தலைநகர் வாழும் தமிழர்களே-நாளை
தன்மானம் காப்போம் திரளுங்கள்
அலைகடல் சீரணி அரங்கத்தின்-முன்
அலையலை எனவே வாருங்கள்
நிலைபெற முல்லை அணைகட்டும்-உரிய
நீதியின் குரலே முழங்கட்டும்
இலையிடம் துளியென கூடட்டும்-கேரள
எதிரிகள் மிரண்டு ஓடட்டும்
உடைப்போம் அணையை என்கின்றார்-இது
உறுதி உறுதி என்கின்றார்
எடுப்போம் அனைவரு உறுதிமொழி-நம்
எதிர்பை காட்டும் இறுதிவழி
தடுப்போம் உயிரைக் கொடுத்தேனும்-வீரத்
தமிழனாய் வாழ்வோம் இனியேனும்
தொடுப்போம் அறப்போர் திரளுங்கள்-பலி
தேவையா ஆள்வோர் கூறுங்கள்
எங்கும் மக்கள் வெள்ளமென-கண்
எட்டிய வரையில் சொல்லவென
பொங்கிய கடலாய் பொங்கட்டும்-மக்கள்
புரட்சியின் குரலே ஓங்கட்டும்
சிங்கம் போன்றே எழுவீரே- பெரும்
சென்னை மாநகர் வாழ்வோரே
அங்கம் துடித்திட வாருங்கள்-சீரணி
அரங்கத்தின் முன்னே திரளுங்கள்
புலவர் சா இராமாநுசம்
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
ReplyDeleteVisit Here: http://adf.ly/4FKbj
இன்குலாப் ஜிந்தாபாத்..
ReplyDeleteஒன்றுசேருவோம் உலகுக்கேகேட்க உரக்க குரல் கொடுப்போம். தமிழன் ஒன்றும் இளைத்தவன் இல்லை கண்டவனெல்லாம் ஏறிமிதிக்க. படை திரள்வோம், உரிமையை பறைசாற்றுவோம்.
ReplyDeleteஅருமையான கவிதை
மிக்க நன்றி ஐயா
ஒண்றுபடுவோம்
ReplyDeleteஇன்குலாப் ஜிந்தாபாத்
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteஇன்று ஜாக்கி சேகரின் பதிவும் தங்கள்
பதிவும் படித்த பின்னரே இக் கவிதையை எழுதினேன்!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிவாஸ் said...
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
வெற்றி நமதே...
ReplyDeleteஒன்றுபட்டால் உண்டு வாழ்வு தமிழனுக்கு !
ReplyDeleteஒன்று கூடுவோம் ஐயா..
ReplyDeleteத.ம-6
அன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
தினேஷ்குமார் said...
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
மதுமதி said...
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
எங்கள் பகுதியில் நடைபெற்ற மாபெரும்
ReplyDeleteஉண்ணாவிரதப் போராட்டதில் நேற்று கலந்து கொண்டேன்
போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்
த.ம 7
Ramani said...
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும்
நன்றி! சகோ!
புலவர் சா இராமாநுசம்
இன்குலாப் ஜிந்தாபாத்
ReplyDeleteநாம் வெற்றி பெறுவோம் அய்யா!
ReplyDeleteEnnaal vara mudiyathu ayya. Varuthamaga irukkirathu. Poraattam vetri pera vaalthukkal! Tamilar otrumai onguga!
ReplyDeleteTM 11.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றி நமதே!
ReplyDeleteஇன்குலாப் ஜிந்தாபாத்
ReplyDeleteத.ம 13