Thursday, January 28, 2016

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர் போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!



அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
தொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
    இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

    அருமை மிகவும் அருமையான வரிகள் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய கவிதை தந்த புலவர் அய்யாவிற்கு நன்றி!

    ReplyDelete
  3. #குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்#
    நன்றாகச் சொன்னீர்கள் அய்யா !

    ReplyDelete
  4. பிறப்பு --இறப்பு --நடுவில் வாழ்க்கை -நிச்சயிக்கப்பட்டது மரணம். நாம் ஏதாவது நினைவலைகள் விட்டுச்செல்வோம் ஐயா . நன்றி அருமை .

    ReplyDelete
  5. பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
    போற்றிட வாழ்வீர் மனிதரே!! அதுவரை!
    இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

    அருமையான வரிகள் ஐயா...
    நல்ல கவிதை.

    ReplyDelete
  6. கண்கள் குணமாகி மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி ஐயா.
    வரிகள் நன்று!

    ReplyDelete
  7. முத்து முத்தான கருத்துகள் ஐயா...

    ReplyDelete
  8. அருமையான வழிகாட்டல்

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
  9. அற்புதமான வரிகள் சார்.

    ReplyDelete
  10. சிறப்பான சிந்தனை. நன்றி ஐயா.

    ReplyDelete
  11. வணக்கம் புலவர் ஐயா !

    வாழ்க்கையை நன்றாய் வலிந்து கூறிடும்
    மிகவும் அருமை ஐயா ஒவ்வொரு வரியிலும் உண்மையின் ஊற்று
    நிறைகிறது நெஞ்சம் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  12. ஏற்றதைச் செய்வோம்
    ஏற்றமுறச் செய்வோம்
    வரிகளுக்கு வந்தனம் செய்வோம் புலவர் அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  13. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

    அருமையான வாழ்க்கை நெறியை வகுத்துச் சொன்னீர்கள்.

    நன்றி.

    த.ம.9

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...