Thursday, January 9, 2014

பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமுன் கவிப்பெண்ணே!



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொலையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே

என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள்
மறுத்தால் வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்

எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும் கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீராப்
பழியும் வருமுன் கவிப்பெண்ணே!

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. அற்புதமான கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வழக்கம்போல் அருமை ஐயா!!

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா..

    கவிதையில் ஒவ்வொரு வரிகளும் மனதை நெருடியது... அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும் கலங்காது-வாழ்க

    ReplyDelete
  5. சிறப்பான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கவிமகள் மீது கொண்ட மட்டற்ற காதல் உணர்வினை இங்கே
    மிக மிக அற்புதமாக வெளிக்காட்டியுள்ளீர்கள் ஐயா .தங்களின்
    கவி வரிகளைக் காணக் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் .
    வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  7. இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
    இதயம் திறக்க மறுக்கின்றாள் - என்ற வரிகள் எல்லாக் காதலர்களுக்கும் பிடிக்கும்!

    ReplyDelete
  8. சிறப்பான வார்த்தைகள் ஐயா
    நன்றி
    த.ம 7

    ReplyDelete
  9. அன்பை கேட்கும் வரிகள்

    நன்றி

    ReplyDelete
  10. கவிமகளை நினைத்து வடித்த கவிதை மிக அருமை. ரசித்தேன்....

    த.ம. +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...