Wednesday, June 3, 2015

ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!



ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்
அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!
மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை
கூறுவது என்னவென ஆய்தே கூறும்!
குற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்!
தேறிவிடும்! தெளிவடையும் மனித குலமே
தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!


புலவர் சா இராமாநுசம்

22 comments :

  1. மனித குலத்திற்கு தேவையில்லாத சாதி மதம் நீங்க நலமே.
    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  2. ஆறுவது சினம். அனைவரும் கடைபிடிக்கவேண்டியது. நல்ல கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஜாதி மதம் நீங்கினாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
    த ம 4

    ReplyDelete
  4. மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
    மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை//

    மிகவும் சரியாகச் சென்னீர்கள் ஐயா....
    ஆஹா...நான் நினைத்து எழுதி நிமிர்ந்து பார்த்தால் சசிகலாவும் இதையே சொல்லி இருக்கிறார்கள்....உங்கள் கவிதை தந்த உணர்வு இது ஆகையால் அப்படியே விட்டு விட்டேன்

    தம +1

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  6. அருமை ஐயா நல்ல சிந்தனை.
    தமிழ் மணம் இரண்டாவது

    ReplyDelete
  7. நல்ல கருத்து இன்னும் நாலு பேரை சென்று சேர ...என் த ம 7:)

    ReplyDelete
  8. உண்மைதான் ஐயா.கோபம் வரும்போது ஏதாவது பேசுமுன் பத்து எண்ணினால் போதும் என்று சொல்வர்.

    ReplyDelete
  9. அனைவரும் கடைபிடிக்க வேண்டிய கருத்து ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. சாதி இரண்டொழிய வேறில்லை...

    ReplyDelete
  11. //மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
    மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை//
    உணமைதான் இன்னும் மாற்றமே இல்லை
    தம +

    ReplyDelete
  12. "தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!"
    தேசத்திற்கு தேவை இந்த தேன் வரிகள்!

    நினைப்பது நிறைவேற வேண்டுகிறேன் அய்யா!


    த ம 12
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...