Monday, May 1, 2017

உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து உரைத்திட்ட மேதினமே வருக உன்னை



உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து
உரைத்திட்ட மேதினமே வருக உன்னை
திலகமென வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க-எட்டு
திசையெங்கும் மங்காதுன் புகழே சூழ்க
நலமிகவே நாடெங்கும் வளமை ஓங்க-ஆட்சி
நல்லோர்கள் ஆளவர வறட்சி நீங்க
கலகமது இல்லாமல் அமைதி பூண- உலகம்
காணட்டும் போரின்றி ஒற்றுமை காண!


புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. அருமை மே தின வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  2. வாழ்க வாழ்க பாட்டாளி...

    ReplyDelete
  3. பழைய குருடி கதவைத் திறடி என்பதைப் போல எட்டு மணி நேர வேலை என்பது கானல் நீராய் ஆகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மே தினம் முன்னிலும் அதிகமாய் போற்றப் பட வேண்டும் :)

    ReplyDelete
  4. வேலையில் உள்ளவர்களுக்கே வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். வேலை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டாமா?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...