Friday, October 21, 2011

வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

  
தேசியம் என்றாலே பொருளறிய தாரே
  தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
  தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
  கொட்டவும்  குனிவதா கேலியவர் பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
  பரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி

எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
  எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
  உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
  சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
  வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
  காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
  ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
  துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
  மேதினி முற்றுமே நம்புகழ் பாட
       
               புலவர் சாஇராமாநுசம்

 

33 comments :

  1. அருமையான கவிதை ஐயா

    கச்சத்தீவை மீட்டெடுப்போம், தமிழரின் உயிரையும் உடமையையும் காப்போம்

    ReplyDelete
  2. உதையும் படுவார் மீனவர் நாளும்
    உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்

    என்று தீரும் இந்த நிலை???????

    ReplyDelete
  3. தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்திடம்
    குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம்
    பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய ராணுவத்திடம்
    ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு
    அம்பானி சகோதரர்களின் பிரச்சினையை தீர்க்கவே நேரம் இருக்கிறது...
    பொது மக்கள்
    அவர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நினைவுக்கு வருபவர்கள்

    ReplyDelete
  4. நன்றி ஐயா... மீட்டிட வேண்டும் தீவை..

    ReplyDelete
  5. கச்சதீவு, கன்னித்தீவு மாதிரி இழுத்துட்டேதான் போகும், காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக்கும் வரை!!!!!!

    ReplyDelete
  6. அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்
    ஆணவமிக்கவர்கள் எப்போதும்
    செவிடாய்தான் இருப்பார்கள்
    அவர்கள் அழிவின் போதுதான்
    காதுகள் கேட்கத் துவங்கும்
    த.ம 3

    ReplyDelete
  7. வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்...

    வீரியக்கவிதை புலவரே...

    ReplyDelete
  8. அருமையான வரிகள் கொண்ட கவிதை .மீட்டிட வேண்டும்.

    ReplyDelete
  9. M.R said...
    அருமையான வரிகள் கொண்ட கவிதை .மீட்டிட வேண்டும்.

    ReplyDelete
  10. நிவாஸ் said..

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. முனைவர்.இரா.குணசீலன் said.

    முனைவரே!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. suryajeeva said..

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash said..

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ said..

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. Ramani said..


    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. ரெவெரி said...

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. M.R said...

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. திரும்பப்பெறவேண்டும்தீவை!
    நல்ல கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  20. சென்னை பித்தன் said.

    ஐயா!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. வெங்கட் நாகராஜ் said..

    சகோ!

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. ஐயா...சத்தம்போட்டுச் சொல்லுங்கோ !

    ReplyDelete
  23. அருமையான வரிகளை அழகாக சொல்லிருக்கீங்க

    ReplyDelete
  24. கச்சத் தீவை மீட்க வேண்டும்..
    அழகிய நடையில் உங்களின் தனித்துவ கவி.
    நன்றி புலவரே.

    ReplyDelete
  25. தீவை மீட்க வேண்டும் ஐயா.. கவிதையில் வலியுறுத்தியவிதம் அருமை

    ReplyDelete
  26. புரட்சிக் கவிதையில் வார்த்தைகள் அனலாய்
    வந்து வீழ்ந்தது தேசத்தின் பற்றால். இந்த உறுதி
    அனைவர்க்கும் வந்தால்ப் போதும் உங்கள் எண்ணம்
    ஈடேறும் .அருமை!.. அருமை ஐயா தங்கள் புரட்சிக்
    கவிதை .மிக்க நன்றி பகிர்வுக்கு .....................

    ReplyDelete
  27. //
    கச்சத் தீவை கயவர்கள் கையில்
    காரண மின்றியே கொடுத்தமே வகையில்
    அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
    ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
    துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
    துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
    மிச்சமே இன்றியே அனைவரும ஓட
    மேதினி முற்றுமே நம்புகழ் பாட
    ///
    அருமையான வரிகள்

    ReplyDelete
  28. ''...உதையும படுவார் மீனவர் நாளும்
    உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்...'''

    இது தானே நடக்கிறது ஐயா!..பார்ப்போம் எப்போது பிரச்சனை தீருமென. நலமாக இருக்கிறீர்களா?
    வேதா. இலஙகாதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  29. பன்னாடைகளின் கையில்
    அதிகாரம் இருக்க
    நாம் காண்பது
    பகற்கனவு அய்யா.

    இடுப்புக் கச்சையை கூட
    மீட்க முடியாது.

    ஓட்டுக்கு காசு வாங்கிய
    நம் மக்கள்
    வாய் பொத்திக் கிடப்பது தான்
    நல்லது.

    ReplyDelete
  30. இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...