Wednesday, December 14, 2011

இனிய வலைப் பதிவு அன்பர்களே!



இனிய வலைப் பதிவு அன்பர்களே!
                               வணக்கம்!

      நமக்கொருப் பாதுகாப்பாகச் சங்கம் ஒன்று தேவை
என்று நான் எழுதியிருந்த கருத்துக்கு ஆதரவாகவும்,
 ஆலோசனைக் கூறியும் நாற்பத்தெட்டுபேர் மறுமொழி
அளித்துள்ளீர்கள்
       உங்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
        தனி மரம் தோப்பாகாது நான் மட்டுமே எதையும்
செய்துவிட இயலாது மேலும் என் வயது எண்பது என்பதை
நீங்கள் அறிவீர்கள்.
    எனவே முதலிலேயே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
சிலர் எழுதியுள்ளதைப் போல நானே முன்நின்று,அல்லது
பொறுப்பேற்று நடத்துவது என்பது வயதின் காரணமாக
 இயலாத ஒன்று  என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்
கொள்கிறேன் உடல் உழைப்பு தவிர மற்ற எந்த உதவிகளையும்
செய்யத்தயாராக உள்ளேன்
      ஆனால் சங்கத்தைப் பதிவு  செய்யும் வரை வேண்டிய
முன் ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்!
     முதற்கண் சங்கம் பற்றிய சில குறிப்புகளை இங்கே
தருகிறேன்
       சட்டப்படி  சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு முதல் பதினைந்து
இருபது உறுப்பினர்கள் இருந்தாலே போதும். பதிவு செய்து விடலாம்
 அதாவது,தற்காலிகமாக தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர்
ஆகிய பொறுப்பாளர்களையும் மற்றவர் உறுப்பினர்களாகவும் அமைத்து
 அவர்களின் கையொப்பத்தோடு முகவரியும் குறிப்பிட்டு பதிவகத்தில்
உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்
        இது, முதல் பணி!
அடுத்து இரண்டாவது கட்டமாகநாடு தழுவிய பொதுக்குழு, ஆட்சிக்குழு,செயற்குழு
ஆகியவற்றை அமைத்தல் வேண்டும் இது இரண்டாம் கட்டப் பணி!
       முதற் கட்டப் பணி முறையாக அமைத்து அதன் பிறகு
இரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கலாம்
         முதற் கட்டப் பணிப்பற்றிய என் கருத்துக்கள்!
 
1 பதிவு சென்னையில் செய்ய வேண்டும்.
  2 தேவையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்

இதற்கான வழியாக நான் கருதுவது, சென்னை
செங்கை,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட
வலைப் பதிவர்களை சென்னையில் ஒரு பொது
இடத்தில் கூட்டி  கலந்தாய்வு செய்து மேற்
கண்ட தற்காலிகப் பொறுப்பாளர்களை
 தேர்வு செய்து பதிவு செய்யலாம்
    
        இதற்கான பணிகளை நான் செய்கிறேன்!
இக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதானால்
உங்கள் கருத்துக்களை உடன் முன்போல்
மறுமொழி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்!
                        அன்பன்
               புலவர் சா இராமாநுசம்


      
    

26 comments :

  1. சரிதான் ஐயா தாங்கள் சொன்னபடியே செய்வோம்..முதலில் கூட்டத்தைக் கூட்டுவோம்..அதற்கான நாளை தாங்களே முடிவு செய்து அறிவியுங்கள்..

    ReplyDelete
  2. நல்ல முயற்சி தொடர்ந்து நடத்துங்கள்...

    நானும் உறுதுணையாக இருக்கிறேன்.. ஐயா...

    ReplyDelete
  3. அப்புறம் சுயநலமே இல்லாம சொல்றேன்
    இந்த முறை நானே தலைவரா இருந்துகிறேன்....

    இது எந்தப்பட வசனம் தெரியுமா.. தங்களுக்கு...

    ReplyDelete
  4. நானும் என்னாலானதைச் செய்யத் தயாராகவே உள்ளேன். இந்த நல்ல முயற்சியைத் தொடருங்கள்... நன்றி.

    ReplyDelete
  5. நான்தான் பதிவுலகின் மூத்த பதிவர் என்று இறுமாப்புடன் இருந்தேன். அது இன்றுடன் ஒழிந்தது. என்னுடைய வயது வெறும் 77 தான்.

    சங்கம் சிறக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஐயா,
    வணக்கம், நான் சென்னையில் தான் இருக்கிறேன். தற்காலிகமாக சும்மா இருக்கிறேன். அதாவது மத்திய அரசுப்பணிக்கு நடந்த தேர்வில் தேர்வாகி விட்டேன். மெடிக்கல் டெஸ்ட் முடிந்து விட்டது. அப்பாயிண்ட்மெண்ட வரும் வரை ப்ரீ தான். நீங்கள் கூப்பிடுங்கள். வழி காட்டுங்கள். பதிவுலக நண்பர்களை நான் திரட்டுகிறேன். முடிந்த வரையான வேலைகளை நான் செய்கிறேன். எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். என் அலைபேசி எண் 8883072993.

    செந்தில் குமார்,
    அம்பத்தூர்,
    சென்னை.

    ReplyDelete
  7. உங்கள் முயற்ச்சிக்கு நானும் ஒத்துழைப்புத் தருகிறேன்.. நன்றி..

    ReplyDelete
  8. சிறப்பான முயற்சி ஜயா நாங்கள் வேறு நாட்டில் இருப்பதால் உங்களுடன் முதல் கட்ட பணியில் இணைய முடியவில்லை ஆனாலும் உங்கள் முயற்சியில் என்றும் துணையாக நிற்பேன்

    ReplyDelete
  9. ஐயா, மகிழ்ச்சி. என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. புதிய பாதை ஆர்வத்துடன் உள்ளேன்

    ReplyDelete
  11. சங்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சங்கத்துக்கு என் முழு ஆதரவும் உண்டு...

    ReplyDelete
  13. நல்ல முயற்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. தாங்கள் குறிப்பிடுவது மிகச் சரி
    என்னுடைய முழு ஆதரவு எப்போதும் உண்டு
    நீங்கள் பூர்வாங்க ஏற்பாடுகளைசென்னையில் உள்ள
    ஆர்வமுள்ள பதிவர்களுடன் தொடர்பு கொண்டு தொடரலாம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. சங்கம் வளர என் மனப்பூர்வமான வாழ்த்துகள்

    ReplyDelete
  16. நிச்சயம் செய்யலாம் ஐயா!
    என் ஆதரவு உண்டு.
    தேதி சொல்லுங்கள்.

    ReplyDelete
  17. தேவையான முயற்சிதான் இது புலவரே..

    தங்கள் ஆர்வம் இது குறித்து எங்களை ஆழமாகச் சிந்திக்கச் செய்வதாக உள்ளது..

    ReplyDelete
  18. நல்ல முயற்சி ஐயா ,பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா..

    சங்கத்திற்க்கு என் ஆதரவும் கூட..

    ReplyDelete
  20. வரவேற்கின்றோம்...

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா தங்கள் புதிய முயற்சி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா தங்கள் சேவைக்கு .

    ReplyDelete
  22. ஆவண செய்யுங்கள் ஐயா

    ReplyDelete
  23. நல்ல முயற்சி ஐயா..... தொடங்குங்கள்,
    மதுரையும் இணையும்....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...