Sunday, June 19, 2016

முகநூல் பதிவுகள்!


அன்பே! உன் பெயர்தான் அன்னையா!!!!?
கூவத்தையும் காவிரியையும் ஒன்றாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் கடல்போல, தன் ,மகனோ மகளோ நல்லவர்களோ தீயவர்களோ என்று பாராமல் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவளே   உன்பெயர்தான் அன்னையா!!!?

ஓர் அரசு மக்களுக்குப் எப்போதும் நீதிநெறியோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்! அப்படி இருந்தால், அதுவே(ஆட்சி முறை) அரசைக் காப்பாற்றும்! (குறள்கருத்து)

பணம் பத்தும் செய்யும் என்பார்கள்! அதில் ஒன்று , ஆளவும் செய்யும் என்பது புலனாகிறது

எப்படியோ, ஆளும் கட்சியும் பலமான எதிர்க் கட்சியும், என இரண்டு அணிகள் உருவாகி விட்டன ! வரவேற்போம்! ஆனால் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு சட்ட மன்றத்தை போர்க்களமாக ஆக்காமல் சனநாயக முறைப்படி நடத்திச் செல்லுமாறு இருதரத்தாரையும், நடக்க வேண்டுகிறோம் .மேலும், இதனை மக்கள் அறிய அவை நிகழ்ச்சிகளை அப்படியே நேராக தொலைக்காட்சியில் அஞ்சல் செய்தால் , தவறு செய்வது யாரென்று மக்களும் அறிவர்! செய்வீர்களா!

ஊழல் ஊழல் என்று சொல்றாங்களே எது ஊழல்! ஊழலே செய்யாத மனிதர் உலகில் யாருண்டு!!? ஒருவரைக் காட்ட முடியுமா ! தான் செய்வது ஊழலே என்று உணராமலேயே பலரும் செய்வதும் அதுவே மற்றவர் செய்யும் போது ஊழலாக தெரிவதுதான் ஊழல் என்று நினைப்பதுதான் இன்று மனித சமுதாயத்தின் இயல்பாகப் போய்விட்டதே ! கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா!!!? யாரேனும் இதனை எண்ணிப் பார்த்த துண்டா?

புலவர்  சா  இராமாநுசம்

6 comments :

  1. நியாயமான ஆதங்கம் தங்களது கேள்வியில் இருக்கின்றது ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. இவற்றை எண்ணிப்பார்க்க யாருக்கய்யா நேரம் இருக்கிறது? இங்கு அனைத்தும் சுயநலம்தானே?

    ReplyDelete
  3. //கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா!!!? யாரேனும் இதனை எண்ணிப் பார்த்த துண்டா?//

    உண்மை.... ஊழல் இப்படித் தான் ஆரம்பிக்கிறது...

    ReplyDelete
  4. சர்வமும் ஊழல் மயம் என்றால் என்னதான் செய்வது :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...