Monday, November 14, 2011

மனிதா மனிதா ஏமனிதா



       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
     
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
      
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
     
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
         

42 comments :

  1. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அற்புத வரிகள்
    அவசியம் அனைவரும் தினமும் ஒருமுறை
    எண்ணிப் பார்க்கவேண்டிய கருத்து
    மனம் கவர்ந்த பதிவு
    த.ம 1

    ReplyDelete
  2. சிந்தனையைத் தூண்டும் வரிகள்.... நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கவிதை வரிகள்....

    பகிர்வுக்கு நன்றி ஐயா....

    ReplyDelete
  3. சாவை தடுக்காத பணத்திற்காக மனிதன் ஓடும் ஓட்டம் கொஞ்சமா ?!

    சிந்திக்க வைக்கும் கவிதை ! இது போன்றவற்றை படித்து நாளும் நம்மை புதுபித்து கொள்ளவேண்டும்...

    உங்களின் வரிகள் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. நன்றிகள் பல.

    ReplyDelete
  4. Ramani said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. வெங்கட் நாகராஜ் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. Kousalya said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. ////அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
    அக்கினி தனக்கே எருவானோம்
    பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
    பொருளை எடுத்துப் போனோமா
    கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
    கையும் காலும் ஆடவில்லை
    மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!////
    சிந்தனையை தூண்டும் வரிகள் அருமை ஜயா

    ReplyDelete
  8. அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
    அக்கினி தனக்கே எருவானோம்
    பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
    பொருளை எடுத்துப் போனோமா
    கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
    கையும் காலும் ஆடவில்லை
    மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!//

    மாவீரன் அலக்சாண்டர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார், உலகையே கைபற்றிய அவர் தன் சவப்பெட்டியில் இரண்டு கைகளும் வெளியே தெரியும்படி வைக்கசொன்னாராம், அதற்கு அர்த்தம், நான் இந்த உலகுக்கு ஒன்றும் கொண்டு வரவும் இல்லை கொண்டு போகவும் இல்லை என்பதாகும்....!!!

    ReplyDelete
  9. MANO நாஞ்சில் மனோ said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
    அக்கினி தனக்கே எருவானோம்
    பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
    பொருளை எடுத்துப் போனோமா
    கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
    கையும் காலும் ஆடவில்லை
    மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!//

    நிலையில்லா உலகில் நிலையில்லா மனிதர்கள்..

    ReplyDelete
  11. வேடந்தாங்கல் - கருன் *! said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ஐயா வேலை பளு காரணமாக பதிவுகளுக்கு கருத்தும் வாக்கும் இட முடிவதில்லை ...ஆனால் படிக்க தவறாத மிக முக்கியாமான பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று ... நானும் விரைவில் அதிக பதிவுகளுடன் உங்களை தொல்லை செய்ய வருவேன் ஐயா

    ReplyDelete
  13. நல்ல கவிதை
    மனதைத்தொட்ட வரிகள்
    தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
    தினமும் சேர்த்தது பலகோடி
    சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
    சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
    நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
    நாளும் உண்ணும் உணவறியா
    பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
    பணம்பெரின் இல்லை சுகவாழ்

    அருமையான சிந்தனை ஐயா

    த.ம 8

    ReplyDelete
  14. வரிகள்
    வடம் பிடித்து என்னை
    வர‌வ‌ழைந்து
    வ‌ந்து விட்டன‌

    வாழ்த்துக‌ள் அய்யா

    அன‌ல் ப‌ற‌க்கிற‌து
    அழ‌கு மிளிர்கிற‌து
    அரும‌ருந்தாய் இனிக்கிற‌து

    வார்த்தை யில்லை
    வாழ்த்த‌

    அன்புட‌ன்
    திக‌ழ்

    ReplyDelete
  15. //அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
    அக்கினி தனக்கே எருவானோம்
    பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
    பொருளை எடுத்துப் போனோமா
    கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
    கையும் காலும் ஆடவில்லை
    மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!//

    வணக்கம் ஐயா..

    சிந்தனைகளை தூண்டிய வரிகள்.

    தொடருங்கள்..தொடர்ந்து வருகிறோம்

    ReplyDelete
  16. சிந்திக்க வைக்கும் கருத்து.சிறப்பான கவிதை.

    ReplyDelete
  17. கவிதை
    முத்துக்களாய்...பெறுமதியாய் இருக்கிறது
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. நல்ல கவிதை/வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. சிந்திக்க வைக்கும் கருத்து... நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய வரிகள் ஐயா...

    ReplyDelete
  20. அறைகூவல் கவிதை
    அருமையோ அருமை.
    இது போன்ற மரபுக் கவிதைகளை பார்ப்பது அபூர்வமாகி விட்டது.
    மனம் சந்தோசமாய் இருக்கிறது அய்யா.

    ReplyDelete
  21. அத்தனை வரிகளும் வாழ்வின் தத்துவம்.மனதில் பதிய வைக்கவேண்டிய பொன்மொழிகள்போலக் கவிதை !

    ReplyDelete
  22. அவசியம் சிந்திக்க வேண்டிய வரிகள் அய்யா! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  23. ரியாஸ் அஹமது said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. ரியாஸ் அஹமது said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. M.R said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. திகழ் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சம்பத் குமார் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. F.NIHAZA said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. விமலன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ரெவெரி said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. சிவகுமாரன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. ஹேமா said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. shanmugavel said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. சிந்தனை தூண்டும் வரிகள் அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  36. அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
    அக்கினி தனக்கே எருவானோம்
    பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
    பொருளை எடுத்துப் போனோமா
    கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
    கையும் காலும் ஆடவில்லை
    மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!

    என்ன சொல்ல எப்போதுமே உங்கள் கவிதைவரிகளில்
    தனி அழகு இருக்கும் இதை எவ்வாறு எழுதுகின்றீர்கள் என எனக்கு வியப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .வாருங்கள் என் தளத்திற்கும் ஒரு வாழ்த்துச் சொல்வோம் .

    ReplyDelete
  37. மனதினுள் ஊடுருவும்
    ஆணித்தரமான வார்த்தைகள் ஐயா...
    சொற்களின் வீரியத்தை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்...
    உம கவிக்கு அடிமை நான் புலவரே....

    ReplyDelete
  38. தமிழ்தோட்டம் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. அம்பாளடியாள் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. மகேந்திரன் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. சிந்தனை தூண்டும் வரிகள்... மிக அருமை ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...