Thursday, December 22, 2011

கவிதைப் பிறந்தச் சூழ்நிலை-1


இனிய அன்பர்களே!
      சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
      அவ்வகையில் வந்த கவிதை இது!
      ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
      இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
      அழுது புலம்பியது. நண்பரிடம் தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
       யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
                நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
       அடுத்த நாளே வந்து விட்டான்!
            
             அன்னையின் கண்ணீர் இங்கே
                 ஆறெனப் பெருகி ஓட
             சென்னையும் சென்றாய் அங்கே
                 சென்றுநீ என்னக் கண்டாய்
             உன்னுரு காட்டும் நிழலை
                  ஒழித்திட முயலல் மடமை
             என்னுயிர் நண்பா இதனை
                   எண்ணிட மறந்தாய் ஏனோ
             
             இடமிலை என்று நீயும்
                   இவ்வூரினைப் பிரிந்து செல்ல
               திடமிகு உமதுத் தந்தை
                   தீதென்ன செய்தேன் என்றே
              உடலுமே குலுங்க குலுங்க
                  உள்ளமே நொந்து அழுதார்
               மடமையாம் நண்ப இந்த
                   மனநிலை பெற்றாய் ஏனோ
              
             பெ ற்றவர் சுற்றம் நீங்கி
                  பிரிதொரு ஊரும் செல்ல
               பற்றுமே அற்றார் போல
                  பறந்தனை இரவில் நன்றோ`
               கற்றவர் செய்யும் செயலா
                  கண்ணீரோ வெள்ளம் புயலா
                உற்றவன் நீதான் என்றால்
                   உடனடி விரைந்து வாவா!

                                புலவர் சா இராமாநுசம்

46 comments :

  1. அழகான கவிதை நடையில் சிறப்பான அறிவுரை. பிரமாதம்.

    ReplyDelete
  2. ஐயா... கவிதை மூலம் ஒருவரின் மனதை மாற்ற முடியும் என்பதை தங்கள் கவிதை பறை சாற்றுகிறது. அருமை.


    வாசிக்க:
    முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

    ReplyDelete
  3. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

    Visit Here: http://bit.ly/vqP0GV

    ReplyDelete
  4. அழகான கவிதை பாஸ் அருமை

    ReplyDelete
  5. கணேஷ் said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. தமிழ்வாசி பிரகாஷ் said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. விக்கியுலகம் said.


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. K.s.s.Rajh said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. திரும்பி வந்தது உங்கள் மேல் இருந்த மதிப்பா, உங்கள் கவிதை எடுத்துரைத்த காரணங்களா எப்படியாயினும் பிரிந்தவர் கூட உதவிய கவிதை அருமை ஐயா.

    ReplyDelete
  10. கவிதை வீதி... // சௌந்தர் // said.


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. நண்டு @நொரண்டு -ஈரோடு said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. நல்ல கவிதை சகோதரா. கவிதையும் பலமான பிரச்சாரக் கருவி தானே! அதில் வெற்றி கண்டீர்கள். வாழ்த்துகள்.வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  13. மடமையாம் நண்ப இந்த
    மனநிலை பெற்றாய் ஏனோ

    இடித்துரைத்த கனத்தவரிகள்..

    ReplyDelete
  14. ஆஹா கவிதை நடையில் நண்பனை அழைத்தது அருமை, உங்கள் நண்பருக்கு கவிதை பிரமாதமாக பிடிக்கும் போல வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  15. kavithai (kovaikkavi) said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. MANO நாஞ்சில் மனோ said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. பிரமாதமான கவிதை ஐயா!

    ReplyDelete
  19. மாய உலகம் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. G.M Balasubramaniam said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. கல்லும் கரையாதோ இக் கவிதையால்!

    ReplyDelete
  22. அருமை ஐயா.
    மனம் நெகிழ்கிறது.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  23. அருமையான படைப்பு அய்யா..

    ReplyDelete
  24. சரியான வார்த்தைகளுக்கு உள்ள வலிமை இது.புத்தகங்கள் வரலாற்றை மாற்றியது இப்படித்தான்.நன்று அய்யா!

    ReplyDelete
  25. மிக அழகான கவிதை....

    கவிதையால் ஒரு நண்பனுக்கு அறிவுரை... அழகு...

    பகிர்ந்தமைக்கு நன்றி புலவரே....

    ReplyDelete
  26. Arumaiyana Kavithai ayya. Kavithai Vaalgaiyai maatrum enpathu unmaiyagi vittathu.

    TM 10.

    ReplyDelete
  27. அழகான கவிதை ஐயா

    த.ம 11

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. Rathnavel said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. sasikala said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. !* வேடந்தாங்கல் - கருன் *! said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. shanmugavel said.


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. வெங்கட் நாகராஜ் said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. துரைடேனியல் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. M.R said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. வரிக்கு வரி நண்பரை உழுப்பி விட்டிருக்கின்றீர்கள். இக்கவிக்கு மனம் இரங்கார் எக்கவிக்கு மனம் மருவார். அருமை கவிதை. அழகு உங்கள் வரிகள்

    ReplyDelete
  37. புலவர் பெருந்தகையே,

    கோபித்து சென்ற முருகப் பெருமானுக்கு
    தமிழ்ப் பாட்டி ஔவை எழயுதியது போல
    ஒரு அற்புதமான கவிதை ஐயா...

    ReplyDelete
  38. மகுடிக்கு மயங்கும் நாகம் போல்,
    உங்கள் கவிதைக்கு இசைந்துவிட்டார் உங்கள் நண்பர்.

    சிறப்பு மிக்க கவிதை.

    ReplyDelete
  39. சந்திரகௌரி said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. மகேந்திரன் said..
    .தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. சத்ரியன் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  42. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...