அன்பு உறவுகளே!
வணக்கம்!
பதிவர்
சந்திப்பு விழா நடந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன!
விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது என்பதை நேரில்
கலந்து கொண்டவர்களும் .கண்டு
வந்தோர் வலைவழி பதிவுகளாக
பலரும் எழுதியதன்
வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள்!
இதற்கான
ஆயத்தப் பணிகளை கடந்த இரண்டு
திங்களாக திட்டமிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்
கூடி விவாதித்து,
ஒட்டுமொத்த விழாவின் அனைத்துக் குழுவினரையும் அமைத்தும், பணியாற்றிய சென்னை நகர இளைஞர்
படையின் ஒற்றுமையும் உயர்ந்த பண்பும்,வெறும் பாராட்டத் தக்கது மட்டுமல்ல! என்றென்றும் போற்றத் தக்கது என்றால் அது மிகையல்ல!
எதிர்
பலன் நோக்காது , கைமாறு கருதாது ,கடமை உணர்வோடு, கட்டுப் பாடாக கண்ணியத்தோடு அங்கும் , இங்கும் ஓடி விழாவன்று
அவர்கள் பணியாற்றிதைக் கண்டவர் பாராட்டினர் அதனைக் கேட்டு நான் உள்ளம் பூரித்துப்
போனேன்!
இப்படை
தோற்கின் எப்படை வெற்றி கொள்ளும் என்ற கேள்விக்கு
விடையாக நின்ற என் அன்பின்
இனிய தம்பிமார்களின் கரங்களைப்
பற்றி மூத்தவன் (வயதில்) என்ற முறையில்
என்நன்றியினை தெரிவித்துக்
கொள்வதோடு அவர்கள் வாழ்வாங்கு வாழ என் வாழ்த்தினையும் தெரிவித்துக்
கொள்கிறேன்
விழா தொய்வின்றி நடைபெற
உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் இருந்து நிதி அளித்து உதவிய அனைவருக்கும் நாங்கள்
நன்றி தெரிவிக்க கடமைப்
பட்டுள்ளோம்!
நன்றி! நன்றி! நன்றி!
மேலும்,
விழா சிறப்பாக நடைபெற
நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் போக்கு வரத்து
போன்ற தொல்லைகளை எல்லாம் கடந்தும் திரளாக வந்து கூடிய பதிவர்கள் அனைவருக்கும்
எங்கள் வணக்கத்தையும் வாழ்த்தையும்
தெரிவித்துக் கொள்கிறோம்
வாழ்க பதிவர் ! வளர்க அவர்தம் ஒற்றுமை!
புலவர் சா இராமாநுசம்

