Friday, January 4, 2013

இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறுக்கின்றாள்




தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொல்லையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள் 
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக 
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-நல் 
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினம் 
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவள் 
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் 
இதயம் திறக்க மறுக்கின்றாள் 

எத்தனை காலம் ஆனாலும்-என் 
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா 
பழியும் வருமே வாய்திறவாய் 

புலவர் சா இராமாநுசம்

           நீண்ட,  பழைய  நாட்குறிப்பு,  மீள்பதிவு
   

20 comments :

  1. பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
    பழியும் வருமே வாய்திறவாய் //
    அருமையான அந்த நாட்கள் ?

    ReplyDelete
    Replies
    1. வருக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. இத்தரையில்
    என்னுயிர் நிலைத்திருப்பதெல்லாம்
    நித்திரை கலைக்கும்
    முத்திரையாய் நீ பதித்த
    சித்திர நினைவுகளே...

    அருமையான கவிதை பெருந்தகையே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. //எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும் //
    காலத்தால் அழிக்கமுடியாத கவிதை வரிகள். எத்தனை தடவை மீள்பதிவிட்டாலும் இரசிக்கக்கூடிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. மீண்டும் மீண்டும் படித்தாலும் ரசிக்கத் தூண்டும் வரிகள். அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. இளமையான கவிதை அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. மீள் பதிவாயினும்,மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் பதிவு ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. மிக மிக அருமை புலவர் ஐயா.

    இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்! இன்னிசை
    பொன்னாய் கருத்தில் பொலிகிறது! - தன்னுள்
    இதயம் திறக்கா(து) இருந்தால் உதிக்கும்
    நிதமும் அவளின் நினைவு!

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. மீண்டும் மீண்டும் நினைக்க வைத்த நினைவலைகளின் மீள்பதிவு

    ReplyDelete
  10. எப்போதோ எழுதியது என்றாலும் இப்போதும் இனிக்கிறது கவிதை.

    ReplyDelete
  11. பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு எல்லோருக்கும் ஒரு காலம் வரும்..

    ReplyDelete
  12. மீள்பதிவானாலும் இளமையோடு இருக்கிறது கவிதை !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...