Tuesday, September 27, 2011

தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு



திங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
புத்தாண்டின் முதல்நாளே பொங்கல்
தங்கமாய் வந்திடும் திங்கள்-வாசல்
பொங்கலும் இடுவோமே நாங்கள்

புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி

புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்கக்  கத்தி
சத்தமும் பொங்கலோ என்றே-தர
சங்கீத இனிமையை நன்றே

மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்

கொல்லும பசிப்பிணி போக்கும்-உழவன்
குறையென்ன கண்டதை நீக்கும்
ஒல்லும் வகையவன்  வாழ -அரசு
உடன்டி எண்ணுமா சூழ

குறிப்பு- சிலரது வினாவிற்குப் என்னுடைய
                                   பதில்!
                                              
                       

40 comments :

  1. அண்ணே கலக்கல்!

    ReplyDelete
  2. விக்கியுலகம் said

    நன்றி!சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. அசத்தல் புலவரே, வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  4. நெய்யில் வறுத்த முந்திரியுடன், ஏலக்காய் மணம் கமழ தித்திப்பான சர்க்கரைப்பொங்கல் போல இனிக்குதே, இந்தத் தங்கள் கவிதையும்.

    சென்ற பொங்கலுக்கு நான் வெளியிட்டதொரு கவிதை:

    //செங்கரும்புச் சாறெடுத்து இதழினிலே தேக்கி!
    சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி!!
    மதமதத்த வளையணிந்த கைகள் வீசி!!!

    மங்களமாம் “தை” என்னும் மங்கை வருவாள்!
    பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள்!!//

    vgk

    ReplyDelete
  5. MANO நாஞ்சில் மனோ said...


    நன்றி!சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said

    // மங்களமாம் “தை” என்னும் மங்கை வருவாள்!
    பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள்//

    கவிதை மிகவும் அருமை!

    வை.கோ நீங்கள் கதைக்கோ மட்டுமல்ல
    கவிதை எழுதினால் கவிக்கோவும் ஆகலாம்
    ஏதோ பாரட்ட எழுதியதாக எண்ணாதீர்
    உண்மை!

    நன்றி!வை.கோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. சென்னை பித்தன் said

    நன்றி பித்தரே!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. இருக்கிறவங்க கொண்டாடுறீங்க,
    இல்லாதவன் வேடிக்கை பார்க்கிறேன்

    ReplyDelete
  9. தமிழர் திருநாளின் தனிச் சிறப்புக்களையும், தை முதல் நாளே தமிழர் திருநாள் எனும் பெருமை நிறைந்த செய்தியினையும் ஆணித்தரமாகச் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  10. suryajeeva said...

    எல்லோரும் கொண்டாடும் திருநாள்தான்
    உழவர்த் திருநாள்!
    இதில் இருப்பவர் இல்லாதவர் என்ற வேறுபாடு
    இல்லை நண்பரே

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. நிரூபன் said...

    நன்றி!சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. படிக்கப் படிக்க இனிக்கும் பாடல் ... என்னைப் போன்ற மரபார்வலர்களுக்கு உங்களது படைப்புக்கள் பெருவிருந்து

    ReplyDelete
  13. தமிழர்தம் திருநாள் தைத்திருநாள். ஆதுவே தமிழ்ப் புத்தாண்டு. ஐயா அருமையான கவிதை. நெஞ்சம் நிறைந்தது.

    ReplyDelete
  14. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said

    அன்பரே! வணக்கம்
    தங்களின் முதல் வருகைக்கும்
    வாழத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. கா ந கல்யாணசுந்தரம் said...

    அன்பரே! வணக்கம்
    தங்களின் முதல் வருகைக்கும்
    வாழத்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. தைப்பொங்கல் இப்பவே வந்தது போல இருக்கு ஐயா. கவிதை அருமை.

    ReplyDelete
  17. காந்தி பனங்கூர் said

    நன்றி!சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. தை திருநாள் தமிழர் நாளாம், அதுவே நமக்கு தமிழ் புத்தாண்டாம். என்ற கருத்தை தாங்கி நிற்கிறது உங்கள் கவிதை.

    ReplyDelete
  19. தமிழ்வாசி - Prakash said

    ஆம்!நண்பரே!
    அதுதான் என் கருத்து.

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. வணக்கம் ஜயா இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் இனி தொடர்ந்து வருவேன்

    ReplyDelete
  21. K.s.s.Rajh said


    அன்ப!

    தங்களின் முதல் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. உழவுதான் பழமையான தொழில்
    அவர்களைப் பொறுத்தே ஆண்டின் துவக்கம்
    இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது
    என்பதே எனது கருத்தும்
    அருமையான இனிக்கும் கவிதையாக
    இந்தச் செய்தியைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    த.ம 5

    ReplyDelete
  23. கவிதை மிகவும் அருமை புலவரே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. திங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
    புத்தாண்டின் முதல்நாளே !

    திங்களாம் தைமாதம் எங்கள்-தமிழ்
    புத்தாண்டின் முதல்நாளே !

    அருமை புலவரே..

    ReplyDelete
  25. எனக்கு ஆடி முதல்நாளே புத்தாண்டு, உங்கள் புத்தாண்டை நீங்கள் கொண்டாடுங்கள், என் புத்தாண்டை நான் கொண்டாடுவேன்.

    ReplyDelete
  26. Ramani said...

    தேடிப் பார்தேன் வரவில்லை
    தினமும் வருவீர் ஏனில்லை
    வாடிப் போனேன் அறிவீரா
    வழக்கமில் வழக்கம் புரிவீரா
    கூடும் மகிழ்வே வந்தீரே
    குருவேன மதிப்பும் தந்தீரே
    பாடும் குயிலாய் இருப்போமே
    பறக்கிரு சிறகென பறப்போமே

    நன்றி சகோ!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ரெவெரி said...

    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. முனைவர்.இரா.குணசீலன் said...

    தங்கள்
    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. வெங்கட் நாகராஜ் said

    தங்கள்
    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. ராவணன் said

    நன்றி!இராவணன் அவர்களே
    உங்கள் விருப்பம்!உங்கள் உரிமை!
    யாரும் தடையில்லை

    தங்கள்
    வருகைக்கு நன்றி


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
    மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
    காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
    கைபட பெற்றதாம் வளமும்
    //
    இதனை நான் நன்கறிவேன்!
    உழவுக்குடும்பதிலிருந்து வந்தவன் நான்!
    என் தாத்தா இன்னமும் உழுகிறார்!

    உங்கள் பதிலாக வந்த கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
  32. ""கொல்லும பசிப்பிணி போக்கும்-உழவன்
    குறையென்ன கண்டதை நீக்கும்
    ஒல்லும் வகையவன் வாழ -அரசு
    உடன்டி எண்ணுமா சூழ""

    --வரிகள் மிகவும் பிடித்திருந்தது..
    நன்றி

    ReplyDelete
  33. கோகுல் said...

    தங்கள்
    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. சின்னதூரல் said...


    தங்கள்
    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. தமிழர் திருநாளில் உழவர்தம் பெருமை உரைத்துப் புனைந்த தங்கள் கவிதையும் இனிக்கிறது, சர்க்கரைப் பொங்கலைப் போலவே. பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  36. கீதா said..

    தங்கள்
    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  37. கீதா said..

    தங்கள்
    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  38. தை திங்கள் பெருமையை சொல்லும்போதே உழவர்களின் துன்பங்களையும் சொல்லி அதை அரசு நீங்க வழி செய்யுமா என்று முடித்தது மிக சிறப்பு ஐயா....

    எப்போதும் எல்லோர் பற்றியுமே சிந்திக்கிறீங்க ஐயா... உங்க மனசு எப்போதுமே இப்படி கருணை நிறைந்ததா இருக்கேன்னு வியந்து பார்த்திருக்கிறேன்.... நேரில் உங்களை சந்திக்கமுடிந்தால் கண்டிப்பாக உங்களிடம் ஆசி பெற வருவேன் ஐயா.....

    அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...