Monday, June 27, 2011

பெண்கள் கூட்டமும் திரண்டனவே

        கண்ணுக் கெட்டா தூரம்வரை-தம்
          கரங்களில் மெழுகு விளக்கேந்தி
       விண்ணில் மின்னும் விண்மீனாய்-அலை
          வீச தரையோ ஒளிவானாய்
       எண்ணில் தமிழர் வந்தாரே-நல்
           இதய அஞ்சலி தந்தாரே
       பெண்கள் கூட்டமும் திரண்டனவே-சிங்கள
           பேய்வெறிக் கூட்டமும் மிரண்டனவே

       கட்சியை அங்கே  காண வில்லை-மாற்று
          கருத்தும்  அங்கே  காணவில்லை
       கட்சியைவென்றது இன உணர்வே-கண்ட
          காட்சிமுற்றும் தமிழ்  உணர்வே
       மெச்சி வளர்ப்போம் மேன்மேலும்-இந்த
           மேதினி காண வருநாளும்
       அச்சம் சிங்களர்  வாழ்வாகும்-இனி
           அடுத்தது அவர்கள் வீழ்வாகும்


       தோன்றி விட்டது விடிவெள்ளி-இனி
           தோற்க கயவர்கள் உலகெள்ளி
       சான்றே நேற்று கண்டோமே-புது
           சரித்திரம் படைத்துக் கொண்டோமே
       எத்தனை துயரம் பட்டாரே-துளியும்
            இரக்க மின்றி சுட்டாரே
       மொத்தமும் திருப்பி தருவோமே-வட்டியும
           முதலும் கொடுக்க வருவோமே

                 புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. இனி
    தோற்க கயவர்கள் உலகெள்ளி
    சான்றே நேற்று கண்டோமே// அற்புதமான வரிகள்..

    ReplyDelete
  2. //தோன்றி விட்டது விடிவெள்ளி-இனி
    தோற்க கயவர்கள் உலகெள்ளி//
    அருமை ஐயா!இது ஒரு நல்ல தொடக்கம்!

    ReplyDelete
  3. அன்பு தொப்புள்கொடி உறவுகளுக்கு இலங்கை தமிழனின் கடமை கலந்த நன்றிகள்

    ReplyDelete
  4. கட்சியும் அங்கே காணவில்லை-மாற்றுக்
    கருத்தும் அங்கே காணவில்லை என்ற ஒரு வரி
    நெஞ்சைத் தொட்டுப்போனது
    கவிஞர் வாக்கு பொன் வாக்காகட்டும்
    இனி தமிழகமே ஈழத் தமிழர் விஷயத்தில்
    இதுபோலவே ஆகட்டும்

    ReplyDelete
  5. // கட்சியைவென்றது இன உணர்வே-கண்ட
    காட்சிமுற்றும் தமிழ் உணர்வே
    மெச்சி வளர்ப்போம் மேன்மேலும்-இந்த
    மேதினி காண வருநாளும்///

    அமுதத் தமிழில்
    அற்புத கருத்துக்களை
    அள்ளி
    அளித்த விதம்
    அருமை ஐயா

    நின் தமிழ் கண்டேன்
    இன உணர்வு கொண்டேன்

    ReplyDelete
  6. //தோன்றி விட்டது விடிவெள்ளி//

    கேட்கவே மகிழ்ச்சியாய் உள்ளது.

    ReplyDelete
  7. மெரினாத் திடலில் இடம் பெற்ற, உணர்வெழுச்சி நிகழ்வை கண் கூடாகப் பார்த்தது போன்ற உணர்வை எனக்குத் தருகிறது உங்கள் கவிதை.

    கமராக் கவிஞராக எமக்கு ஓர் வர்ணனைக் கவியினைத் தந்திருக்கிறீங்க. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. அருமையான கவிதை அய்யா.. நன்றி மே 17 இயக்கம் சார்பாக..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...