Saturday, July 16, 2011

பழமொழிக் கவிதை

             மருமகள் உடைத்தால் பொன் குடமே-அதுவே
                மாமியார் உடைத்தால் மண் குடமே
             இருவருக் கிடையே வேற்று மையே-என்றும்
                ஏற்பட வந்ததாம் பழ மொழியே
             ஒருவர் விட்டுக் கொடுத் தாலே-வீட்டில்
                உலவும் அமைதி அத னாலே
             வருவோர் கண் டால் பாராட்டும்-அங்கே
                  வாரா  எண்ணு வீர்  போராட்டம்

             ஒத்துப் போவது உயர வென்றே-இருவர்
                   உணர்ந்தால் போதும் அது நன்றே
             சத்தாய் வளர்த் திடும் உள்ளத்தை-மேலும்
                   சாந்தமே திகழ்ந் திட இல்லத்தை
             வித்தே ஆகும ஒற்று மையே-எனில்
                   வேண்டா  மங்கே மற்ற வையே
            சித்தம் வைப்பீர் பெண் னினமே-என
                    செப்பிட செப்பிய தென் மனமே

                               புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. கருத்தான கவிதை அருமை ஐயா.

    ReplyDelete
  2. மருமகள் உடைத்தால் பொன் குடம்
    மாமியார் உடைத்தால் மண் குடம்

    என்னும் பழமொழியை அழகான கருத்தார்ந்த
    கவியாக்கித் தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

    தாங்கள் சொல்வது போல..
    ஒத்துப் போவது உயர்வென்று அவ்விருவரும்
    நினைக்கட்டும்.


    நன்றி.


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  3. கலாநேசன் said...

    நண்பரே!
    தங்கள் வருகைக்கு நன்றி
    மேலும் தங்கள் தளம் தட்டினால் திறக்க இயலா
    என்ற பதில்தான் வருகிறது
    கவனித்து ஆவன செய்ய வேண்டு
    கிறேன் நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அன்பரே
    அவ்வகம் வந்தேன் நான்
    இவ்வகம் வந்தீர் நீர்
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. தங்கத்தை மெருகேற்றி புது நகையாகத் தருவதுபோல்
    பழமொழியினை மெருகேற்றி
    புதுக் கவியாக்கித் தந்துள்ளீர்கள்
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஐயா தலைப்பை பார்த்து பல பழமொழிகள் எதிர்பார்த்தேன் ...
    ஒன்றே ஒன்று தானா...நல்ல கவிதை ..ஐயா நன்றி

    ஐயா பல பழமொழிகள் ஒரே கவிதையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி
    தாங்க ...படிக்க ஆவலாய் என்றும் நான் ...

    ReplyDelete
  7. //ஒருவர் விட்டுக் கொடுத் தாலே-வீட்டில்
    உலவும் அமைதி //
    அருமை! பழமொழி அடிப்படையில் ஒரு இனிய கவிதை!

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said...

    நன்றி! பித்தன் அவர்களே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. Ramani said

    நன்றி சகோ நன்றிபுலவர்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. /// வித்தே ஆகும ஒற்று மையே-எனில்
    வேண்டா மங்கே மற்ற வையே
    சித்தம் வைப்பீர் பெண் னினமே-என
    செப்பிட செப்பிய தென் மனமே////

    முத்தாய்ப்பான வரிகள்...
    அற்புதமான கவிதை....
    நன்றிகள் புலவரே.

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா, நகைச்சுவை ததும்பும் வன்ணம் பழமொழிக் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

    மருமகள் மாமியார் எள்ளல்...கவிதைக்கு அழகு சேர்க்கிறது.

    ReplyDelete
  12. ஐயா பழமொழியை வைத்து கவிதை எளிமையா சொல்லியிருக்கிங்க... நன்றி.

    ReplyDelete
  13. நன்றி ஐயா மாமியார் மருமகள் சண்டையை வைத்து இவர்கள் செய்யும் நகைசுவையை இரசிக்க முடிகிறதா.? இதில் வேறு நாடகங்கள் பெண்களை ஒருவித மன நோய் பிடித்தவர்கள்.. போல் காட்டுகின்றன..

     யோசித்து பாருங்கள் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம் எனது மனைவி எனது தங்கையை கொள்வதற்கு அடியாள் ஒருவரை அனுப்புகிறாளாம் இது நிசவாழ்கையில் எத்தனை மனிதருக்கு நடக்கும்..!

    உன்மையில் பெண்களின் பிரச்சனைக்கு பெண்கள்தான் காரணம் இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை.. எனது சிறு வயதில் அக்கா  ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறினால் உடனே ஆச்சி வந்துவிடுவா  பொம்புள பிள்ளை மரத்தில் ஏறுவதா நாளைக்கு கல்யாணம் கட்டி போறவள் மாமியார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று..!? 

    நானும் இன்று இரண்டு பையன்களுக்கு தகப்பன்.. பெண் பிள்ளைகள் இல்லையே என்று ஏங்கும் ஒரு சாதாரணன்..! பெண்கள் மீது  இந்த ஆணாதிக்க பார்வை மாற வேண்டும் பெண்களுடன் பிறக்கும் ஆண்களை பாருங்கள்.. இவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் பாசத்துடனேயே இருக்கிறார்கள்..!? ஐயா ஒரு தமிழ் புலவர் நானோ ஒரு காட்டான் எழுத்து பிழை இருந்தால் மன்னியுங்கள் என்னை..

    இந்த காட்டான் பிள்ளை பிடிக்கத்தான் வந்தான்(பதிவுக்கு ஆள் சேர்க்க)இடத்தை மாறி வந்து விட்டேன்..!? ஏனென்றாள் காட்டான் கோழியடித்து வைத்துள்ளான் புலவரிடம் கோழி சாப்பிட வாங்கோன்னு கேட்க வெக்கமாக இருக்கின்றது...!?
     என்றாலும் குழய படலையில் செருகி விட்டேன் ...!!?( ஐய்யா எங்கள் ஊரில் ஒரு சொந்தக்காரன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இல்லையென்றால் படலையில் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மிக சிறிய கொப்பை முறித்து செருகிவிடுவொம் வீட்டுக்காரர் வந்து அதை பார்த்தால் யார் வந்தது என பக்கத்து வீட்டில் விசாரிப்பார்.. நீங்கள் பக்கத்து வீட்டிற்கு போக வேண்டாம் நேரே காட்டானின் வீட்டிற்கு வாருங்கள் எனது படலை திறந்தே இருக்கிறது என்ன காட்டான் ஒரு அசைவ பிராணி...!?)

    ReplyDelete
  14. கவிதையும் கலக்குது காட்டான் இன் கருத்தும் கலக்குது

    ReplyDelete
  15. ரியாஸ் அஹமது said...

    தம்பீ
    உங்க அன்புக்கும் கட்டளைக்கும் நன்றி
    ஆனா கால‍அவ காசம் தேவை. மன்னிக்க.

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. நிரூபன் said...

    ஓடிஓடி செய்தி சேகரிக்கும் நிருபர்களை விட

    தேடிதேடி கருத்துரை வழங்கும் எங்கள்
    நிரூபன் தேனீ போன்றவர் வாழ்க வளமுடன்
    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. தமிழ் விரும்பி said...

    நன்றி நண்பரே நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. தமிழ்வாசி - Prakash said...

    வந்தது குறுகிய காலம்-உவகை
    தந்தது ஏராளம்
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. காட்டான் said...

    முதல் வருகை! வரவேற்பு!! கைகூப்பு!!!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கவி அழகன் said...
    தாமத வருகைக்கு
    தருவதில்தை நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...