Thursday, August 13, 2015

நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?


இன்றோடு முடிந்தது பாராளு மன்றம்- நாளும்
இந்நிலை நீடித்தால் நடவாது ஒன்றும்
நன்றாமோ நாட்டுக்கே எண்ணுவீர் நன்றும்-வீணாய்
நட்டமே பலகோடி வரிப்பணம் இன்றும்

நம்பியே மக்களும் ஓட்டினைப் போட்டார்-அவையும்
நடவாது முடங்கிடும் அவலமா கேட்டார்
வெம்பிடும் மக்களின் வேதனைப் போக்கும்!-உடன்
வீம்பினை அனைவரும் விலக்கிட நோக்கும்

ஏட்டிக்குப் போட்டி வேண்டாமே இங்கே-வாடும்
ஏழைக்கு நல்வாழ்வு வருவது எங்கே
நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி
நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. கட்சி பேதமின்றி எல்லோரும் திருந்த வேண்டும்.

    ReplyDelete
  2. வர வர இது தொடர்கதையாகிவிட்டதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  3. இவர்களின் எண்ணம் நலம் பெற வேண்டும் என வேண்டுவோம் ஐயா வேறு வழியில்லை.
    தமிழ் மணம் இரண்டாவது.

    ReplyDelete
  4. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வருகையில் இப்படி மாற்றி மாற்றி எதிர்கட்சிகள் மல்லுக்கு நிற்பதும் நம் வரிப்பணம் வீணாவதும் வேதனையான ஒன்று!

    ReplyDelete
  5. ஏட்டிக்குப் போட்டி வேண்டாமே இங்கே-வாடும்
    ஏழைக்கு நல்வாழ்வு வருவது எங்கே

    நல்ல கேள்வி ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.
    ஒவ்வொரு வரிகளும் அற்புதம் த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அவரவர் அரசியல்தான் முக்கியம் :)

    ReplyDelete
  8. நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி
    நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?
    மக்களின் எதிர்பார்ப்பு இதுவே.
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  9. அந்த மன்றம் மக்களை இம்சை படுத்தும் ஒரு தொழுவம் அய்யா...

    ReplyDelete
  10. நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி
    நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?
    ஓட்டு போட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனின் வேண்டுதலை
    பட்டொளி வீசி பறக்க செய்த கவிதை!
    நன்றி புலவர் அய்யா!
    பட்ளொளி 10 (த ம )
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  11. சிந்தை கவரும் சந்தம் விளையாடும் கவிதை அருமை ஐயா ! நானும் என் பங்குக்குப் புலம்பியுள்ளேன்...வந்து பார்க்கவும்...
    http://psdprasad-tamil.blogspot.com/2015/08/independence-2015.html

    ReplyDelete
  12. தொடரும் வேதனை. எப்போது திருந்துவார்களோ.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...