Tuesday, April 19, 2016

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!


செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

வருகின்ற தேர்தலில்
தருகின்ற வாக்கினை-ஆய்ந்து
தருவீரா நீங்கள் தருவீரா!
புரிவீரா நீங்கள் புரிவீரா -இனி

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

ஏமாற்ற இலவசம்
என்பதே! உணர்ந்துடன் –பதவி
தாமற்ற தருவதே உணர்வீரா!
நாமற்ற யாதென உணர்வீரா- உடன்
செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

தரமில்லா கூட்டணி
தகவில்லா காட்சிகள் நமக்கு
வரமல்ல! சாபமே அறிவீரா!
நிறம்மாறும் பச்சேந்தி! புரிவீரா!-என

செய்வீரா ! நீங்கள் செய்வீரா!-செய்து
உய்வீரா நீங்கள் உய்வீரா!

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. ஐயாவின் வரிகள் அருமையே...!

    ReplyDelete
  2. 'உய்' 'உய்' என்று விசிலடித்துதான் பழகியிருக்கிறோம்!

    ReplyDelete
  3. அவ்வளவு தைரியம் இருந்தால்..... ஊழல்.கொள்ளையர்களிடம்“ ஏமாற வாய்ப்பே இருந்திருக்காதே அய்யா..

    ReplyDelete
  4. சிந்திப்பார்கள் என்று நம்புவோம் ஐயா! அருமையான கவிதை!

    ReplyDelete
  5. நண்பர் திரு. ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல்தான் இருக்கின்றோம் ஐயா... நல்ல வரிகள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  6. சாபம்தானய்யா, என்ன செய்வது? சூழல் அவ்வாறு ஆகிவிட்டது. இதிலிருந்து நாம் தப்பவேமுடியாதுபோலுள்ளது.

    ReplyDelete
  7. மக்கள் சிந்திக்கட்டும் ஐயா
    தம +1

    ReplyDelete
  8. செஞ்சுருவோம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...