இன்றவர் பிறந்த ஒருநாளாம்-நல்
ஈழ மக்கள் திருநாளாம்!
குன்றென கொண்ட மனத்திண்மை-அவர்
குமுறும் எரிமலை நனிஉண்மை!
என்றுமே அவர்தான் மாவீரர்-மிக
இனவெறி சிங்களக்கொடும் பாவிநீர்
ஒன்றே ஒன்றாம் உணர்வீரே-அவர்
ஒருநாள் மீண்டும் வருவாரே
வீரம் என்றும் அழிவதில்லை-மா
வீரர் அழிந்தது மெய்யில்லை!
நேரம் வரும்போ துலகறியும்-அந்த
நிலமை எதிர்நாள்! அதுதெரியும்!
ஆரம் சூட்டி வரவேற்கும்-மா
அகிலம் போற்ற புகழ்சேர்க்கும்
வாரீர் உலகத் தமிழர்களே-மா
வீரரை வாழ்த்துவோம் வாழ்கயென
புலவர் சா இராமாநுசம்
மாவீரர் திருநாள் வீர வணக்கம் ....
ReplyDeleteநிச்சயம் வருவார்
ReplyDeleteமாவீரர் தின வணக்கங்கள்
Naalukketra pathivu.
ReplyDeleteTM 1.
நல்லா இருக்கு கவிதை அண்ணே நன்றி!
ReplyDeleteவீரரை வாழ்த்துதல் மூலம்
ReplyDeleteவீரம் பெறுவோம்
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
த.ம 2
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா ,
ReplyDeleteத.ம 4
இன்குலாப் ஜிந்தாபாத்
ReplyDeleteசரியான வார்த்தைகள் அய்யா!
ReplyDeleteவீரம் என்றும் அழிவதில்லை-மா
ReplyDeleteவீரர் அழிந்தது மெய்யில்லை!
அருமை ஐயா..
தமிழனை வாழ்த்துவோம்
ReplyDeleteசிங்களவனை வீழ்த்துவோம்..
மாவீரரை வாழ்த்தி வணங்குவோம்!
ReplyDeleteதியாகச் சுடர்களை வாழ்த்தி வணங்குவோம்....
ReplyDeleteஎம் கல்லறைத் தெய்வங்களை வணங்கித் தொழுவோம்.கைகோர்த்த உணர்வுக்கு நன்றி ஐயா !
ReplyDeleteநல்லபதிவு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா? பார்ப்போம் please go to visit this link. thank you.