Tuesday, May 1, 2012

வருக வருக மேதினமே!


சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
சுரண்டி உண்பவன் முதலாளி!
வரண்ட வாழ்விலே தொழிலாளி - நல்
வளமுடன் வாழ்பவன் முதலாளி!
திரண்டிட அணியெனத் தொழிலாளி - ஓடும்
திசைதனை அறியா முதலாளி!
மிரண்டவன் பணிந்தது மேதினமே - அதன்
மேன்மையைப் போற்றுதும் இத்தினமே!

வருக வருக மேதினமே - உழைக்கும்
வர்க்கம் போற்றிட மேதினமே!
தருக பல்வகைத் தொழிலோங்க - ஏதும்
தடையின்றிப் பற்றாக் குறைநீங்க!
பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
பேதத்தை நீக்கும் நற்புத்தி
கருக ஆண்டான் அடிமையென - நச்சுக்
கருத்தும் அகற்றிய மேதினமே!

செய்யும் தொழிலே தெய்வமென - முன்னோர்
செப்பிய வழியேச் செய்வோமென
நெய்யும் தொழிலை நிகழ்துமவன் - நாளும்
நிலைத்திட வறுமை அகத்திலவன்
பெய்யும் மழையென எதிர்நோக்க - உழவன்
பெய்யா நிலையில் துயர்தாக்க
உய்யச் செய்தாய் அன்னவரை - இந்த
உலகம் போற்றிட மேதினமே!

போதிய அளவு உழைத்தாலும் - எதிர்த்துப்
பேசிட உள்ளம் நினைத்தாலும்
பீதியே வந்திடும் முன்னாலே - அவன்
பேச்சும் அடங்கிடும் தன்னாலே!
ஊதிய உயர்வு கேட்டாலே - உடன்
உதைக்க வருவான் அடியாளே!
மேதினி தன்னில் மேதினமே - அவர்
மேன்மைக்குக் காரணம் இத்தினமே!

வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
எண்ணிடத் திறந்தது விழிநன்றே
எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

                                        புலவர்   சா.இராமாநுசம் 


41 comments :

  1. வணக்கம்!
    // எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
    இணைந்திடச் செய்தாய் மேதினமே!. //
    வேர்வை சிந்திட உழைக்கும் தொழிலாளர்கள் மட்டுமின்றி மற்ற அலுவலக ஊழியர்களும் மே தின நிகழ்ச்சியில் இணைந்து கொள்கிறார்கள். மே தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உழைப்பவர் உயர்வை சொல்கிறது -ஐயா
    உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
    தழைப்பவர் எல்லாம் அவராலே-இதை
    தரணி உணர்ந்திடச் சொன்னீரே!-
    பிழைப்பதற்காக எத்தொழிலும் -உலகில்
    செய்வது பிழையிலை என்றீரே!
    இழைத்து இழைத்து இன்தமிழில்-ஒரு
    இனிய கவிதை தந்தீரே!

    ReplyDelete
  3. அருமையான மேதினக் கவிதை
    மனம் கவர்ந்த பதிவு
    மேதின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும். மேதினத்தின் சிறப்பை உரக்கப் பறைசாற்றிய நற்கவிதை! அருமை!

    ReplyDelete
  5. //சுரண்டப் படுபவன் தொழிலாளி - அவனைச்
    சுரண்டி உண்பவன் முதலாளி!// ஆரம்பமே அசத்தல்...

    மே தின சிறப்புக் கவிதை மிக நன்று....

    ReplyDelete
  6. எனது மே தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மே தின சிறப்புக் கவிதை..சிறப்பு..உங்கள் சார்பாக நானும் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. மே தின வாழ்த்துக்கள்

    தொழிலாளி நிலையை, உணர்வுபூர்வமாக உள்ளது

    ReplyDelete
  9. சிறப்புக்கவிதை அருமை ஐயா..

    அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கம்யூனிசத்தின் சிறப்பை இன்னும் நினைவு படுத்திக்கொண்டிருப்பது மே தினம் மட்டுமே.

    அனைவருக்கும் உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. எல்லோருக்கும் தொழிலாளர்தின வாழ்த்துகள் !

    ReplyDelete
  12. வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
    வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
    கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
    கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை“

    அருமை அருமை ஐயா.
    வாழ்த்திட வார்த்தை என்னிடம் இல்லை ஐயா.

    ReplyDelete
  13. புலவர் ஐயா... மன்னித்து விடுங்கள்.
    பேய்க்கு கால் இல்லை என்று சொல்வார்களே...

    (நான் பேயை எல்லாம் பார்த்ததில்லைங்க.)

    ReplyDelete
  14. வல்லான் வகுத்ததே வாய்காலாய் - நாளும்
    வாட்டி மிதித்திடும் பேய்க்காலாய்
    கல்லார் கற்றார் பேதமில்லை - வேலைக்
    கருத்தாய் செய்தும் பெருந்தொல்லை
    இல்லார் மாற்று வழியொன்றே - அவர்
    எண்ணிடத் திறந்தது விழிநன்றே
    எல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய்
    இணைந்திடச் செய்தாய் மேதினமே!.

    மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா.!
    மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமையான மே தின கவிதை ..!

    ReplyDelete
  17. உழைப்போர் பெருமையை உயர்த்திக் காட்டும் வரிகளால் உவந்தேன். மனமார்ந்த பாராட்டுகள் ஐயா. உழைக்கும் வர்க்கத்துக்கு மேதின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தி.தமிழ் இளங்கோ said..


    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. T.N.MURALIDHARAN said..

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. Ramani said...


    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. Ramani said...

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. கணேஷ் said.

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் said..

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. நண்டு @நொரண்டு -ஈரோடு said


    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மதுமதி said..

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. மனசாட்சி™ said..


    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. பெருகச் செய்வாய் உற்பத்தி - சாதி,
    பேதத்தை நீக்கும் நற்புத்தி

    அற்புதமான வரிகள், நம்மை நாம் உயர்த்திக்கொள்ள செய்யவேண்டிய வழிகள்.

    ReplyDelete
  28. தமிழ்வாசி பிரகாஷ் said...

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. koodal bala said.

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. ராஜ நடராஜன் said.

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ஹேமா said...

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. AROUNA SELVAME said.

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  33. இராஜராஜேஸ்வரி said.

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  34. காட்டான் said..

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  35. வரலாற்று சுவடுகள் said

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  36. guna thamizh said...

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. கீதமஞ்சரி said.

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  38. முஹம்மது யாஸிர் அரபாத் said

    நன்றி!நன்றி! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...