Friday, September 16, 2011

அண்ணா வழியில் ஆள்வோரே

பற்றி எரியுது கூடங்குளம்-ஆய்ந்து
    பாரா மத்தியில் ஆளுமினம்
சற்றும் அதனை எண்ணாமே-பலர்
    சாகும் வரையில் உண்ணாமே
முற்ற விடுவது முறைதானா-காந்தி
    முறைப்படி அறப்போர் குறைதானா
கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
    காட்டியும் புத்தி வாராதா

கேளாக் காதாய் செவிமூட-வரும்
    கேட்டைச் சொல்லியும் வாய்மூட
வாளாய் இருப்பது நன்றல்ல-இதை
    வளர்ந்த நாடுகள் பலசொல்ல
நாளாய் பயந்து அங்குள்ளோர்-இன்று
    நடத்தும் போரில் பங்குள்ளார்
தாளாத் துயரில் தவிக்கின்றார்-மகளிர்
    தரையிலும் துவண்டு கிடக்கின்றார்

உண்ணா விரதம் இருப்பதென்ன-தம்
    உடலை வருத்தி கொள்வதற்கா
அண்ணா வழியில் ஆள்வோரே-இதில்
    அலட்சியம் வேண்டாம் மாள்வாரே
கண்ணா மூச்சி விளையாட்டா-வழி
    காண்டே உடனதைக் களையாட்டா
மண்ணே ஆகும் சுடுகாடே-பெரும்
    மக்கள் திரண்டால் வரும்கேடே

மத்திய மாநில அரசுகளே-அந்த
    மக்கள் உயிரைக் காப்பீரே
கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
    காலத்தை வீணில் கடத்தாதீர்
உத்மர் காந்தி அறவழியே—இன்று
    உள்ளவர் மனதைப் பிறவழியே
சித்தமே செல்ல விடுவீரா-உம்
    செயலால் நீரே கெடுவீரா

51 comments :

 1. விரைவில் நல்ல முடிவு வர வேண்டும்.நல்ல கவிதை.

  ReplyDelete
 2. //மத்திய மாநில அரசுகளே-அந்த
  மக்கள் உயிரைக் காப்பீரே
  கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
  காலத்தை வீணில் கடத்தாதீர்//

  சீக்கிரம் அவர்களின் காதை சென்றடைந்து போரட்டத்திற்கு ஓர் வெற்றி கிடைக்கட்டும் ஐயா

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 3. உத்மர் காந்தி அறவழியே—இன்று
  உள்ளவர் மனதைப் பிறவழியே
  சித்தமே செல்ல விடுவீரா-உம்
  செயலால் நீரே கெடுவீரா

  மிகச் சரியான அறிவுரை
  ஆளுவாரோரின் காதில் ஏறுமா
  அரசு கோடிக்கால் கொண்ட பூதமென்றாலும்
  அதன் காது எப்போதுமே செவிடல்லவா
  த.ம 3

  ReplyDelete
 4. என்ன ஐயா சவுக்கியமா

  எப்படி உங்களால முடியுது இப்படி

  எல்லா விடயத்தையும் கவிதையிலேயே சொல்லிரிங்க

  ReplyDelete
 5. போராட்டம் வெற்றி பெரும்...வீரியக்கவிதை அய்யா...ரெவரி...

  ReplyDelete
 6. வணக்கமையா அணுமின் நிலையத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாய் உங்கள் கவிதை கைகொடுக்கின்றது.. நூறாவது பதிவுக்கு என்னால் பின்னூட்டமிடமுடியவில்லை இப்போது அக்கவிதையையும் பின்னூட்டங்களையும் வாசித்தேன் அப்பப்பா உங்கள் மீது எவ்வளவு பேர் பாசம் வைத்துள்ளார்கள்.. அதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. புலவரே கடும் போடா போடால்ல போட்டுருக்கீங்க அருமை, அண்ணா வழியில் ஆள்வோரே கவனிக்கவும், அப்புறமா புலவரை அறம் பாட வச்சிராதீங்க அழிஞ்சி போவீங்க...

  ReplyDelete
 8. சித்தம் மயங்காது
  சிந்தித்து செயல்படுவீரே.....

  சிந்திக்கட்டும் செயலாற்றுவோர்....

  ReplyDelete
 9. கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
  காலத்தை வீணில் கடத்தாதீர்


  காலத்துக்கு ஏற்ற கவிதை

  மிக அழகாகச் சொன்னீர்கள் புலவரே..

  காலம் பதில் சொல்லட்டும்!!
  காத்திருப்போம்!!

  ReplyDelete
 10. 101வது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா...

  நல்ல முடிவு பிறக்கட்டும்.

  ReplyDelete
 11. சென்னை பித்தன் said

  விரைவில் நல்ல முடிவு வர வேண்டும்.நல்ல கவிதை

  தங்கள் வாக்கு பலிக்கட்டு ஐயா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. நண்டு @நொரண்டு -ஈரோடு sa


  நன்றி நண்பரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. Rathnavel said...


  நன்றிஐயா

  புலவர் சா இராமாநுசம்

  !

  ReplyDelete
 14. சம்பத்குமார் said...

  சீக்கிரம் அவர்களின் காதை சென்றடைந்து போரட்டத்திற்கு ஓர் வெற்றி கிடைக்கட்டும் ஐயா


  நன்றிஐயா! நல்லது நடகும்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. Ramani said...

  மிகச் சரியான அறிவுரை
  ஆளுவாரோரின் காதில் ஏறுமா
  அரசு கோடிக்கால் கொண்ட பூதமென்றாலும்
  அதன் காது எப்போதுமே செவிடல்லவா

  உண்மைதான் சகோ!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. கவி அழகன் said...

  எப்படி உங்களால முடியுது இப்படி

  எல்லா விடயத்தையும் கவிதையிலேயே சொல்லிரிங்க


  தமிழ் தந்த பேறு தம்பீ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. காட்டான் said...

  இப்போது அக்கவிதையையும் பின்னூட்டங்களையும் வாசித்தேன் அப்பப்பா உங்கள் மீது எவ்வளவு பேர் பாசம் வைத்துள்ளார்கள்.. அதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்

  நன்றி! நன்றி! நன்றி!

  தமிழ் தந்த பேறு காட்டான்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. MANO நாஞ்சில் மனோ said...

  நன்றி! மனோ!

  தாங்கள் இது பற்றி எழுதிய பதிவை
  படித்தேன் பார்த்தீரா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. மகேந்திரன் said

  சிந்திக்கட்டும் செயலாற்றுவோர்

  நன்றி! சகோ!

  இக்கவிதைக்கு கருவே உங்கள் கவிதைதானே
  நான் அதைப் படித்து விட்டு கருத்துரை
  எழுதிய கவிதை தானே காரணம்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. முனைவர்.இரா.குணசீலன் said

  காலம் பதில் சொல்லட்டும்!!
  காத்திருப்போம்!!

  போராட்டம் வெற்றி பெறும்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. செங்கோவி said...

  வாழ்த்துக்கும் வருகைக்கும்
  நன்றி!

  நல்ல முடிவு பிறக்கட்டும் என்ற தங்கள்
  நம்பிக்கை வீண் போகாது

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. கத்தியின் மீது நடக்காதீர்கள்!
  புத்தியில் உரைக்கும் படி சொன்னீர்கள்!
  தங்கள் பங்களிப்பிற்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 23. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 24. கோகுல் said...

  நன்றி கோகுல் அவர்களே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. மாய உலகம் said

  மிக்க நன்றி! மாய அவர்களே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. தமிழ்வாசி - Prakash said...


  நன்றி சகோ!

  வலை வந்தேன் கருத்துரைத் தந்தேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. //கற்றமே பாடம் போதாதா-ஜப்பான்
  காட்டியும் புத்தி வாராதா//

  நடந்ததை அறிந்தும், ஆபத்தை உணராத
  ஆள்வோரின் செவிப்பறை கிழியும் வரை
  குன்றக்கூடாது நம் முழக்க ஒலி

  ReplyDelete
 28. எழுச்சி மிகு கவிதை

  போராட்டம் வெற்றி பெறட்டும்.

  பகிர்வுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 29. சத்ரியன் said

  நடந்ததை அறிந்தும், ஆபத்தை உணராத
  ஆள்வோரின் செவிப்பறை கிழியும் வரை
  குன்றக்கூடாது நம் முழக்க ஒலி

  பதிவுலகம் அளவிற்கு மற்ற தெலைக் காட்சிகள்
  செய்தித் தாள்கள் இதற்கு பெரிதாக முக்கியத்துவம்
  தரவில்லை என்பது வருந்தத் தக்கது

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. M.R said...


  போராட்டம் வெற்றி பெறட்டும் என்ற
  தங்கள் ஆசை நிறைவேற வேண்டும் நம் பாலா
  அவர்களும் கலந்து கொண்டுள்ளார்
  மனம் பதட்டமாக உள்ளது சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. போராட்டம் நிச்சயம் வெற்றியை பெறும்

  ReplyDelete
 32. ஐயா எனது இன்றைய பதிவில் இப்பதிவிற்கு இணைப்பு கொடுத்துள்ளேன்

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 33. வைரை சதிஷ் said...

  முதல் வருகைக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 34. சம்பத்குமார் said.

  வலை வந்து பார்த்தேன்!
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 35. மத்திய மாநில அரசுகளே-அந்த
  மக்கள் உயிரைக் காப்பீரே
  கத்தியின் மேலே நடக்காதீர்-மேலும்
  காலத்தை வீணில் கடத்தாதீர்//
  மிக சிறப்பான விற்கள் ஐயா உளம் நிறைந்த பாராட்டுகள் இந்த அரசுகள் ஆட்சி செய்வது மக்களுக்கா அல்லது வேருயாருக்காக என்பதுதான் புரியவில்லை சப்பான் முதற்கொண்டு எல்லா நாடுகளுமே இதன் தாக்கத்தினால் பதிப்பு அடைந்து உள்ளது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மைகள் ஆகும் இடுக்கைக்கு பாராட்டுகள் நன்றி ...

  ReplyDelete
 36. போராட்டம் நிச்சயம் வெல்லும் .
  வாய்மையே  வெல்லம்.... 

  ReplyDelete
 37. கேளாக் காதாய் செவிமூட-வரும்
  கேட்டைச் சொல்லியும் வாய்மூட
  வாளாய் இருப்பது நன்றல்ல-இதை
  வளர்ந்த நாடுகள் பலசொல்ல//

  ஒவ்வொருவரும் வாய்மூடி வாளாதிருந்தால், நடப்பவை என்றும் நடந்து கொண்டே இருக்கும். சொல்லவேண்டியதை, சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிடல் மனிதன் கடமை. அதை தெளிவுறக் கவிதையில் தெளிவுபடுத்திய கவி வித்தகரே வாழ்க! வாழ்த்துகள். வாய்மூடி மௌனிகளை வாழ்த்தும் உலகு. ஆனால், வாழும் வழி உரக்கச் சொல்பவரைத் தூற்றும் உலகு. ஆனால், யாமொரு குழமாய் இணைந்துள்ளோம். உங்கள் எழுத்துக்களை வாழ்த்த என்றும் தொடர்ந்திருப்போம். வார்த்தைகளுக்கு அடிபணிவோம்.

  ReplyDelete
 38. உணர்வுகளைத் தட்டியெழுப்பும் அற்புதக் கவிதை. மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்படுமா? ஆள்வோர் சிந்திப்பாரா?

  ReplyDelete
 39. மாலதி said...

  நன்றி!மகளே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 40. விஜயன் said...


  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 41. suryajeeva said...


  வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 42. சந்திரகௌரி said

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 43. கீதா said...

  வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 44. suryajeeva said...


  வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்
  நன்றி!சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 45. வணக்கம் ஐயா
  கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
  வர முடியலை...

  எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

  மன்னிக்க வேண்டும்!

  ReplyDelete
 46. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலான மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியினையும், பாராமுகமாய் இருக்கும் அரசின் நிலையினையும் உரைத்து நிற்கிறது இக் கவிதை..

  அரசின் மனம் இம் மக்களுக்காய் மாறாதா எனும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தி நிற்கிறது இக் கவிதை.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...