Saturday, August 27, 2011

மே தினம்

     சென்ற மே தினத்துக்கு முன் ஈழ
        நினைவோடு இணைத்து வடித்த
                            கவிதை

விரைவில் வந்திடும் மே தினமே-ஈழ
விடுதலை வேண்டுது நம்மனமே
வரையிலா துயரமும் பட்டோமே-அரக்க
வடவரின் செயலால் கெட்டோமே
கரையில் நின்று அழைத் தாலும்-நம்
காதில் சத்தம் நுழைந் தாலும்
திரைகடல் நீந்தும் தூரமதான்-அங்கே
தினமும் மரண ஓலம்தான்

உழைப்பவர் போற்றும் மேதினமே-இவ்
உலகம் போற்றும் மேதினமே
பிழைப்பை வேண்டி உலகெங்கும-இன்று
பிரிந்த ஈழர்துயர் நீங்கும்
ஒருநாள்
தழைக்க ஈழம் தனிநாடாய்-ஈழத்
தமிழனை வாழ்த்த நனிஏடாய
அழைக்க வந்திடு மேதினமே-அதுவரை
அமைதி காணா எம்மனமே

புலவர் சா இராமாநுசம்

22 comments :

  1. ம்ம்..பல கதைகள் பேசுது கவிதை!

    ReplyDelete
  2. சரியான சமயத்தில் வந்த மே தின கவிதை ....அருமை !

    ReplyDelete
  3. ///உழைப்பவர் போற்றும் மேதினமே-இவ்
    உலகம் போற்றும் மேதினமே
    பிழைப்பை வேண்டி உலகெங்கும-இன்று
    பிரிந்த ஈழர்துயர் நீங்கும்
    ஒருநாள் ///

    அந்நாள் விரைவில் வர தினம் துதிப்போம் இறைவனை ...

    ReplyDelete
  4. கவிதை நல்லாயிருக்கு ஐயா.

    ReplyDelete
  5. //அரக்க வடவரின் செயலால் கெட்டோமே//

    மதிப்பிற்குரிய ஐயா,

    சரியாகச் சொன்னீர். எவ்வளவோ இழந்த பின்னும், எள்ளளவும் சொரணையின்றி இன்னும் தேசியம் பேசும் மங்குனி மாக்கள் இருக்கின்றாரே நம்மூரில்!

    (இக் கவிதை மேநாளிலேயே வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.)

    ReplyDelete
  6. உங்கள் தொலைபேசி எண் ramheartkannan@gmail.com முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  7. நல்ல கவிதை... பிந்தி வந்துள்ளது

    ReplyDelete
  8. தமிழ்மணம் 3



    ///ஒருநாள்
    தழைக்க ஈழம் தனிநாடாய்-ஈழத்
    தமிழனை வாழ்த்த நனிஏடாய///

    ஏட்டில் பதியவரும் எதிர்பார்ப்பு புலவர் ஐயா
    கவிதை அற்புதம் ஐயா.

    ReplyDelete
  9. இந்த கவிதை சொல்லும் கருத்துகள் ஏராளம் ஐயா...

    தொட்டுவிடும் தூரத்தில் தான் ஈழநாடு... அங்கு பிணந்தின்னி கழுகுகளாக நம் இனத்தை வெட்டி கொன்று ஆறா பசியுடன் திரிந்துக்கொண்டிருக்க நாம் மட்டும் இங்கே அமைதியுடன் இருக்க.....

    ஈழநாடு தனிநாடாய் மலரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.... அது இப்பவும் இருக்கலாம் இன்னும் கொஞ்சம் மாதங்கள் கழித்தும் இருக்கலாம்... ஆனால் ஈழ நாடு தனி நாடாகும் கண்டிப்பாக....

    கெக்கலித்தவர் எல்லோரும் வாயடைத்து நிற்பர் அப்போது.....

    இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்ற நிலையில் நம் மக்கள், ஆனால் நம்பிக்கையை மட்டும் இடைவிடாது மந்திரமாய் ஜெபித்து தன்னை அர்ப்பணிக்கிறார்கள் முழுமையாக போராட்டத்தில்....

    அன்பு நன்றிகள் ஐயா அருமையான கவிதைக்கு....

    ReplyDelete
  10. ஏக்கங்களும் ஆதங்கங்களும் எழுத்தில் தெரிகிறது. வலைகளில் புலம் பெயர்ந்த ஈழ மக்களின் குரல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நல்லது நடக்க வேண்டுவோம்.

    ReplyDelete
  11. தினமும் மரண ஓலம்தான்

    கவிதை படிக்கவே வேதனையாக இருக்கிறது.
    ஈழச்செய்திகளை திறக்கவே முடியவில்லை. மனசு தான்வவில்லை.

    ReplyDelete
  12. கவிதை சொல்லும் காட்சிகள் கண்ணீரை வரவழைக்க வைக்கின்றது அருமை!

    ReplyDelete
  13. மனதை நெகிழச் செய்யும் கவிதை..

    ReplyDelete
  14. நிச்சயம் தனிஈழம் அமையும் ஐயா..! தங்களது கவிதை நெகிழ வைக்கிறது. அருமை ஐயா..!

    ReplyDelete
  15. அதுவரை
    அமைதி காணா எம்மனமே!!

    ReplyDelete
  16. அருமை...

    ரெவெரி

    ReplyDelete
  17. தனிஈழம் நிச்சயம் அமையும் ஐயா ,கவிதை அருமை

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. உங்க கவிதை வலிக்குது அய்யா....துரோகிகளை விட்டு வைத்ததால் ஏற்ப்பட்ட வரலாற்று பிழை!

    ReplyDelete
  20. உழைப்பாளர் தினத்தில் சொன்ன கவிதை உரிமையைக் கொண்டு வந்து சேர்ப்பது திண்ணம்.

    ReplyDelete
  21. மே தினமன்றாவாது ஈழ விடுதலை கிடைக்க வேண்டும் எனும் உணர்வோடு கவி படைத்திருக்கிறீங்க.
    விரைவில் எமக்கொரு வழி பிறக்க வேண்டும் எனும் ஆசை நிறைவேறும் எனும் நம்பிக்கையோடு நடை போடுகின்றோம்,.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...