Monday, August 31, 2015

தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!


இறப்பும் பிறப்பும் இயற்கையின் நியதி-என்றே
எண்ணிடில் வாரா மரணமாம் பீதி!
உறங்கலும் விழித்தலும் போன்றதே என்றே –எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை அன்றே!
சிறப்பினைக் கொண்டது மானிடப் பிறப்பே- எதையும்
சிந்தித்து செயல்படின் தேவையில் துறப்பே!
அறப்பணி ஆற்றுவீர் அன்பினைப் போற்றுவீர்-மக்கள்
அறிந்திட மனித நேயத்தைச் சாற்றுவீர்!


வாழ்வும் வீழ்வும் வருவதே நம்மால் –வாழ்வில்
வாரா அணுவும் மாற்றார் தம்மால்!
ஊழ்வினை எனினும் முயன்றால் போமென-எடுத்தே
உரைத்தவர் வள்ளுவப் பெருந்தகை ஆமென!
சூழ்வினை சூழ்ந்து சொல்வதை ஆய்ந்தே-எதையும்
சொல்வதும் செய்வதும் ஒன்றென வாழ்ந்தே!
தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த
தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. அருமை ஐயா அருமை
    மனித நேயம் போற்றுவோம்
    தம 1

    ReplyDelete
  2. மனிதம் போற்றுவோம்....அருமை ஐயா வரிகள்!

    ReplyDelete
  3. அறப்பணி ஆற்றுவீர் அன்பினைப் போற்றுவீர்-மக்கள்
    அறிந்திட மனித நேயத்தைச் சாற்றுவீர்!
    மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  4. "தாழ்விலா இன்பம் தளிர்திடச் செய்வோம்-இந்த
    தரணியில் மனித நேயத்தால் உய்வோம்!" என்பதே
    சிறந்த வழிகாட்டல்

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  5. நிலையில்லா உலகில் நிரந்தரமாய் வாழ நல்ல வழிகாட்டி :)

    ReplyDelete
  6. //மனித நேயத்தால் உய்வோம்//
    ஆம் ஐயா

    ReplyDelete
  7. மனிதம் வளர்ப்போம் அருமை ஐயா
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  8. அருமையான முத்தாய்ப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மனித நேயம் போற்றும் கவிதை சிறப்பு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...