Showing posts with label மேதின வாழ்த்து கவிதை. Show all posts
Showing posts with label மேதின வாழ்த்து கவிதை. Show all posts

Monday, May 1, 2017

உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து உரைத்திட்ட மேதினமே வருக உன்னை



உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து
உரைத்திட்ட மேதினமே வருக உன்னை
திலகமென வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க-எட்டு
திசையெங்கும் மங்காதுன் புகழே சூழ்க
நலமிகவே நாடெங்கும் வளமை ஓங்க-ஆட்சி
நல்லோர்கள் ஆளவர வறட்சி நீங்க
கலகமது இல்லாமல் அமைதி பூண- உலகம்
காணட்டும் போரின்றி ஒற்றுமை காண!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...