் மெய் மறக்க வைத்தது !!.அருமையான அனுபவம் .தொடருங்கள் ஐயா .வேலைப் பளு காரணமாக வலைத் தளத்தைத் தொடர முடியவில்லை வருந்துகிறேன் .நிட்சயம் தங்களின் தொடர் ஆக்கத்தை விரைவில் மீண்டும் வந்து வாசித்து மகிழ்வேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 18. மெழுகுச் சிலைகளுடன் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையா? கவிஞர் திரு பாரதிதாசன் காந்தியடிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவுடன் இந்தக் கேள்வி மனதில் வந்தது.

  ReplyDelete
 19. tha.ma 7

  ஹை மெழுகு சிலைகள் அப்படியே தத்ரூபம் அப்பா..

  அதென்ன கோழி ப்ளூ கலர்ல இருக்கு? அப்படி என்ன ஸ்பெஷல் அப்பா ?

  அருமையான தொகுப்பு.. அழகிய படங்கள் அப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

  ReplyDelete
 20. பகிர்விற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...