செவிடன் தனக்கே சங்கும் எதற்கே-என
செப்பினார் அருணா தலைப்பும், அதற்கே!
கவிதைத் தருகெனக் கனிவுடன் கேட்டார்-தன்
கருத்தினை மறுமொழி தன்னிலே இட்டார்!
தம்பியின் விருப்பை தனயன் ஏற்றேன்-இங்கே
தந்திடும் வாய்ப்பை தானும் உற்றேன்!
நம்பியே சிலவரி நவின்றேன் நானும்-நீர்
நல்லதா கெட்டதா? விளக்கிட வேணும்!
மத்திய மாநில அரசுகள் இரண்டும்-ஏழை
மக்களை வாட்டி பலவழி சுரண்டும்!
எத்தனை சொல்லியும் ஏற்கவே மாட்டார்-தாம்
ஏற்றிய விலையில் மாற்றமே காட்டார்!
இத்தகைப் போக்கே செவிடன் சங்காம்-என
இயம்புதல் பொருத்தம் ஆமே! இங்காம்!
சித்தமே இரங்கா செவிபுலன் அடைப்பே-அவர்
சொல்லும் செயலும் ஊழலின் படைப்பே!
ஊற்றென ஊழல் ஓடுவ கண்டோம்-பலரும்
ஓங்கிட குரலும் ஒலித்திட விண்டோம்!
ஏற்றவர் இல்லை! எதிர்த்தால், தொல்லை!-மனம்
ஏங்கவும் தாங்கவும் பழகின ஒல்லை!
சாற்றுவ செவிடன் காதில் சங்காம்-மேலும்
சாற்றிடில் மக்கள் மறதிக்கும் பங்காம்!
மாற்றமே வருமா மாண்பினைத் தருமா-மக்கள்
மறந்தால் அதுவும் செவிடன் சங்காம்!
புலவர் சா இராமாநுசம்

மறுக்கமுடியாத உண்மை.
ReplyDeleteமத்திய மாநில அரசுகள் இரண்டும்-ஏழை
ReplyDeleteமக்களை வாட்டி பலவழி சுரண்டும்!
எத்தனை சொல்லியும் ஏற்கவே மாட்டார்-தாம்
ஏற்றிய விலையில் மாற்றமே காட்டார்!
இத்தகைப் போக்கே செவிடன் சங்காம்
இருந்தாலும் புலவரே தவறு நம்மிடமும் தான் உள்ளது..
இவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் நாம் ஒவ்வொருவரும் தானே..
மாற்றம் வேண்டும் என்றால் களத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தான் இறங்கவேண்டும் அண்ணே!
ReplyDeleteம்ம் நிச்சயம் உண்மைதன் ஜயா...
ReplyDelete......
உண்மைதான். மாற்றம் வரவேண்டும் என்பதே அனைவர் ஆசையும். நற்கவிதை தந்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteunmai....
ReplyDeleteசித்தமே இரங்கா செவிபுலன் அடைப்பே-அவர்
ReplyDeleteசொல்லும் செயலும் ஊழலின் படைப்பே!
பின்றேள் போங்கோ....
விலையிரக்கம் செய்தல் சிறப்பே-ஆகின், ஏற்றியதில்
ReplyDeleteஇரக்கம் செய்தல் வெறும் கண்துடைப்பே!!!
மாற்றம் வர வேண்டும் வருமா என்பதே என் ஐயம் ஐயா.
ReplyDeleteTHA.MA.3
வணங்குகிறேன் புலவர் ஐயா.
ReplyDeleteஎனக்காகச் செவிசாய்த்துக்
கவிகொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க.
செவிடன் தனக்கின சங்கும் எதற்கே?
ReplyDeleteகவிஞன் நிலையில் கவிதை உயர்வே!
புவியில் இருந்திடும் பொய்யும் புரட்டும்
நவின்றால் வருமா நலன்?
ஐயா... மன்னித்துவிடுங்கள்.
கவிதைகள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கிறதே என்ற ஆதங்கத்தால் தான் எனக்கு இப்படியான கேள்விகள் எழுகிறது.
தம்பி என்றோ உரைத்தீரே
ReplyDeleteதங்கக் கவியில் பகர்ந்தீரே!
நம்பி நானும் ஏற்றுவிட்டால்
நரையே அற்ற கிழமாவேன்.
தும்பி போன்ற உள்ளமைய்யா.
துள்ளித் திரியும் இளம்வயது!
எம்பி எழுத்தில் குதிப்பதெல்லாம்
எதையும் அறியும் ஆவல்தான்!
அருமையான கவிதை ..,
ReplyDeleteநம்பியே சிலவரி நவின்றேன் நானும்-நீர்
ReplyDeleteநல்லதா கெட்டதா? விளக்கிட வேணும்! /////
விளக்கிவிட்டேன் ஐயா! கவிதை அருமை - எப்போதும் போல!
எத்தனை உண்மை...செவிடர்களாக நடிப்பவர்களிடம் சங்குச் சத்தம் என்னதான் செய்யும் ஐயா !
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் said..
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
எஸ்தர் சபி said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
பா.கணேஷ் said..
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
Seeni said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
முஹம்மது யாஸிர் அரபாத் said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
முஹம்மது யாஸிர் அரபாத் said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
Sasi Kala said..
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருதுதுக்கும் நன்றி!
சா இராமாநுசம்
AROUNA SELVAME said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
AROUNA SELVAME said..
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
AROUNA SELVAME said..
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said.
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
மாத்தியோசி - மணி said.
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
ஹேமா said
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
// ஏற்றவர் இல்லை! எதிர்த்தால், தொல்லை!-மனம்
ReplyDeleteஏங்கவும் தாங்கவும் பழகின ஒல்லை! //
அய்யா! நீங்கள் சொல்லியபடி, அரசியலில் இன்றைய நமது நிலைமை இதுதான். ஒருவருக்கொருவர் ஆற்றுப் படுத்திக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
ஹேமா சொன்னது போல் இவர்கள் செவிடர்களாக நடிப்பவர்கள்.சங்கு என்ன செய்யும்?
ReplyDeleteஅருமை ஐயா!
சென்னை பித்தன் said...
ReplyDeleteகனிவான வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்