Saturday, December 3, 2011

உணர்வை அணுவேனும் கொண்டாயா?கரைந்தே உண்டிடும்
காக்கையைப் போலவே
விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த
விவேகம் தனையேனும் எய்தாயா?

தன்னினம் காத்திட
தன்குரல் எழுப்புமே
உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
உணர்வை அணுவேனும் எய்தாயா?

கூட்டுள குஞ்சுக்கும்
கொத்திடும் அலகாலே
ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
உணர்வை அணுவேனும் பெற்றாயா?

கன்றதைக் காணாது
கத்திடும் தாய்பசு
ஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

வளர்த்திடும் நாய்கூட
வாலாட்டி நன்றியாம்
உளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

தட்டினால் மாடுகள்
தானாகப் பாதையில்
ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

           புலவர் சா இராமாநுசம் 

25 comments :

 1. எல்லா அறிவு ஜீவன்களும் மகிமையானது...

  ஆனால் ஆறறிவு கொண்ட நாம் கேள்விக்குறிதான் ஐயா..


  இன்னும் நாம் ஜந்தறிவு உயிரினத்தின் அளவு கூட கற்கவில்லை...

  அர்த்தமுள்ள கவிதை..

  ReplyDelete
 2. அண்ணே...ஹூம் எப்படி வரும் வெறும் வெற்றுக்கூச்சல்களுக்காக தங்களை அர்ப்பணிக்கும் பண்பு இருக்கும் வரை...கவிதை அருமை!

  ReplyDelete
 3. ஆம் , ஐந்தறிவுல்ல அனைத்து ஜீவா ராசிகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஆனால் நாம்??????????????

  அசத்தல் கவிதை..

  ReplyDelete
 4. அழகாகச் சொன்னீர்கள் புலவரே..

  ReplyDelete
 5. எல்லா விலங்குகளையும் நாம் நம்மை ஒப்பிடுகிறோம். நம்மை? (சிலரைத் தவிர) அருமையான கவிதை ஐயா!
  நம்ம தளத்தில்:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

  ReplyDelete
 6. கூட்டுள குஞ்சுக்கும்
  கொத்திடும் அலகாலே
  ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
  உணர்வை அணுவேனும் பெற்றாயா?//

  நெருங்கிய நண்பன் கூட சாப்பிடும் பொது சாப்பிடுறியான்னு ஒரு பேச்சிக்கு கூட கேட்பதில்லை எல்லாம் கலிகாலம் போங்க...!!!!

  ReplyDelete
 7. விலங்குகள் என்றும் விலங்குகள் அல்ல,
  மனிதர்கள் என்றும் மனிதர்கள் அல்ல,
  என்பதை உணர்த்திய.... கவிதை நன்று!

  ReplyDelete
 8. உண்மை தான்.
  என்னுடைய வலைபக்கத்துக்கு வாங்க..
  http://mydreamonhome.blogspot.com

  ReplyDelete
 9. ம்...அவர்களுக்கு இருக்கும் அறிவும் நன்றியுணர்வும் எங்களுக்கில்லை.ஆனால் நாங்கள் அவர்கள் பெயர்களால் திட்டுவதுபோல அவர்கள் எங்களைத் திட்டுவதில்லை !

  ReplyDelete
 10. உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கவிதை. அருமை. ( விலங்குகள் ஒன்றையொன்று " போடா மனுஷா" என்று திட்டிக் கொள்ளுமோ ?)

  ReplyDelete
 11. நல் உணர்வை நீ கொண்டாயா? எனும் கேள்வியை தாங்கி நிற்கும் கவிதை ,அருமை

  த.ம 8

  ReplyDelete
 12. பகுத்தறிவுதான் நம் பிரச்சினையோ?
  அருமை.

  ReplyDelete
 13. பறவை போல
  பகுத்துண்டு இருந்திடாமல்
  பகுத்தறிவு கொண்டு
  பகமை
  பாராட்டும்
  மானிடர்
  மமதையை
  மடமையை
  அறிவார்த்தமாய் சொன்ன விதம் அருமை அய்யா

  ReplyDelete
 14. Unarvugal setha manithargalalthan bhoomi nirainthirukkirathu.
  Arumai. Azhagana Kavithai.
  TM 12.

  ReplyDelete
 15. அஃறிணை என்கிறோம். ஆனால் அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். அழகான கவிதை ஐயா.

  ReplyDelete
 16. தட்டினால் மாடுகள்
  தானாகப் பாதையில்
  ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
  உணர்வை அணுவேனும் கொண்டாயா?

  விவேகங்களை விதைத்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 17. சந்தம் மிக அருமை... சொற்கள் எளிமை.

  ReplyDelete
 18. அய்யா தங்கள் வலதளத்தின் பெயரை தமிழ் எழுத்துகளால் அமைக்கலாமே?!

  ReplyDelete
 19. அழகான
  அருமையான கவிதை ஐயா

  ReplyDelete
 20. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete
 21. கவிதை வீதி... // சௌந்தர் // sai


  தங்கள் வருகைக்கு நன்றி! உளங்கனிந்த
  வாழ்த்துக்கள் உரித்தாகுக!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. விக்கியுலகம் said...


  தங்கள் வருகைக்கு நன்றி! உளங்கனிந்த
  வாழ்த்துக்கள் உரித்தாகுக!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. * வேடந்தாங்கல் - கருன் *! said.

  தங்கள் வருகைக்கு நன்றி! உளங்கனிந்த
  வாழ்த்துக்கள் உரித்தாகுக!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. முனைவர்.இரா.குணசீலன்


  தங்கள் வருகைக்கு நன்றி! உளங்கனிந்த
  வாழ்த்துக்கள் உரித்தாகுக!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...