இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே
உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!
நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுசம்
பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
பாரில் அவதரித்த மைந்தனது
பார் போற்றும் அவனியிலே.
பேரன் புகழ் சிறக்க
இறைவனை வணங்குகிறேன் ஐாயா
பேரனுக்கு புகழ்பாடிய பாவினை கண்டு மகிழ்ந்தேன்.
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பேரனுக்கு
த.ம 1வது வாக்கு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:
வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteபண்புடனே வாழ்ந்திடவும்
ReplyDeleteபலகலையும் கற்றிடவும்
இன்பம் எல்லாம் பெற்றோங்க
இனிதாய் வாழ்த்துகிறேன் இன்நாளில் ....!
உங்களின் அன்புப் பேரனுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteManamaarnda nalvaazhththukkal
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteManamaarnda nalvaazhththukkal
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅன்புப் பேரனுக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Delete
ReplyDeleteவணக்கம்!
எங்கள் பெரும்புலவர் ஏத்திமகிழ் பேரனைத்
தங்கத் தமிழால்தா லாட்டினேன்! - பொங்குமுயர்
அன்புறுக! ஆய்ந்தே அறிவுறுக! நற்குறளால்
இன்புறுக பல்லாண்டு இருந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி!
Delete
ReplyDeleteதமிழ்மணம் 4
மிக்க நன்றி!
Deleteதங்களின் பேரன் நீடூழி வாழ இறையருள் கிடைக்கட்டும் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா !தங்களின் செல்லப் பேரன்
ReplyDeleteஇறைவனின் அருளால் எல்லா நலனும் வளமும் பெற்று நீடுழி வாழ
வாழ்த்துகின்றேன் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதங்கள் பேரனுக்கு
ReplyDeleteஎங்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
மிக்க நன்றி!
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதங்கள் பேரனுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லப்பையா :-)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
ReplyDeleteஅன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க//
வளமுடன் வாழ்க பல்லாண்டு
மிக்க நன்றி!
Delete