Saturday, November 12, 2011

தூண்டி வருவதும் இதுவல்ல

   
     அன்பு  நெஞ்சங்களே!  மாண்புமிகு அமைச்சர்
       திருமிகு, நாராயணசாமி அவர்கள்  கூடங்குளம்
      போராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார்
      அதன் விளைவே இக்கவிதை மீண்டும் வந்துள்ளது!
      

 மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

புலவர் சா இராமாநுசம்22 comments :

 1. நல்ல கவிதை.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 2. அந்த அமைச்சரை அங்கு நிரந்தரமாக குடி அமர்த்த வேண்டும்.

  கவிதை அருமை..

  ReplyDelete
 3. அய்யா உங்களுக்காக ஈகரை வலை தளத்தில் கவிதை போட்டி வைத்திருக்கிறார்களாம், ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே... எட்டு கவிதை அனுப்பலாமாம் எட்டு பிரிவுகளில்

  ReplyDelete
 4. எத்தனை விசயங்களுக்காக காத்து கிடப்பது. சிறப்பான கவிதை ஐயா

  ReplyDelete
 5. சிறப்பான கவிதை

  ReplyDelete
 6. வரவேண்டியநேரத்தில் வந்த அருமையான கவிதை

  ReplyDelete
 7. Rathnavel said...


  நன்றி ஐயா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. வேடந்தாங்கல் - கருன் *! said...

  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. suryajeeva said...

  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. சாகம்பரி said...

  நன்றி சகோதரி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. K.s.s.Rajh said...


  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. அம்பலத்தார் said...


  நன்றி சகோ!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. சென்னை பித்தன் said


  நன்றி ஐயா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. கவிதை மிகவும் அருமை ஐயா..
  தங்கள் அறிவுரை
  எட்ட வேண்டியவர்களுக்கு எட்டட்டும் ...

  ReplyDelete
 15. நம்பிக்கையில்
  நம்பிக்கை வையுங்கள் ..:)
  கதை அருமை

  ReplyDelete
 16. அருமை ஐயா ! சோதனைகளைத் தாண்டி சாதனை புரிவோம்!

  ReplyDelete
 17. போராட்டத்திலிருந்து மக்களைத் திசைத் திருப்ப மத்திய அரசு செய்த சதி. இதனால் போராட்டம் வலுக்குமே அன்றி வலுவிழக்காது.

  கவிதை அருமை ஐயா!

  ReplyDelete
 18. எனக்கென்னவோ இந்தப் போராட்டம் எழுப்பும் கேள்விகளால் பல தெளிவுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. உண்மை நிலை உணரப்படும்போது, எல்லாம் சரியாகிவிடும் ஒரு விஷயத்தை உணர்ச்சிகளால் அணுகுவதைவிட அறிவால் அறிய முற்படுவதே சிறந்ததாயிருக்கும்.விழித்தெழுவோம், அறியாமை இருளிலிருந்து. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. சிறப்பான கவிதை ஐயா...

  ReplyDelete
 20. மதி நிறை அய்யா வணக்கம்
  தங்களின் உடல் நிலை இப்பொழுது நலமாக இருக்கும்
  என நம்புகிறேன். உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள்
  வழமை போலவே அருமையான கவிதை, அமர்க்களம்.

  ReplyDelete
 21. கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள்
  வரிசையாக வந்து தங்கள் பணியைச் செய்து போகிறார்கள் ஐயா..
  இன்னும் வருவார்கள்..
  தொடர்ந்து முயற்சிப்பார்கள்...
  வெல்லட்டும் மக்கள் சக்தி..
  ஓங்கட்டும் இணைந்த கைகள்...

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...