Monday, August 4, 2014

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!



உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!

அப்பனே ஏழுமலை ஆண்டவ வணங்குகிறேன்!
தப்பென இதுவரை தவறியும்  செய்ததில்லை!
எப்பவும் என்னுடைய இதயத்தே வாழ்கின்ற
ஒப்பென ஒன்றில்லாய்! உன்னடி வணங்குகிறேன்!

தாங்கிட இயாலாத தளர்வெனக்கே வந்தாலும்
நீங்கிட வழிகாட்டும் நிமலனே வணங்குகிறேன்!
ஓங்கியே உலகளந்த உத்தம! உன்நாமம்
தாங்கியே திருவடி தலைவைத்தே வணங்குகிறேன்!

எண்ணிய எய்திட எனக்கருளும் செய்கின்ற
புண்ணிய பெருமாளே! போற்றியுனை வணங்குகிறேன்!
கண்ணிலே கருமணியாம் கண்ணனே காலமெலாம்
மண்ணிலே மறைந்தாலும் மறப்பேனா! வணங்குகிறேன்!

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!
என்னைக் காத்தருள்வாய் ஏழுமலைப் பெருமாளே!
பொன்னை வேண்டியல்ல! பொருளை வேண்டியல்ல
அன்னை அலர்மேலு அருள்வேண்டி வணங்குகிறேன்!

புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமை. திருப்பதி மட்டுமா, மற்ற ஊர்களும் செல்கிறீர்களா? திருப்பதியை இங்கிருந்தே வழி பட்டுக் கொண்டால்தான் சரிப்படும் போல! அவ்வளவு கூட்டம்! . 24 மணி நேரம், 48 மணி நேரம் என்றெல்லாம் காத்திருக்கப் பொறுமை இருப்பதில்லை!!! இப்போ பெர்த் சிஸ்டம் போல இரண்டடுக்காய் பக்தர்களைப் பார்க்க விடுகிறார்களாம்.

    ReplyDelete


  3. ஒரு மகிழ்ச்சியான செய்தி!
    நான் அடுத்த வாரம்(5-ஆம் தேதி) சீனாவில் , பெய்ஜிங் ,ஷங்காய், அடுத்து ஹாங்காங், மெக்காவ் போன்ற
    இடங்களுக்குச் சுற்றுலா உங்கள் வாழ்த்தோடு செல்கிறேன்
    என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே முன்னரே அறிவித்தேனே!

      Delete
  4. வணக்கம்
    ஐயா.

    இறைவனின் அருளால் தங்களின் பயணம் இனிதாக அமையட்டும்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. உலகம் சுற்றும் வாலிபரே உங்கள் பயணங்கள் இனிதாக அமைய வாழ்த்துக்கள். பாதுகாப்போடு சென்ற வர எனது பிரார்த்தனைகள்

    ReplyDelete
  6. உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  7. உங்கள் பயணம் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  8. வணக்கம்!

    சுற்றுலாப் போகும் சுடா்த்தமிழ்ப் பாவலரைப்
    பற்றுடன் காக்கும் பரம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்! பயணம் இனிதாக அமையட்டும்.

    ReplyDelete

  10. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  11. பயணம் இனிக்கட்டும்
    சிறக்கட்டும்

    ReplyDelete
  12. வழியனுப்பியும் வாழ்த்துகிறேன் .மகிழ்ந்து வாருங்கள் ,மகிழ்ச்சியோடு நீண்டநாள் வாழுங்கள் அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...