Thursday, September 15, 2011

இன்றென் பதிவு நூறாகும்

இன்றென் பதிவு நூறாகும்-என்
     இதயம் மறவாப் பேறாகும்
நன்றெனச் செல்லி நாள்தோறும்-கருத்து
    நல்கிட  உலகுள்  ஊர்தோறும்
குன்றென வளர்தீர் உறவுகளே-நீர்
    கொடுத்தீர் பறக்க சிறகுகளே
ஒன்றல போற்றி ஆயிரமே-உம்மை
   உரைத்திட வேண்டும் பாயிரமே

முடங்கிக் கிடந்தேன் மூலையிலே-இன்று
    முளைக்கும் விதையாய் வலையினிலே
தடமது  ஊன்றி நடக்கின்றேன்-முதுமை
     தடைபல தரினும் கடக்கின்றேன்
இடமது  எனக்கென  நல்லோரே-உம்
     இதயத்தில்  அளிப்பீர்  பல்லோரே
விடமது  தரினும் உண்பேனே-குறள்
    விளக்கிய  வழிசெலும்  பண்போனே

நன்றி மறப்பது  நன்றல்ல -பாடம்
    நடத்தி  அவ்வழி  நான்செல்ல
இன்றும் மறவா  திருக்கின்றேன்-அது
     எனக்கும்  பாடமாய்  மதிக்கின்றேன்
என்று  போகும் என்உயிரோ-நான்
     இருக்கும் வரையில் தமிழ்ப்பயிரே
ஒன்றென வளர்த்தது  வாழ்வேனே-தேவை
    உயிரெனில்  கொடுத்தும்  வீழ்வேனே

தனிமரம் அல்ல  நானின்றே-கற்ற
     தமிழ்வழித்  தேடி  தினம்சென்றே
நனிமரம் பெற்ற  தோப்பானேன்-வலை
     நல்லோர் துணைதரக்  காப்பானேன்
இனிதுயர் என்றும்  எனக்கில்லை-கவிதை
      இயற்ற  உண்டா  அதற்கெல்லை
பனித்துளி போல  உலெகங்கும்-அலையில்
       பரவியே  என்றும்  அவைதங்கும்

73 comments :

 1. ஆறு மாதங்களில் நூறு தரமான பதிவுகள்
  தருவது என்பதும் 77 பின்தொடர்பவர்களைப் பெறுவதும்
  வலையுலகில் மிகப் பெரும் சாதனையே
  தங்கள் புலமைத் திறனும் அன்பும் அதைச்
  சாதித்துக் காட்டியது என்றால் அது மிகையல்ல
  நூறு ஆயிரமாய் பெருக மன்மார்ந்த வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஐயா!

  சாதனைகள் தொடரட்டும்!

  சந்தத் தமிழ்க்கவிதைகள் பெருகட்டும்!

  ReplyDelete
 4. கவிப்பால் பருகவே தவிப்பால் வருகிறோம்
  கவிப்பாலோடு கருத்த முதமும் பருகுகிறோம்
  "என்குலம் என்றுன்னை தன்னிடம் ஒட்டிய
  மக்கட் பெருங் கடல்" என்று மனத்தால் போற்றியே
  தமிழ் அன்னை மடியின் மீது தவழ்ந்தே
  அண்ணா உன் தோள்மீதும் அமர்கிறோம்
  நூறாண்டு நோயில்லாமல் வாழ்ந்தே -இன்னும்
  தீம்பா சமைப்பீரே யாமும் தேம்பாமல் வேருவோமே.

  நன்றிகள் அண்ணா! நன்றிகள்!! நன்றிகள் பல!!!

  ReplyDelete
 5. நூறு ஆயிரமாகவும், பதினாயிரமாகவும் பெருக கடவது, வாழ்த்துக்கள் புலவரே...!!!

  ReplyDelete
 6. நெகிழ்த்தும் நற்கவிதை, ஐயா. நித்தமும் தமிழமுது புகட்டும் தங்களுக்கு எங்கள் அன்பே காணிக்கையாம். நல்ல ஆரோக்கியத்துடன் நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் நிறைய கவிதைகள் இயற்றி எங்களை மகிழ்விப்பீராக.

  ReplyDelete
 7. நூறுக்கும் வரப்போகும் நூறாயிரங்களுக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ஐயா ..பதிவுலகில் நான் கண்டவரை மரபு கவிதை வடிவில் கவி வடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்

  ReplyDelete
 9. இன்னும் பல நூறு படைப்புக்களை படைக்க என் வாழ்த்துக்கள் ஜயா.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஜயா.தொடர்ந்து உங்கள் பதிவுலக்ப்பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஆற்றின் கரையினில்
  ஊற்றின் நீராய்
  நூறெனக் கவி புனையீர்
  ஆறென ஓடும்
  சிந்தனை பாதையில்
  இன்னும் நூறாயிரம்
  படைத்திடுவீர்!!!

  அன்பன்
  மகேந்திரன்

  ReplyDelete
 12. முந்தா நாள்தான் வந்த மாதிரி இருக்குதே:) வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. Ramani said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. வேடந்தாங்கல் - கருன் *! said

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. சுந்தரா said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. நண்டு @நொரண்டு -ஈரோடு said


  நட்சத்திரப் பணியிடை
  வந்து வாழ்த்தினீர்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. தமிழ் விரும்பி said.

  கவிபாடி வாழ்த்திய
  கனிவான அண்ணனின் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. MANO நாஞ்சில் மனோ said


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. கீதா said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. அமைதிச்சாரல் said


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. கந்தசாமி. said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. துஷ்யந்தன் said..


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. K.s.s.Rajh said...


  முதல் வருகைக்கும்

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. மகேந்திரன் said...  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. ராஜ நடராஜன் said


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. ஐயா வாழ்த்துக்கள்,,,,,

  ReplyDelete
 27. தரம் வாய்ந்த நூறு பதிவுகள். அதுவும் ஆறு மாதங்களில். ஆஹா.. எந்தன் மனமார்ந்த பாராட்டுக்கள். ஐயா.

  ReplyDelete
 28. சதம் அடித்துச் சாதனை படைத்துவிட்டீர்கள்! தொடருங்கள் மேலும் உற்சாகத்துடன்!வாழ்த்துகள்!

  ReplyDelete
 29. ஆகுலன் said

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!தம்பீ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. வை.கோபாலகிருஷ்ணன் said


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!ஐயா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. சென்னை பித்தன் said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!ஐயா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் புலவரே..
  மிக்க மகிழ்ச்சி.

  தனிமரம் அல்ல நானின்றே-கற்ற
  தமிழ்வழித் தேடி தினம்சென்றே
  நனிமரம் பெற்ற தோப்பானேன்

  கேட்பதற்கே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
 33. கூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..

  ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..

  என் மனம் திறந்து எழுதிய கவிதை..

  127 உயிர்களின் கேள்விகளாக..

  “அடக்கம் செய்யவா அறிவியல்“

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

  காண அன்புடன் அழைக்கிறேன்.

  15 September 2011 18:58

  ReplyDelete
 34. முளைக்கும் விதையாய் வலையினிலே
  ஒரு இளைஞன் போல் உள்ள உங்கள் தன்னம்பிக்கை

  வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 35. நூறாவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் ஐயா....

  தரம் வாய்ந்த நூறு பதிவுகள் இப்படி இட மூலையில் முடங்கிகிடந்த என்னை உயிர்ப்பித்த வலைப்பூவில் இத்தனை நட்புகளை தேடிக்கொடுத்த வலைப்பூ நட்புக்கே என் இந்த கவிதை வரிகள் அர்ப்பணம்னு சொல்லாம சொன்ன கவிதை ஐயா இது....

  இத்தனை அன்புடன் தன்னை முழுமையாக நம்பிக்கையுடன் நிமிர வைத்த நட்பை உயர்வாக எழுதி அர்ப்பணிக்கும் உங்கள் வரிகள் அத்தனையும் சிறப்பு ஐயா...

  இறைவன் என்றும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன் ஐயா...

  ReplyDelete
 36. முனைவர்.இரா.குணசீலன் said...  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!முனைவரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 37. மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை.


  மனித உயிர் கொல்லும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுங்கள்.இல்லையெனில் உடனே உங்கள் இருவர் இல்லத்தையும் கூடன்குளத்துக்கு மாற்றுங்கள்.


  Take steps to close Koodankulam Nuclear Power Plant immediately to avoid another Chernobyl disaster.

  இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)


  http://pmindia.gov.in/feedback.htm
  cmcell@tn.gov.in

  ReplyDelete
 38. நூறாவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் ஐயா....Reverie

  ReplyDelete
 39. முனைவர்.இரா.குணசீலன் said


  வந்தேன் படித்தேன் கருத்துரை
  ஓட்டுடன் தந்தேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 40. கிராமத்து காக்கை said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 41. மஞ்சுபாஷிணி said...

  எப்போதும் தப்பாது நீண்ட
  கருத்துரையே வழங்கும்
  சகோதரிக்கி நன்றி நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 42. தனிமரம் அல்ல நானின்றே-கற்ற
  தமிழ்வழித் தேடி தினம்சென்றே
  நனிமரம் பெற்ற தோப்பானேன்-வலை
  நல்லோர் துணைதரக் காப்பானேன்

  மிக்க நன்றி ஐயா.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. id said

  அருமையான கருத்து நண்ப!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 44. id said


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 45. Rathnavel said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!ஐயா!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 46. நூறாவது பதிவிர்க்கு வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 47. அன்பிற்குரிய ஐயா,
  இனிய இரவு வணக்கங்கள்.
  உங்களைப் போன்ற புலமைமிக்க பெரியோர்களோடு,
  சிறியேனாகிய எனக்குப் பேச வேண்டும் எனும் ஆவல் எழுகிறது.

  உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்,
  என் மின்னஞ்சலுக்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தினைத் தாருங்கள்.

  நான் அழைப்பினை மேற்கொள்கிறேன்.

  ReplyDelete
 48. எனது மின்னஞ்சல்:
  nirupan.blogger@gmail.com

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
 50. மரபில் கவி படைத்து வலையில்
  மனங்கள் பலவற்றை கொள்ளையிடும் வேந்தே
  விரைவில் மரபும் மண்ணுள் புதைந்து
  விழ்ச்சி கண்டு விடும் என்றோரின்
  விரசப் பேச்சதனை இல்லா தொழிக்கும்
  விருத்தக் கவியே, எம் விழியை
  உரசவல்ல ஈழப் புரட்சிக் கவிதையினை
  உணர்ச்சிப் பெருக்கோடு தரும் தமிழே!

  நீர் வாழ்க! தொடர்ந்தும் பல பதிவுகளால்
  எமக்கு இனிய மரபுச் சுவை தருக!

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள் ஐயா

  தாங்கள் தொடர்ந்து பல்லாண்டுகள் எழுத மனமாற வாழ்த்துகிறேன்

  நலம் நாடும்
  சம்பத்குமார்

  ReplyDelete
 52. M.R said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 53. நிரூபன் said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 54. சம்பத்குமார் said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 55. வாழ்த்துக்கள் ஐயா இலமியாக்கும் உங்கல்கவிதை மனதை இனிமியாக்கும் உங்கள் கவிதை புதுமை படைக்கும் உங்கள் கவிதை எளிமையான உங்கள் கவிதை சிரிமையான நாங்கள் எல்லாம் பெருமை கொன்னது படிக்கிறோம் வாழ்த்துகின்றோம்

  எந்த விசயமாய் இருந்தாலும் கவிதையில் தருவதால் உங்களை வலை உலக கவி வள்ளல் என்ற பட்டப்பெயரை வழங்கிகின்றோம்

  ReplyDelete
 56. கவி அழகன் said...  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!தம்பீ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 57. ஐயா!
  இன்னும் பல நூறு படைத்து
  கவிச்சாறு பிழிந்து
  எங்கள் இதயங்களை நனைக்க
  வாழ்த்துக்கள்!
  உங்களை பின் தொடர்வதையே பாக்கியமாக கருதுகிறேன்!

  ReplyDelete
 58. கோகுல் said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!தம்பீ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 59. தனிமரம் அல்ல நானின்றே-கற்ற
  தமிழ்வழித் தேடி தினம்சென்றே
  நனிமரம் பெற்ற தோப்பானேன்-வலை
  நல்லோர் துணைதரக் காப்பானேன்
  இனிதுயர் என்றும் எனக்கில்லை-கவிதை
  இயற்ற உண்டா அதற்கெல்லை
  பனித்துளி போல உலெகங்கும்-அலையில்
  பரவியே என்றும் அவைதங்கும்

  வாழ்த்துக்கள் ஐயா ..நிட்சயமாக உங்கள் படைப்புகள்
  பலரது மனதையும் கவர்ந்து பலநூறு ஆண்டுகள் வாழும் .நூறாவது பதிப்புக்கு வாழ்த்துச் சொல்லும் அனைவரும் இன்னும் பல நூறு பதிப்புகளிற்கு கருத்திடும் வாய்ப்புகள்
  மேமேலும் தொடரட்டும் ........................................................
  நன்றி ஐயா பகிர்வுக்கு .

  ReplyDelete
 60. அம்பாளடியாள் said...


  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 61. அம்பாளடியாள் said


  ஒட்டளிப்புக்கு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 62. யானைகுட்டி @ ஞானேந்திரன்

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 63. மன்னித்துக்கொள்ளுங்களய்யா தாமதமான வருகைக்கு  100 கவிதைகள் நினைத்து பார்க மலைப்பாய் இருக்கின்றது.. வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 64. சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 65. ’கவிப்பேரரசு’
  வைரமுத்து சொல்லிய,

  எட்டு எட்டை
  எட்டி விட்டு - பின்னும்
  ஈரெட்டையும் எட்டி- இன்னும்,
  மூவெட்டில் முழுமையைக் காணவிருக்கும்
  புலவர் ஐயா,

  நீர் பா க்களில்
  நூறை எட்டியது எனக்கு
  வியப்பளிக்கவில்லை.

  அகவையில்
  பத்து எட்டை எட்டிவிட்டு -இம்
  முது இளமையில் ஓயாது
  முத்து முத்தாய் கவிபாடும் -உம்
  ஆற்றல் என்னை
  வியப்புக்குள்ளாக்குகின்றது...!

  இந்நூறு பாக்களுக்காய்
  வாழ்த்தப்போவதில்லை நான்.
  இன்னும்
  நூறுநூறு பாக்கள் பூக்க
  வாழ்த்துகிறேன் நான்!

  ReplyDelete
 66. நூறாண்டு கடந்து
  நூற்க வேண்டும் பாக்களை

  உம்தமிழ் நுகர்ந்து
  உவகை கொள்ள வேண்டும்

  ReplyDelete
 67. காட்டான் said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 68. தமிழ்வாசி - Prakash said

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 69. சத்ரியன் said

  // அகவையில்
  பத்து எட்டை எட்டிவிட்டு -இம்
  முது இளமையில் ஓயாது
  முத்து முத்தாய் கவிபாடும் -உம்
  ஆற்றல் என்னை
  வியப்புக்குள்ளாக்குகின்றது//

  ஆம் மகனே!
  விருந்து உண்ணும் வயதில்லை-நாளும்
  விடுமா வேதனை நோய்தொல்லை
  மருந்தும் உணவா போனாலும்-நான்
  மனத்தால் இளைஞன்! ஆனாலும்
  இருந்தே எழுதித் வருகின்றேன்-தினம்
  இயன்றதை வலைவழி தருகின்றேன்
  வருந்த எனக்கென ஏதுமில்லை-இந்த
  வலைதரும் உறவுக்கு சேதமிலை
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 70. அ. வேல்முருகன் said...

  அன்பரே!

  உங்கள் அன்பான வரவுக்கும்
  வாழ்த்துக்கும் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...