Thursday, November 10, 2011

நியாயம் தானா அம்மாவேநியாயம் தானா அம்மாவே-இது
   நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
   ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
   தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
   ஆணயை இரத்தும் செய்வீரா

நீதி கேட்டே அலைகின்றார்-தம்
   நிலையை எண்ணிக் குலைகின்றார்
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
   வேதனை நீக்கத் தொழுகின்றார்
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
   நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
   சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே

தவறா செய்தார் அன்னவரே-வேலை
    தந்தது ஆண்ட முன்னவரே
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
    எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
    சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
    அநாதை ஆக்க முயலாதீர்

இரண்டு முறையே பட்டார்கள்-பாபம்
   இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
   தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடக-உடல்
   மேலும் வற்றி கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
   வாழ்வும் தாழ்வும் உம்கையில்

                  புலவர் சா இராமாநுசம்


      
  

38 comments :

 1. அழகிய கருத்து ஐயா

  த.ம 2

  ReplyDelete
 2. தான் தோன்றித்தனம் மிகு ஆள்வோரே
  தானே குழிதோண்டி அதில் வீழ்வீரே

  ReplyDelete
 3. //ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
  ஆணையில் நீக்கினீர் சும்மாவே
  தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
  தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்//

  அருமையோ அருமையான வரிகளில்
  அழகான மாலை செய்துள்ளீர்கள், ஐயா.
  பாராட்டுக்கள்.

  தமிழ்மணம் : 3 vgk

  ReplyDelete
 4. தவறா செய்தார் அன்னவரே-வேலை
  தந்தது ஆண்ட முன்னவரே
  இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
  எதற்கு இந்த முன்கோபம்
  சுவரா என்ன இடித்துவிட-ஒரு
  சொல்லில் வாழ்வை முடித்துவிட
  அவரால் வாழ இயலாதே-அவரை
  அநாதை ஆக்க முயலாதீர்

  //

  அம்மா என்று அழைக்கப்படுகிரீர்கள்
  இவர்கள் உங்கள் பிள்ளைகள் என ஏன் உணர மறுக்கிறீர்கள்?

  ReplyDelete
 5. என்ன பிச்சனைன்னே தெரியல.. அய்யா போட்டதை அம்மா விட்டு வெக்கவே மாட்டேன்கிறாங்க..

  ReplyDelete
 6. அம்மாவை நன்றாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் காதில் வாங்கிக் கொண்டால்தானே? மனக்குமுறல்களையும் கவிதையாய்ப் பதிவு செய்யும் திறன் அருமை ஐயா.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. முன் வைத்த காலை
  பின் வைக்காத அம்மா -
  என் செய்கிறார் இந்த விஷயத்தில்... பார்ப்போம்.

  ReplyDelete
 9. ஐயா, அம்மா காதுல விழற மாதிரி சொன்னாலும் அவங்களுக்கு கேட்காது. இப்பிடி ஆதங்கபட்ட்டாலும் பிரயோஜனம் இல்லை.


  நம்ம தளத்தில்:
  வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 10. அருமையாக சொல்லியிருக்கீங்க ஜயா

  ReplyDelete
 11. தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
  தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
  ஆயன உடனே செய்வீரா-நீக்க
  ஆணயை இரத்தும் செய்வீரா//

  செம போடு போட்டுருக்கீங்க புலவரே...!!!

  ReplyDelete
 12. வெங்கட் நாகராஜ் said...

  தங்கள் வரவுக்கும் வாழத்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. M.R said...

  தங்கள் வரவுக்கும் வாழத்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. சத்ரியன் said...

  தங்கள் வரவுக்கும் வாழத்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...


  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. கோகுல் said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. வேடந்தாங்கல் - கருன் *! said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. கீதா said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. ஒசை. said

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. தமிழ்வாசி - Prakash said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. K.s.s.Rajh said...


  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. MANO நாஞ்சில் மனோ said...


  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. சுவரா என்ன இடித்துவிட-ஒரு
  சொல்லில் வாழ்வை முடித்துவிட

  அபாரம் என்று புகழ்வதா.. அல்லது கவிதையின் உட்கருத்து தரும் வலியில் தவிப்பதா என்றே புரியவில்லை.

  ReplyDelete
 24. மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள் என்பது கண் கூடாய் தெரிகிறது, ஏதாவது நல்லது செய்யாவிட்டால் தமிழகம் நிலைமை கொடுமை தான்

  ReplyDelete
 25. அழகான சொற்களால்
  நன்கு இடித்துரைத்துள்ளீர்கள் புலவரே..
  புரிந்தால் சரி...

  ReplyDelete
 26. அருமையாக சொல்லியிருக்கீங்க ஜயா

  ReplyDelete
 27. நல்ல கவிதை ஐயா...

  ReplyDelete
 28. பன் said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. suryajeeva said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. மகேந்திரன் said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. Lakshmi said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 32. ரெவெரி said...

  தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. அருமையான கவிதை.நல்ல கருத்து.

  ReplyDelete
 34. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 35. அருமையாக சொல்லியிருக்கீங்க ஜயா

  ReplyDelete
 36. போராட்டக் குரல் அவர்கள் காதில் விழாவிட்டாலும் கூட
  இந்தக் கவிதை குரலாவது அவர் காதில் விழட்டும்
  ஒரு விமோஸனம் பிறக்கட்டும்
  அருமையான பதிவு
  த.ம 1

  ReplyDelete
 37. கருத்து
  நிறைந்த கவிதை ஐயா

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...