Monday, December 31, 2012

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக




ஆங்கிலப்  புத்தாண்டே  வருக ! வாழும்
    அனைவர்க்கும்  ஆனந்தம்  தருக
ஏங்கியே  ஏழைகள்  வாழ குடிசை
    இல்லாமல்  வளமனைச்  சூழ
தாங்கிட  அன்னாரை நீயும் இன்பம்
    நிலையாக  தடையின்றிப்  பாயும்
தீங்கின்றி  கழியட்டும்  ஆண்டே மக்கள்
    தேவைகள்  நிறைவேற  ஈண்டே

இயற்கையின்  சீற்றங்கள்  கண்டே எங்கள்
   இதயமும்  உடைவது  உண்டே
செயற்கையால்  வருவதே  அறிவோம் இனி
   செய்வதை  ஆய்ந்துமே   செய்வோம்
இயற்கையின்   கோபத்தை  நீக்க எம்மின்
    இன்னல்கள்  இல்லாது  போக்க
முயற்சியும்  செய்வாய  ஆண்டே மக்கள்
    முன்னேற  தடையின்றி  ஈண்டே

உழவனும்  அழுகின்றான்  இங்கே அவன்
   உழைத்தாலும்  பலன்போதல்  எங்கே
தழைத்ததா   அவன்வாழ்வு  இல்லை தினம்
    தவித்தவன்  பெறுவதோ  தொல்லை
பிழைத்திட  பருவத்தில்  மாரி வந்து
   பெய்திடச்  தருவாயா  வாரி
செழித்திட  உலகமே  ஆண்டே உடன்
    செய்திட  வேண்டினோம்  ஈண்டே

இல்லாமை   நீங்கிட  வேண்டும் ஏழை
    இல்லாத   நிலையென்றும்  வேண்டும்
கல்லாதார்  இல்லாமை   வேண்டும் கல்வி
    கற்றாரை  மதித்திட  வேண்டும்
கொல்லமை  விரதமாய்  வேண்டும் நற்
    குணங்களும்  வளர்ந்திட  வேண்டும்
எல்லாரும்  வாழ்ந்திட ஆண்டே நீயும்
    ஏற்றது  செய்வாயா  ஈண்டே!

                 புலவர்  சா  இராமாநுசம்

28 comments :

  1. எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
    ஏற்றது செய்வாயா ஈண்டே!//

    ஆம் ஐயா எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete

  2. வணக்கம்!

    ஆங்கில ஆண்டினை வேண்டி! - தந்த
    அருங்கவி அமுதுறை தோண்டி!
    தீங்கிலா வாழ்வினைக் காட்டி! - நல்
    திறமுறும் வழியினை ஊட்டி!
    பாங்குறும் பயனுறும் பாக்கள்! - இன்
    பாமகள் சூடிடும் பூக்கள்!
    ஈங்கிவா் புலவனின் வேந்து! - மனமே
    இவா்கவிக் கடலிலே நீந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  3. Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  4. புத்தாண்டில் நீங்கள் எதிர்பார்ப்பவை அனைத்துமே பிறர் நலனுக்கானவையாகவே இருக்கின்றன. அருமை ஐயா. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  5. பிறர் நலனைத் தன் நலனாகக் கருதும் தங்கள் வேண்டுதல்கள் யாவும்
    இறையருளால் நிறைவேற வேண்டும் .இனிய புத்தாண்டில் உங்கள்
    வாழ்த்துக்கள் எம் நெஞ்சங்களிலும் நிறையட்டும் ஐயா .உங்களை
    இறைவனும் வாழ்த்த இன்பம் பொங்கும் நல்லாண்டாக இவ்வாண்டு
    உங்களுக்கும் உறவினர்கள் அனைவருக்கும் மலரட்டும் ..........

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  6. புத்தாண்டை வரவேற்கும் நாளில், தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  7. புத்தாண்டை வரவேற்பதில் தங்களோடு நாங்களும் இணைந்து கொள்கிறோம்.ஐயா!இந்தஆண்டிலாவது தீயவை தேய்ந்து நல்லவை வளரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  8. Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  9. எல்லாம் அருமையான வரிகள் ஐயா.

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நற் குணங்களும் வளர்ந்திட வேண்டும்
    எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
    ஏற்றது செய்வாயா ஈண்டே!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  12. நன்மையை வேண்டி ஆங்கிலப் புத்தாண்டுக் யாப்பு. அழகு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புலவர் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete

  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புலவர் ஐயா.
    த.ம.7

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...