Thursday, November 27, 2014

கண்ணில் தெரியக் கயிறு!



தங்கம் விலைகண்டே தான்திருட கள்வர்களும்
எங்குமதைத் தேடுகின்றார் இன்றதனால்- மங்கையரே
எண்ணி நடப்பீரே எப்படிதான் காப்பீரோ
கண்ணில் தெரியக் கயிறு!

13 comments :

  1. வணக்கம்
    ஐயா

    அருமையான கருத்துள்ள வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 1
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆமாம் ஐயா! இப்போதெல்லாம் தாலிக் கயிறைக் கூடக் காத்துக் கொள்ள வேண்டியதாகிப்போனது...

    ReplyDelete
  3. ஆம். உண்மைதான். சமீபத்தில் கூட செய்தித்தாளில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் பைக் வாங்க ஒரு பெண்மணியின் செயினருத்த சம்பவம் பற்றிப் படித்தேன். பேராசை. அதை நிறைவேற்ற தெரிவு செய்யும் வழி

    ReplyDelete
  4. என் மனைவியும் 13சவரன் பறிகொடுத்துள்ளார்

    ReplyDelete
  5. கருத்தில் கொள்ள வேண்டியவர்கள் திருந்தினால் சரி!

    ReplyDelete
  6. அருமையான கவிதையில்
    அவசியமான கருத்துரை
    காதுள்ளோர் கேட்கட்டும்
    மற்றவர்கள் இழக்காதிருக்க
    ஆண்டவன் அருளட்டும்

    ReplyDelete
  7. சம்பத்து தரும் ஆபத்து ?
    த ம 6

    ReplyDelete
  8. பொற்றாலி யோடெல்லாம் போமென்ற அவ்வைசொல்
    கற்றறிவில் மாதர்க்கே! காவலென - நற்றிறமாய்
    எண்ணத் துணிவிருந்தால் ஏமாற்றக் கைவைப்போன்
    கண்ணில் தெரியும் கயிறு!

    வெண்பா அருமை அய்யா!
    விட்டுவிட்டென்றாலும் தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  9. கடந்த வாரம் கூட நான் வசிக்கும் பகுதியில் தாலிச்செயின் அறுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது ஐயா....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...