Thursday, September 13, 2012

தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர் துச்சமா எண்ணிடல் எளிதல்ல

              ஓர் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட கவிதை
    இன்றைய சூழ்நிலைக கருதி வெளியிடப் படும்
                                மீள் பதிவு
        


மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

                            புலவர் சா இராமாநுசம்

12 comments :

 1. இன்றைய நிலைமைக்கு ஏற்ற கவிதை...

  /// பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
  போனதே கட்சிகள் அரசியலே
  உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
  உண்மை பலருக்கும் புரியவில்லை ///

  நன்றி ஐயா...

  ReplyDelete
 2. மீண்டும் படித்தாலும் இப்போதும் எப்போதும் பொருந்தும் வரிகள். அருமை ஐயா.

  ReplyDelete
 3. //துக்கம் போக்கிட அரசுகளே-இரு
  தூணாய் விளங்கும் அரசுகளே
  மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
  மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!//

  நிதர்சன வரிகள்!

  ReplyDelete
 4. //மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
  மீளவும் காரணம் இன்றேதான்
  தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
  தணித்திட உறுதி பூண்பீரே
  துக்கம் போக்கிட அரசுகளே-இரு
  தூணாய் விளங்கும் அரசுகளே
  மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
  மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!
  //

  இது அந்த அரசு காதில் விழுமா ?

  ReplyDelete
 5. என்றும் பொருந்தும்!

  ReplyDelete
 6. சீக்கிரம் அரசு முடிவெடுக்கட்டும்! துயர் தீரட்டும்!

  இன்று என் தளத்தில்
  ஓல்டு ஜோக்ஸ் 2
  http://thalirssb.blogspot.in/2012/09/2.html


  ReplyDelete
 7. அன்றும் இன்றும் இந்தக் கவிதை மாறுகிறதென்றால்.....எங்கள் அரசியலில் மாற்றமில்லையென்றுதானே அர்த்தம் !

  ReplyDelete
 8. மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
  மீளவும் காரணம் இன்றேதான்
  தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
  தணித்திட உறுதி பூண்பீரே
  துக்கம் போக்கிட அரசுகளே-இரு
  தூணாய் விளங்கும் அரசுகளே
  மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
  மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

  தங்கள் கவிதைகளும் அதனுள்
  உறைந்து கிடக்கும் சிந்தனைகளும்
  என்றுமே பயனுள்ள தகவல் இவ்வுலகிற்கு
  என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை .
  இவைகளை நாம் எத்தனை முறை படித்தாலும்
  மனம் மகிழும் படைப்புகளே !..மீள் பகிர்வுக்கு
  மிக்க நன்றி ஐயா .

  ReplyDelete
 9. எந்தக் காலத்தும் எந்தக் கட்சிக்கும் பொருந்தும் கவிதை. நம்பிக்கை பொய்த்துக் கொண்டே போகிறது

  ReplyDelete
 10. மிகவும் அருமை..

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. அரசியலை பற்றி மிக அருமையான அலசல் ஐயா..... நாட்டு மக்களை காக்க கடவுளைப்போல் இருந்த பெரியவர்கள் எல்லோரும் இப்போது இல்லை அரசியலில் நிதர்சனமான உண்மை இது....

  மீள்பதிவு மீண்டுமொருமுறை எங்களுக்கு படிக்க கிடைத்த வாய்ப்பு ஐயா....

  அரசியலில் தான் மட்டும் சௌக்கியமாக இருக்கவேண்டும் தன்னை சேர்ந்தோர் சௌக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைப்போர் மத்தியில் மக்களுக்காக பாடுபடுவோர் இந்த காலத்தில் காண முடிவதில்லை..

  சாட்டையடி வரிகள் ஐயா....

  ஒரு வருஷத்துக்கு முன்னாடியும் அதே நிலை... ஒரு வருஷம் கழிச்சு எந்த முன்னேற்றமும் இல்லை... அடித்தட்ட மக்களின் சௌகர்யங்கள் இன்னும் எட்டாக்கனவாகவே தான் இருக்கிறது....

  தேர்தல் வரும்போது இலவச திட்டம் அறிவித்து மக்களுக்கு டெம்பரரி சந்தோஷம் கொடுத்து ஓட்டு வாங்கி தன் நிலையை மட்டும் தக்கவைத்துக்கொள்கின்றனர்....

  ஆகமொத்தம் அரசியல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாதகமாகவும் பொதுமக்களின் நலனுக்காக இல்லை என்பதை அழுத்தமாக சொல்லி செல்கிறது ஐயா தங்களின் கவிதை வரிகள்....

  இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் இதே நிலை தான் என்ற நிலை மாற வேண்டும்....

  மாற்றங்கள் மலரவேண்டும்... மக்களும் நல்லதை பெறவேண்டும்...

  நச் என்று சொன்னது கடைசி பத்தி வரிகள்... மக்களை மிதிக்காமல் அவர்களின் வார்த்தைகளை செவி சாய்க்க சொல்லி வேண்டியது மிக அருமை....

  அரசு தூண்களாக சொன்னது உண்மையே... வீடு என்றும் நல்லமுறையில் இருக்க தூண்கள் அவசியம்.. அந்த தூண்களாக அரசு செயல்படவேண்டும் என்று சொன்னவிதம் மிக அருமை....

  அன்பு நன்றிகள் ஐயா தங்களின் மீள் பதிவு கவிதை வரிகளுக்கு.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...