Monday, January 25, 2016

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே


காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. நாடாளும் "நல்லவர்கள்"தான் தாண்டவக்கோனே.. மக்களை
    நாசமாய்ப் போக வைக்கிறார்கள் தாண்டவக்கோனே!

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. குடியரசு தின கோரிக்கை நன்று :)

    ReplyDelete
  4. உங்கள் பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. தங்களுடைய ஏக்கமே எங்களின் ஏக்கமும்.

    ReplyDelete
  5. குடியை(மது) தடி எடுத்து அடித்து உடைத்திட வேண்டும்
    தாண்டவக்கோனே!
    குடியில்லா குடியரசு அமைந்திடல் நன்று,
    ஆனால் நடவாத ஒன்று!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. சிறந்த பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
  7. நாடாள்வோர் மாறவாய்ப்பில்லை! குடிமகன்கள் திருந்தினால் குடியும் ஒழியும்! இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நிதிகிடைக்க மதுவினைத்தான் தாண்டவக்கோனே - அரசு
    நித்தம் இங்கே விற்குதுபார் தாண்டவக்கோனே
    கதிஎனவே மதுக்கடையில் தாண்டவக்கோனே- நாளைக்
    கழித்திடுறார் மக்களும்தான் தாண்டவக்கோனே
    மதியிருந்தும் தினசரியும் தாண்டவக்கோனே- ஆட்டு
    மந்தையைப்போல் கூடுகிறார் தாண்டவக்கோனே
    விதிஎனவே விட்டுவிட்டால் தாண்டவக்கோனே - நாடு
    விளங்காமல் போய்விடுமே தாண்டவக்கோனே

    ReplyDelete
    Replies
    1. புலவர் ஐயாவின் கவிதையை தொடர்ந்த தங்கள் கவிதையும் அருமை சேட்டைக்காரன் சார்

      Delete
  9. அருமை ஐயா. பாடுபட்டு சேர்க்கும் பணத்தை இப்படி குடியில் அழிப்பதைக் கண்டு பார்த்துக் கொண்டிருப்பதன் வேதனை கவிதையாக மாறி உள்ளது .

    ReplyDelete
  10. இத்தனை பணத்தினை இங்கே இழக்கும் மக்களைக் கண்டால் வேதனை மிஞ்சுகிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...