Wednesday, November 30, 2011

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்



கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

45 comments :

  1. கம்பர் பற்றி அழகான கவிதை பாஸ் அருமை

    ReplyDelete
  2. கம்பனும் பாரதியும் என் இரு கண்கள்....அழகான இக்கவிதை மனசை அள்ளுகிறது.

    ReplyDelete
  3. அவர்தான் காலத்தால் அழியாத கவிஞர் ஆயிற்றே

    த.ம 2

    ReplyDelete
  4. தலைமுறை பலவும் தாண்டிய போதும்
    தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
    நிலைபெற நின்றே இன்றும் வாழும்//

    காலாத்தால் அழியாத காவியத்தைக் கொடுத்தவர்..

    வரிகள் அருமை..

    ReplyDelete
  5. //கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
    கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
    மலையென மக்கள் மனதில் தங்கிட
    மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்//

    நல்ல வரிகள்....

    ReplyDelete
  6. உண்மைதான் ஐயா கம்பனின் கவிதைக்கு என்றுமே
    தனிச்சிறப்பு உள்ளது .அருமை!..உங்கள் கவிதையும் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ....

    ReplyDelete
  7. கம்பர் கம்பர் தான்..அது போல்..நீங்கள் நீங்கள் தான்...மற்றுமொரு தரமான படைப்பு..புலவரே...

    ReplyDelete
  8. K.s.s.Rajh said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. ஷைலஜா said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. M.R said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. வேடந்தாங்கல் - கருன் *! said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. வெங்கட் நாகராஜ் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. அம்பாளடியாள் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ரெவெரி said.


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கம்பனுக்கு என்றும் அழிவில்லை என்பதே உண்மை.திகட்டாத விருந்து.

    ReplyDelete
  17. கவி பாடிய கம்பனுக்கு
    கவி 'பா' !

    திகட்டாமல் தந்தது
    உங்கள் சொற்'பா'!

    சொன்னது இந்த
    தோழன் ம'பா'.

    ReplyDelete
  18. கவிச் சக்ரவர்த்தி கம்பன் பற்றிய அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  19. அக்காலக் கம்பனை பற்றி
    இக்காலக் கம்பன்
    எழுதிய
    எழிலான கவிதை
    எத்திசையும்
    புகழ் பரப்பும்

    அருமை அய்யா

    ReplyDelete
  20. Unmai ayya. Kambarayam padithathanaalthan oru Kannadhasan uruvanaan. Ithu avere sonnathu. Marabu kavithai vaazha ungalai ponravargalin sevai avasiyam.
    TM 12.

    ReplyDelete
  21. ஏழாம் அறிவு படத்தில் வருகிறதுபோல நீங்களும் ஒருவேளை கம்பனின் வழிவந்தவராகக்கூட இருக்கலாம் ஐயா.எப்பவும்போல பாராட்டுக்கள் !

    ReplyDelete
  22. சும்மாவா சொன்னார்கள் கவிச் சக்கரவர்த்தி என்று....
    அச் சக்கரவர்த்திக்கே அழகிய பாமாலை அணிவித்துவிட்டீர்கள் புலவரே..
    அழகு அழகு...

    ReplyDelete
  23. கம்பன் ஒரு மகாஞானி என்பேன் பலதையும் தன் கவிதையில் தந்த காலத்தூதுவன் அவனின் பெருமையைப் பாடி நிற்கும் கவிதை அழகு புலவரே!

    ReplyDelete
  24. கவிச்சக்கரவர்த்திக்கு ஒரு அழகிய கவிமகுடம். கவியும் கருத்தும் வெகுநன்று. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  25. நான் வியந்த இலக்கியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் கம்பர்..

    வெய்யோன்ஒளி தன்மேனியின்
    விரிசோதியின் மறையப்
    பொய்யோஎனும் இடையாளொடும்
    இளையானொடும் போனான்
    மையோமர கதமோமறி
    கடலோமழை முகிலோ
    ஐயோஇவன் வடிவுஎன்பதோர்
    அழியாஅழகு உடையான்.

    என் மனதில் என்றும் நீங்காத..
    நயமிக்க கற்பனையாகும்..

    எதிர்காலத் தலைமுறையினருக்கு இதுபோன்ற அறிமுகங்கள் அடிப்படைத்தேவை புலவரே..

    அருமை

    அருமை!

    ReplyDelete
  26. புவிதனில் பலரும் படித்திட அவரே
    புலமைக்கும் நிகரென உண்டா?
    நல்லதொரு கேள்வி..

    ReplyDelete
  27. shanmugavel said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. தோழன் மபா, தமிழன் வீதி sa


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. சென்னை பித்தன் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. A.R.ராஜகோபாலன் sai

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. துரைடேனியல் said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. ஹேமா said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. மகேந்திரன் sai


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. தனிமரம் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. கீதா said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. முனைவர்.இரா.குணசீலன் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. மதுமதி said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    மிக்க நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  38. தமிழை ஆழமாக ரசிக்கிறேன் ஐயா தங்கள் பண்ணியத்தில்...

    ReplyDelete
  39. அருமையான வரிகள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ஐயா.
    நம்ம தளத்தில் (பணம்-பாடல்கள் பற்றி):
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  40. தமிழுக்கு மகுடன் சூட்டியவருக்கு தங்கள் தமிழ் மூலம் நீங்கள் சூட்டிய மகுடம் அருமை ஐயா!

    ReplyDelete
  41. அருமையான வரிகள் ஐயா... கவிக்கு கவி ஆற்றிய தங்கள் பணி சிறக்கட்டும்.


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  42. கம்பனை பற்றி ஒரு
    அழகான சிறு காவியம் ஐயா இது ..
    அருமை ..
    நிச்சயம் கம்ப ராமாயணம் படிக்க
    முயற்சி செய்வோம்

    ReplyDelete
  43. வணக்கம் ஐயா...
    வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..

    http://blogintamil.blogspot.in/2013/02/2.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...