Thursday, April 30, 2015

வருக வருக மேதினமே - உழைக்கும் வர்க்கம் போற்றிட மேதினமே!



வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே
தருக பல்வகை தொழிலோங்க - ஏதும்
தடையின்றி பற்றா குறைநீங்க
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி
பேதத்தை நீக்கும நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே


செய்யும் தொழிலே தெய்வமென் - முன்னோர்
செப்பிய வழியே செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்து
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்கு காரணம் இத்தினமே

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லா கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடப் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திட செய்தாய் மேதினமே.

புலவர் சா.இராமாநுசம்

16 comments :

  1. வணக்கம் ஐயா மே தின வாழ்த்துப்பா அருமை தங்களுக்கும் வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. அருமை
    மே தின வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம 2

    ReplyDelete
  3. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  4. உழைப்பவர் தினத்தை கொண்டாட ,பதிவர்கள் அனைவருக்கும் சிறப்பு தகுதி உண்டுதானே அய்யா :)

    ReplyDelete
  5. "எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
    இணைந்திட செய்தாய் மேதினமே." என்பது
    உண்மை தான்! - நம்
    வாழ்வு மேம்படக் குரல் எழுப்புவோம்!

    ReplyDelete
  6. மே தின வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  7. அனைவரையும் ஒன்றாய் இணைந்திட செய்த மே தினத்திற்கு நல்ல கவிதையில் அழகான வரவேற்பு. நன்றி.

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை ! மே தின வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. மே தின நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...