Monday, March 26, 2012

வலையின் வயது ஒன்றாகும்!


வலையின் வயது ஒன்றாகும்-நீர்
    வாழ்த்திடப் பிறந்தது இன்றாகும்
இலையில் தெளித்த முத்தாகும்-அது
    இதயத்தில் வாழும் சொத்தாகும்
அலையில் மிதக்கும் கலமாகும்-என்
    அகமே விளையும் நிலமாகும்
நிலையில் வாழ்வில் நிலையாகும்-உயிர்
    நீங்கிடின் கவிதைக் கலையாகும்


எட்டுத் திக்கிலும் உள்ளாராம்-என்
   இதயம் கவர்ந்த பல்லோராம்
தட்டித் தட்டி வளர்த்தாரே-நல்
   தமிழாம் பண்பின் உளத்தாரே
மொட்டுள் உள்ள மணம்போல-நாசி
   முகரத் தந்தார் தினம்போல
கட்டிக் காத்தார் என்வலையே-ஏதும்
    கவலை என்றும் எனக்கிலையே!

இளமைப் பருவம் போயிற்றாம்-என
    இதயம் இளமை ஆயிற்றாம்
வளமைத் தந்தாள் தமிழன்னை!-மேலும்
    வாழ வைப்பதும் அவளென்னை
உளமே மகிழ இதனாலே-கவிதை
    உருவாய் பிறந்திடும் அதனாலே
களமே! கணிணீ! ஆனாயே-என்
   கவிதை வளர்ப்புத் தாய்நீயே!

எப்படி ஓடின பலநாளும்-அது
   எனக்கும் தெரியா! வருநாளும்
இப்படிப் போனால் அதுபோதும்!-கவிதை
    எண்ணத்தில் நாளும் அலைமோதும்
தப்படி வாழ்வில் வைத்ததில்லை-நான்
    தனக்கென எதையும் சொன்னதில்லை
செப்பிட மேலும் ஏதுமிலை-என்
    சிந்தையில் அணுவும் தீதுமிலை!

               புலவர் சா இராமாநுசம்



   



50 comments :

  1. வாழ்த்துக்கள் ஐயா....
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இதயத்தில் இளமையுடன், தீதற்ற நல் எண்ணங்களுடன் மேலும் மேலும் நல்ல படைப்புகளை நீங்கள் தரவும், நாங்கள் ரசிக்கவும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் புலவரே.. மேலும் பலப் பல நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தொடர்ந்து பல்லாண்டுகள் இணையத்தில் செழிக்க வாழ்த்துக்கள் ஐயா.

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  5. வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்ந்து தமிழை வாழவைக்க வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா
    உங்களின் நல்ல தமிழை (பாடலை ) வாசிக்க
    ஆவலுடன் என்றும் நாங்கள்

    ReplyDelete
  7. அகவை ஒன்றாயினும்,நாங்கள் பெற்ற அனுபவங்கள் அளவிட முடியாது!வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  8. இப்படித் தமிழைக் கவிதையாய்த் தாங்கள் ஊட்டிக்கொண்டிருக்க, எங்களுக்கும் அகவை குறைந்தாற்போல ஆனந்தம் அடைகிறோம். இன்றுபோல் என்றும் இன்கவிகள் பல புனைந்து வளமாய் நலமாய் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன். பாராட்டுகள் பலவும் தங்களுக்கு.

    ReplyDelete
  9. தமிழ்வாசி பிரகாஷ் said

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. கணேஷ் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said...


    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Sankar Gurusamy said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. MANO நாஞ்சில் மனோ said

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. செய்தாலி said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. yathan Raj said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. koodal bala said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. கீதமஞ்சரி said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. நம்பிக்கைபாண்டியன் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. திண்டுக்கல் தனபாலன் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. மரபுக்கவிதைக்கு எப்போதும் மயக்கும் தன்மை உண்டு.
    தங்கள் கவிதைகளோ சொல்லாட்சியும் பொருளாட்சியும் மிகுந்தவையாக அமைந்து எங்களை தங்கள் வலையின் பால் ஈர்ப்பது உண்மை..எனது வலைப்பக்கத்திற்கு வந்து கருத்திட்டதற்கு நன்றி
    அய்யா.

    ReplyDelete
  23. காலங்கடந்து தங்கள் படைப்புகள் வாழவும்
    இதே மகிழ்வான மன நிலையோடு தாங்கள்
    நூறாண்டு கடந்து சீரோடும் சிறப்போடும் வாழவும்
    அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  24. எப்படி ஓடின பலநாளும்-அது
    எனக்கும் தெரியா! வருநாளும்
    இப்படிப் போனால் அதுபோதும்!-கவிதை
    எண்ணத்தில் நாளும் அலைமோதும்

    வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  25. தமிழின் சுவையைத் தினமும் குறையாமல் அள்ளித் தந்துகொண்டேயிருக்கிறீர்கள்.இன்னும் தரக்கேட்டுக்கொண்டு வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete
  26. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா! இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து எங்களை தமிழ் மழையில் நனைக்த்து மகிழ்விக்க இறைனை வேண்டுகிறேன்.

    - இன்றைய வலைச்சரத்தில் தங்களது பதிவைப் பற்றி பேசியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் வந்து பார்த்து கருத்துரை இடுகவென அன்புடன் அழைக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  27. T.N.MURALIDHARAN said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் புலவரே...

    ReplyDelete
  29. Ramani said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. Ramani said...

    ஓட்டுக்கு நன்றி!

    இரண்டு நாட்களாக பலமுறை முயன்றும்
    தங்கள் வலை வரவில்லை!
    கவனிக்கவும்!

    ReplyDelete
  31. ரிஷபன் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. ஹேமா said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. துரைடேனியல் said

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. துரைடேனியல் said

    ஓட்டுக்கு நன்றி!
    தங்கள் வலையும் வரவில்லை!
    கவனிக்கவும்!

    ReplyDelete
  35. ரெவெரி said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. வலையின் வழியில் கவிபடித்தேன்
    வளமைத் தமிழின் சுவைகுடித்தேன்!
    கலைகள் யாவும் கொண்டவலை
    கருத்தைக் கவரும் உம்வலையே!
    விலையோ இதற்கோ ஈடில்லை
    வியக்கும் தமிழுக்(கு) ஏதெல்லை!
    நிலையாய் வயதோ ஒன்றின்று
    நிலையாய் நிற்கும் என்றென்றும்!

    ReplyDelete
  37. அன்புநிறை புலவர் பெருந்தகையே,
    வலைப்பூக்களில் தமிழமுது படைக்கும்
    தங்கள் எழுத்துக்கள் எமக்கு
    தாயமுது ....
    மென்மேலும் எங்களுக்கு தமிழ் விருந்து
    படைத்திடுக...
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete
  38. சிவகுமார் ! said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. AROUNA SELVAME said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. மகேந்திரன் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. "எல்லையில்லா இணையத்தில், காலமும் திசைகளும் மறந்து பறந்து நடந்து கடந்து.. நீளட்டும் உமது பயணம்.."

    வாழ்த்த வயதொரு தடையோ? ஏற்பீர் இச்சிறுவனின் வாழ்த்துக்களை !! ( உங்களுடன் ஒப்பிட்டு என்னைச் சிறுவன் என்று சொல்லிக்கொள்ளும் என் சிறுமதியை/ சிறுமகிழ்வைப் பொறுத்தருள்க!)

    ReplyDelete
  42. மோ.சி. பாலன் said

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...