Wednesday, January 6, 2016

நாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை!


நாளும் கைதே ஆகின்றான் –மீனவன்
நடப்பது எதுவும் புரியவில்லை
ஆளும் அரசோ தவறாமல்-கடிதம்
அனுப்புதல் ஏனோ தெரியவில்லை

மத்தியில் ஆள்வோர் இதுபற்றி-சற்றும்
மதிப்பதாய் எதுவும் தெரியவில்லை
கத்திமேல் நடக்கிறான் மீனவனோ-அவன்
கண்ணீர் நிற்குமா புரியவில்லை

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. மத்தியில் ஆட்சி மாறியும் மீனவன் வாழ்வில் மாற்றம் எதுவும் வரவில்லை ,இதென்ன வெளிநாட்டுக் கொள்கையோ !

    ReplyDelete

  2. ஒருநாள் போவார்
    ஒருநாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்
    விடிந்தால் விடியும்
    தொடரந்தால் தொடரும் இதுதான்
    மீனவர் வாழ்க்கை!

    அரசியல் வலையில் தீர்வு என்னும் மீன் சிக்குவது மிகவும் கடினம் அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வேதனை. இன்னமும் பாராமுகம் ஏனய்யா..என்று பாடத்தோன்றுகிறது.

    ReplyDelete
  4. எனக்கு என்னவோ தவறு மீனவர்களிடமும் இருக்கலாமோ என்றே தோன்றுகிறது

    ReplyDelete
  5. காலம் முழுவதும் நாம் அரசை குற்றம் சுமற்றி என்ன பயன் கண்டோம் ஐயா நம்மை நாமே காப்போம் என்று மக்கள் விழிப்புணர்வுக்கு வரவேண்டும்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. மீனவன் உயிரில் அரசியல் விளையாடுவது வேதனை!

    ReplyDelete
  7. புரியவில்லைதான் ஐயா
    தம +1

    ReplyDelete
  8. அவர்கள் கண்ணீரும் தொடர்கதையாகிவிட்டது அய்யா...

    ReplyDelete
  9. கடிதம் எழுதுறேன்னு இந்த இண்டர்நெட் யுகத்தில் சொல்லி அரசியல் செய்யிறாங்களே...

    வேதனையான கவிதை ஐயா...

    ReplyDelete
  10. தொடர்ந்து கைது, கடிதம், விடுவிப்பு...மீண்டும் அதே..வேதனைதான்.

    ReplyDelete
  11. உணர்வுப் பூர்வமான வரிகள்.

    வேதனையைப் பறைசாற்றுகின்றன.

    தொடர்கிறேன் ஐயா.

    நன்றி.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...