Thursday, December 12, 2013

என் முகநூல் பதிவுகள்-எட்டு





நாம் ஒருவர் மீது கோபமோ , வெறுப்போ கொண்டிருந்தால் அவனைப்பற்றி பேச்சு வரும்போது அவன் இருந்தா என்ன! செத்தா என்ன! என்று பேசுகிறோம்! அதுபோல வள்ளுவரும் சொல்வது, வியப்பல்லவா! அதாவது ஒருவன், வாயால் அறிகின்ற சுவை (உப்பு, காரம் , இனிப்பு போன்றவை) மட்டுமே அறிந்து
கொண்டு , செவிச் செல்வமாகிய கேள்விச் செல்வத்தின் சுவையை அறியாது வாழ்பவன் இருந்தா என்ன! செத்தா என்ன! என்று வள்ளுவர் கல்விச் செல்வத்தின் முக்கியத்தை
விளக்கக் கூறுகிறார்

உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வதற்குச் செல்வம் தேவை! ஆகவே அதனைப் பெற பல வகையில் முயற்சி செய்யறோம்!ஆனால் , அச் செல்வமானது, நாம் தேடாமலேயே,( அதுவே )நம்மை அடைய வழி கேட்டு வருவதற்கு ,வள்ளுவர்
சொல்வது, நாம் செய்யும் எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை நம்மிடம் இருந்தால் போதும் என்பதே ஆகும்!

சில நேரங்களில் நாம் கோபம் வந்தா , என்ன பேசறோம் ,என்று தெரியாமல் சுடு சொற்களை கொட்டி விடுகிறோம் அதனால் மனதில் ஏற்பட்ட காயமானது, எப்படிப் பட்டது என்றால் தீயினால் ஏற்பட்ட புண் கூட ஆறிப்போயிடும் ,நம் சுடு சொற்களால் , அம்மனக்காயமோ மாறாத வடுவாக பாதிக்கப் பட்டவரின் மனதில் என்றும் நின்று விடும்!

                      புலவர்  சா  இராமாநுசம்


13 comments :

  1. முகநூலில் நீங்கள் இடும் கருத்துக்கள் எல்லாம் முத்துக்கள்தான் பாராட்டுக்கள் tha.ma1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. வள்ளுவர் சொன்னதும் நீங்கள் சொல்வதும் அருமை அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. அனைத்தும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. அத்தனையும் நித்திலமாய் ஒளிவீசும் முத்துக்கள் பெருந்தகையே.

    ReplyDelete
  7. அத்தனையும் அருமை ஐயா....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...