Sunday, July 31, 2011

எம்மைப் பற்றி ஏதேனும

வார்ப்பு  இதழுக்கு நான எழுதிய வாழ்த்துக் கவிதை

எம்மைப் பற்றி ஏதேனும்-நீர்
எழுத விரும்பின் எழுதுமென
நம்மைப் பற்றி உலகறிய-வாய்ப்பு
நல்கிய வார்ப்பு குழுவுக்கே
செம்மைத் தமிழில் கைகூப்பி-நான்
செப்பிடும் வணக்கக் கவிதையிது
உம்மை என்றும போற்றிடுவோம்-எம்
உயிரின் உயிரென சாற்றிடுவோம்


வலைப்பூ தன்னில் வார்ப்பென்றே-தமிழ்
வளர்க்க நீரும் மிகநன்றே
தலைப்பூ தந்தீர் பாராட்ட-நல்
தமிழை வளர்த்து சீராட்ட
விலைப்பூ அல்ல முத்தணியே-கண்டோர்
வியக்க போற்றம் உம்பணியே
கலைப்பூ இதுவாம் கவிதைப்பூ-இளம்
கவிஞர் வளரத் தரும்வாய்பு


சொல்லைக்  கோர்த்து உருவாக்கி-தாம்
சொல்ல நினைத்ததை கருவாக்கி
எல்லை இல்லா இளங்கவிஞர்–இன்று
எழுதிட போற்றுவர் நல்லறிஞர்
தொல்லை மிகுந்ததே இதழ்பணியே-வார்ப்பு
தொடர்ந்து வருவதே தமிழ்பணியே
ஒல்லை வார்ப்பு வளர்ந்திடவே-நாம்
ஒன்றாய் அனைவரும் சேர்ந்திடுவோம்

17 comments :

  1. இனிய காலை வணக்கம் ஐயா,
    வார்ப்பு கவிதைத் தளம் பற்றிய பெருமைகளை, அழகு தமிழில்,
    மரபுக் கவியில்,
    தித்திக்கும் தீந் தமிழில்,
    வாழ்த்துக் கவிதையூடாகத் தந்திருக்கிறீங்க.

    //தொடர்ந்து வருவதே தமிழ்பணியே
    ஒல்லை வார்ப்பு வளர்ந்திடவே-நாம்
    ஒன்றாய் அனைவரும் சேர்ந்திடுவோம்//

    நாமும் அவர்களோடு சேர்ந்திடுவோம்.

    ReplyDelete
  2. நிரூபன் said


    முதல் வருகைக்கும் முத்து போன்ற கருத்துரைக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. முழுமையான ஒரு தமிழ் கவிதை
    அருமை ஐயா

    ReplyDelete
  4. கிராமத்து காக்கை said...

    அன்பரே!
    முத்தான முதல் வருகைத் தந்து
    உடன் வாழ்த்தும் வழங்கிய தங்களுக்கு
    நன்றி!வணக்கம்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. ஐயா இன்று என் வாழ்கையில் மறக்க முடியாத நாள்
    ஆம் உங்கள் பாராட்டு கிடைத்த நாள்
    எல்லாம் உங்கள் நல்ல தமிழ் வாசித்ததன் விளைவு தான்
    நன்றி நன்றி நன்றி ...

    ReplyDelete
  6. உங்கள் நல் வாக்கிற்கு
    வாக்களிக்க ஒரு வழியும் இல்லையே ஏன் ?
    ஒட்டுபட்டை இணைக்கவும்

    ReplyDelete
  7. மெய் சிலிர்க்கிறேன்
    --

    ReplyDelete
  8. சலங்கைகள் கட்டிய இரட்டை மாட்டு வண்டிப்பயணம் போல இதமானதொரு அழகிய நடை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //சொல்லைக் கோர்த்து உருவாக்கி-தாம்
    சொல்ல நினைத்ததை கருவாக்கி
    எல்லை இல்லா இளங்கவிஞர்–இன்று
    எழுதிட போற்றுவர் நல்லறிஞர்
    தொல்லை மிகுந்ததே இதழ்பணியே-வார்ப்பு
    தொடர்ந்து வருவதே தமிழ்பணியே
    ஒல்லை வார்ப்பு வளர்ந்திடவே-நாம்
    ஒன்றாய் அனைவரும் சேர்ந்திடுவோம்//

    அருமையாக கவிதையை தொகுத்த உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... ஒன்றாய் அனைவரும் சேர்ந்திடுவோம்... நன்றி ஐயா

    ReplyDelete
  10. ரியாஸ் அஹமது said...

    அன்புச் சகோதரா!
    நன்றி! நன்றி!
    எனக்கு ஓட்டுப் பட்டையும் தெரியாது. ஓட்டுப்
    போடவும் தெரியாது
    சொல்லப் போனால் கவிதை எழுதுவது
    மட்டுமே என் வேலை. என் பேரன் பத்துவயது
    நிரம்பாதவன், கவிதையை ஒழுங்கு படுத்தி
    வலையேற்றி வெளயிடும வெளியிட்டாளர்
    ஆவார். இனிமேல்தான் இதுபற்றி யோசிக்க வேண்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கவி அழகன் said...
    தம்பீ!
    நன்றி!
    காணவில்லை இரண்டு நாள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...

    நன்றி! ஐயா! நன்றி!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் கடமைப் பட்டுள்ளேன்
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. மாய உலகம் said...

    தவறாமல் வந்து கருத்துரைத் தருகின்றீர்
    ஆனால உங்கள் வலையை என்னால் படிக்க
    இயலவில்லை முன்பு சொன்னதைப் போல
    இரண்டு தளங்களிலும் தட்டினால் வருகிறது
    ஒன்றில் ஆடாது அசையாது மற்றொன்றில்
    நடுவில் கருத்த பட்டை வருகிறது

    காரடம் என்ன தெரியவில்லை
    எங்கே கோளாறு நான் என்ன செய்ய வேண்டும்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. அருமையான கவிதை அய்யா.
    அதென்ன இதழ்? சிற்றிதழா?

    ReplyDelete
  15. சிவகுமாரன் said...

    அன்புத் தம்பீ சிவகுமாருக்கு நன்றி!

    வார்ப்பும் ஒரு வலைப்பூ தான்.

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அருமையான மரபுக்கவிதை...

    Reverie
    http://reverienreality.blogspot.com/

    ReplyDelete
  17. you lines are simply super. i written some tamil kavithai in my blog.

    please check and give ur comments

    http://alanselvam.blogspot.com/

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...