Monday, October 3, 2011

நல்லோர் மட்டுமே ஆளட்டும்



       மனித நேயம் காணவில்லை-என்ற
          மனக்குறை மாற  வழியில்லை
       புனிதர் யாரும் காணவில்லை-நல்
          புத்தியைக் காணவும்  வழியில்லை
       கனிவை சொல்லில் காணவில்லை-என்ன
          காரணம் அறியவும் வழியில்லை
       இனிதாய் நடப்பார் காணவில்லை-நல்
          இதயமே அந்தோ காணவில்லை
      
        உலகம் எங்கே போகிறதோ-என
          உள்ளம் பற்றியே வேகிறதே
       கலகம் எங்கும் நடக்கிறதே-வீண்
          காலம் இப்படி கடக்கிறதே
       திலகம் புத்தர் காந்தியென-இந்து
          தேசத்தில் பிறந்தது போலியென
       புலரும் பொழுது ஒவ்வொன்றும்-தினம்
          புகர மாறுமா இதுவென்றும்
     
      சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
        சமயப்பூசல் குறைய வில்லை
      நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
        நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்
      பீதிவாழ்வே தொடர் கதையாய்-எதிர்த்து
        பேசினால் அந்தோ அடிஉதையாய்
      வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-என்ற
        வேதனை தானே மிஞ்சுவதே
    
     என்று மாறும் இந்நிலையே-நம்
        இந்திய நாட்டின் தன்நிலையே
     இன்றுப் போன்றே இருந்திடுமா-தன்
        இழிநிலை கண்டு திருந்திடுமா
     சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
        செம்மை வழியில் நடக்கட்டும்
     நன்றென உலகம் போற்றட்டும்-மிக
        நல்லோர் மட்டுமே ஆளட்டும்

              புலவர் சா இராமாநுசம்
         

    

55 comments :

  1. //சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
    செம்மை வழியில் நடக்கட்டும்
    நன்றென உலகம் போற்றட்டும்-மிக
    நல்லோர் மட்டுமே ஆளட்டும்//

    நடந்தவைகள் கடந்தவைகளாகட்டும்

    நடப்பவைகள் நல்லவைகளாகட்டும்.

    ஒவ்வொரு கட்சிசாராத வாக்காளரின் மனதை கவிதை எடுத்துச் சொல்கிறது ஐயா..

    நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. மழையில் நனைந்த கோழி போல் சுருங்கி விட்டது உலகம்..
    துடிக்க மறந்து விட்ட நிலையில் இரும்பு துண்டமாய் இதயம்...
    புதிய பொருளாதார கொள்கையுடன் குருதி உறிஞ்சும் அவலம்...
    நம் கைகள் அனைத்தும் இணைந்து விட்டால் விடியல் என்பது சுலபம்...

    ReplyDelete
  3. நல்லோர் ஆளட்டும் என்றால் ஒரு காமராஜரோ, கக்கனோ'தான் பிறந்துவரனும் புலவரே....

    உங்கள் கவிதை நன்று....!!!!

    ReplyDelete
  4. த.ம.3
    யதார்த்தம்.அருமை.

    ReplyDelete
  5. நல்லோர் என்பதைக்காட்டிலும்...திறமை உள்ளோர் மட்டும் தான் இப்போதைய தேவை புலவரே..
    கவிதை அருமை..

    ReplyDelete
  6. சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
    செம்மை வழியில் நடக்கட்டும்
    நன்றென உலகம் போற்றட்டும்-மிக
    நல்லோர் மட்டுமே ஆளட்டும்

    நல்லதே நடக்கட்டும் என எதிர்பார்ப்போம்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  7. நல்லோர் மட்டும் ஆளட்டும்
    என நினைத்து உறங்கினேன்.
    கனவில்
    ஆள்வோரேல்லாம் வந்து மிரட்டினர்
    அப்படியெல்லாம் விட்டு விடுவோமா என்று?

    ReplyDelete
  8. சம்பத்குமார் said.

    விரிவான விளக்கம்! கூறி
    கருத்துரை வழங்கினீர்
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. suryajeeva

    விரிவான விளக்கம்! கூறி
    கருத்துரை வழங்கினீர்
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. MANO நாஞ்சில் மனோ said..

    உணமை தான் மனோ!

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said.


    நன்றி!ஐயா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Rathnavel said.


    நன்றி!ஐயா

    புலவர் சா இராமாநுசம்
    3 October 2011 9:08 AM

    ReplyDelete
  13. ரெவெரி said.

    திறமை உள்ள நல்லோர்
    என்று சொல்லுங்கள் சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. கோகுல் said.

    அப்படி நடந்தாலும் வியப்பில்லை
    சகோ! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. என்று மாறும் இந்நிலையே//

    கஷ்டம் தான் ஐயா மாறுவது

    ReplyDelete
  16. நல்லவர்கள் ஆட்சி நலமாக வந்தாள் விடிவு பிறக்கும்!

    ReplyDelete
  17. சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
    சமயப்பூசல் குறைய வில்லை//

    உண்மை தான்..இன்றும் ஜாதிவெறி கொடிகட்டி பறக்குதய்யா..

    ReplyDelete
  18. நன்றென உலகம் போற்றட்டும்-மிக
    நல்லோர் மட்டுமே ஆளட்டும்//

    இப்படி அமைந்தால் இந்தியா சொர்க்க பூமியாக மாறும் ஐயா... ஆனால் மாற விடுவார்களா.. நல்லோரை ஆள எங்கே விடுகிறார்கள்... கவிதையில் உங்கள் ஏக்கத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.. நன்றி

    ReplyDelete
  19. நல்லோர் மட்டுமே ஆளட்டும் - என்று தலையிட்ட கவிதை இன்றைய யதார்த்தத்தையும், ஏக்கத்தையும் அருமையாக சொல்கிறது..

    நல்லோர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் கடமை நம் முன்னே காத்து கிடக்கிறது..

    ஒரு கட்சிக்காக வாக்களிப்பதை விட நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதின் மூலம், கட்சிகளை நல்ல வேட்பாளர்களை தேர்வுசெய்ய நிர்பந்திக்க முடியும் என நம்புகிறேன்...

    ReplyDelete
  20. திறமையுள்ள நல்லோர் மட்டுமே ஆளட்டும்.

    ReplyDelete
  21. நல்லோர் ஆண்டால் யாவருக்கும் நலம்தான்..

    ReplyDelete
  22. தலைப்பே பல விஷயங்களை சொல்கிறது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  23. வாழைப்பழத்தை உரிச்சு வாய்க்குல வைக்கிறமாதிரி கவிதை அப்படியே லாவகமா போகுது பாட்டு மாதிரி

    ReplyDelete
  24. M.R said.

    ஓட்டு அளித்தமைக்கு நன்றி
    நண்பரே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. M.R said.

    // கஷ்டம் தான் ஐயா மாறுவது//

    ஆம்!நண்பரே உண்மைதான்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. தனிமரம் said...

    பதவி என்ற வெறி இன்று கிராமங்களைக்
    கூட ஆட்டிப் படைக்கிறதே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. மாய உலகம் said.

    பதவி என்ற வெறி இன்று கிராமங்களைக்
    கூட ஆட்டிப் படைக்கிறதே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. மாய உலகம் said.

    நன்றி மாய

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
    செம்மை வழியில் நடக்கட்டும்
    நன்றென உலகம் போற்றட்டும்-மிக
    நல்லோர் மட்டுமே ஆளட்டும்

    உண்மைதான் ஐயா .நிகழும் கொடுமைகள் நின்றிட
    நல்லவர்கள் ஆளாரோ இப் புவியிதனை .தங்கள்
    எண்ணம் ஈடேற வேண்டும் .மிக்க நன்றி ஐயா
    அழகிய கவிதைப் பகிர்வுக்கு ............

    ReplyDelete
  30. குடிமகன் said

    விரிவான விளக்கம் மனவருத்தத்தோடு
    எழுதி யுள்ளீர்
    ஆனால் ..பதில் ஏமாற்ற மாகத்தான்
    இருக்கும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said.

    நன்றி!ஐயா
    தங்கள் ஆசை நிறைவேற
    இறைவன் தான் அருள் செய்ய வேண்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. Riyas said..


    உங்கள் வாகுக்கு பலிக்கட்டும்
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. ஹைதர் அலி said

    முதற்கண் தங்கள் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. கவி அழகன் said.

    வாங்க தம்பீ
    அடிக்கடி காணாம போறீங்க
    காதல்(கவிதை)வரவில்லையா
    நன்றி


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. அம்பாளடியாள் said.

    கவிதைப் புயல் அன்புச் சகோதரிக்கு
    கவின் மிகு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. அம்பாளடியாள் said.


    ஒட்டளிப்புக்கு மீண்டும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. ///சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
    சமயப்பூசல் குறைய வில்லை
    நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
    நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்
    பீதிவாழ்வே தொடர் கதையாய்-எதிர்த்து
    பேசினால் அந்தோ அடிஉதையாய்
    வீதியில் நடக்கவும் அஞ்சுவதே-என்ற
    வேதனை தானே மிஞ்சுவதே/////

    பல விடயங்களை சொல்லியுள்ளீர்கள் அழகான கவிதை ஜயா

    ReplyDelete
  38. K.s.s.Rajh said.




    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    அன்பரே!

    K.s.s.Rajh said.

    ReplyDelete
  39. கவிதை அருமை...அண்ணே அந்த நல்லோருன்னு சொல்றீங்களே...அங்கதாண்ணே மக்கள் தோத்துப்போறாங்க!

    ReplyDelete
  40. என் ராஜபாட்டை"- ராஜா said.

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. விக்கியுலகம் said...

    // கவிதை அருமை...அண்ணே அந்த நல்லோருன்னு சொல்றீங்களே...அங்கதாண்ணே மக்கள் தோத்துப்போறாங்//

    உண்மைதான் சகோ!
    நல்லவனாய் வருபவன் கூட பதவி பணம்
    அதிகாரம் பெற்றவுடன் கெட்டுப்போகிறான்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  42. நல்லாட்சி வேண்டி நல்லதொரு ஆக்கம் உங்களின் நல்ல எதிர் பார்ப்புகள் உண்மையில் வெல்லும்

    ReplyDelete
  43. நல்லாட்சி வேண்டி நல்ல படைப்பு.புலவர்களின் வாக்கு என்றும் பொய்க்காது.

    ReplyDelete
  44. சென்றுப் போனது போகட்டும்-ஆட்சி
    செம்மை வழியில் நடக்கட்டும்
    நன்றென உலகம் போற்றட்டும்-மிக
    நல்லோர் மட்டுமே ஆளட்டும்

    நல்லாட்சி மட்டுமே மலரட்டும்!

    ReplyDelete
  45. /////சாதிச்சண்டை மறைய வில்லை-இன்னும்
    சமயப்பூசல் குறைய வில்லை
    நீதிக்குமிங்கே விலை வைத்தார்-நல்ல
    நேர்மைக்கும் இங்கே உலைவைத்தார்/////

    இந்த காலாவதியான முறையை காலாவதியாக்கும் வரை
    கலியுகமிங்கே சாகாது....

    அருமையானக் கவிதை ஐயா!

    ReplyDelete
  46. சில பணிச்சுமை. இடையில் வர முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் ஐயா. தங்களின் கவிதை மிக அருமை. எதுகையும் மோனையும் தவழ்ந்து வரும் உணர்வுக் கவிதை. பாரதியின் சுதந்திர தாகத்தினை
    உமது கவிதை நடையில் காண்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  47. மாலதி said..

    நன்றி மகளே!

    ReplyDelete
  48. Murugeswari Rajavel said

    நன்றி சகோதரி

    ReplyDelete
  49. இராஜராஜேஸ்வரி sai

    நன்றி சகோதரி

    புலவர் சா இராமாநுச

    ReplyDelete
  50. தமிழ் விரும்பி said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  51. MUTHARASU said

    நன்றி நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  52.  வணக்கமய்யா அருமையான உங்கள் கவிதையை வாசித்து பெருமூச்சுத்தான் விடமுடியும் நல்லோர் ஆளும் நாளுக்கு எதிர்பார்த்திருப்போம்..!!?

    ReplyDelete
  53. தங்கள் வருகையை எதிர்நோக்கி என் தளத்தில் புதிய
    பாடல்வரி காத்திருக்கின்றதையா வாருங்கள் தங்கள்
    கருத்தால் இப் பாடல் அழகுபெற வாழ்த்துங்கள் .

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...