Monday, November 11, 2013

ஐநூறு பதிவுதனைத் தாண்டி விட்டேன் –உங்கள் ஆதரவு கரத்தாலே தூண்டி விட்டீர்!





ஐநூறு பதிவுதனைத்  தாண்டி  விட்டேன் –உங்கள்
     ஆதரவு  கரத்தாலே  தூண்டி விட்டீர்!
கைமாறு  கருதாத அன்பே   கொண்டீர் –நல்
     கருத்துகளை  நாள்தோறும் வலையில் விண்டீர்
செய்மாறு நான்செய்ய அறியேன் ஒன்றே –கற்ற!
     செந்தமிழ்தான்  கைகொடுக்க துணையாய் இன்றே
உய்மாறு நான்மேலும்  வருதல்  வேண்டும் – உம்
     உறவொன்றே அருமருந்தாம்  வாழ ஈண்டும்!

நித்தமொரு கவிதன்னை எழுதத்  தானே –நான்
     நினைத்தாலும் இயலாது!  முதுமை வீணே!
சித்தமதில் எழுகின்ற  ஆர்வம்  தன்னை –உடன்
     சிதைப்பதுடன்  முதுகுவலி தந்து என்னை!
பித்தனென ஆக்குவதால் புலம்பு கின்றேன் –பொழுது
     போகவழி  இல்லாது  விளம்பு கின்றேன்!
எத்தனைநாள்  இப்படியே  கழிந்து  போமோ! – என்
     இதயத்து உணர்வெல்லாம் அழிதல்  ஆமோ!

அன்புமிகு  உறவுகளே  சொல்வேன்  ஒன்றே! –தினம்
      அனைவரது பதிவுகளை  படிக்க  நன்றே!
இன்புமிகு  ஆசைகளே என்னுள்  உண்டே –ஆனால்
     இயலாத நிலைதன்னை  நீரும்  கண்டே!
துன்பமிகு நிலையேதும் கொள்ள  வேண்டாம் !-நான்
    தொடர்வேனே ! முயல்வேனே! வலையில்  ஈண்டாம்!
என்புமிகு தோல்போல  நம்மின்  உறவே –உயிர்
     எனைவிட்டு  போகும்வரை இல்லை! மறவே!

                               புலவர்  சா  இராமாநுசம்


46 comments :

  1. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. உள்ளத்து உணர்வுகளை கவிதைகளாய் வடித்து...
    எங்களையெல்லாம் மகிழ்வுலகில் அழைத்துச் சென்று..
    உலகமென்றால் இதுதான் என எடுத்துரைத்து....
    இயல்பிருப்பே கவிதையென வாழும்
    தங்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்..
    வாழ்த்துகள்...ஐயா...!

    ஐநூறு ஆலமரமாய் விருட்சித்து...
    ஐயாயிரம்..ஐம்பதாயிரம்...
    என ஆகட்டுமே!- தங்களின்
    அரும்பெரும் தமிழ்பணி
    சிறக்கட்டுமே...!!!


    இனிய வாழ்த்துகளுடன்,
    உங்கள் தங்கம்பழனி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. ஐநூறு பல ஆயிரமாக பெருகிட எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. தங்கள் பதிவுகளும்
    தாங்களுமே என் போன்ற பல
    பதிவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்
    ஐநூறு பதிவுகள் என்பது இமாலயச் சாதனையே
    இது இன்னும் ஆயிரமாயிரமாய்த் தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. தொடருங்கள்...வயது ஆக ஆக, மூளைக்கு வேலை கொடுப்பது மூளைக்கு நல்லது; நமது சுற்றத்திற்கும், நமது குடும்பதிர்க்கும் த நல்லது

    தமிழ்மணம் பிளஸ் வோட்டு +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. வாழ்த்துக்கள் ஐயா! விரைவில் ஆயிரமாவது பதிவை எட்ட வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. வணங்குகிறேன்.. வரவேற்கிறேன் இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகளை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. மிகப்பெரிய சாதனை தான். பாராட்டுக்கள். மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. ஐநூறரா, அசத்தல் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. 500 க்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. ஐநூறு ,ஆயிரமாக,ஆயிரங்களாகப் பெருகட்டும்.வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. கடலே நீ தந்த முத்து
    இன்பக் கவிதை என்கின்ற சொத்து
    இதுவே போதாதா சொல்லு ?...
    இதயத்தில் 500 வகை நெல்லு !!!!!....

    விளையும் பயிராக நாளை
    உலகில் உன் புகழுக்கு ஏது எல்லை ?..
    அறிவோம் உடல் கொண்ட வாட்டம்
    இவை அனைத்தும் இயற்கையே தந்த மாற்றம்

    மனமே தளாராமல் நில்லு
    மனதார வாழ்த்தொன்று சொல்லு
    உனை நாம் பெற்றோமே வரமாய்
    உலகத்தில் செந்தமிழுக்கு உரமாய் ...

    புலவர் திறனுக்கு நிகராய் என்றும் நாம்
    புனையும் கவிதைக்குள் நீ வருவாய்
    இறவா வரம் பெற்ற அமுதே எம்
    இறைவன் இருக்கின்றான் உன் அருகே....

    தொழுதேன் இருகரம் கூப்பி ஐயா
    தொடரும் தொடரும் உன் கவிதைகள் மெய்யாய்
    உலகில் சிறந்த நற் கருத்தை உணர்த்தும்
    புலவர் இராமனுசம் கவிதைகள் வாழிய வாழியவே ....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. வாழ்த்துக்கள் அய்யா...!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  14. ஐயா மிகப்பெரிய சாதனை. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள், ஐயா.
    ஆயிரமாக,ஆயிரங்களாகப் பெருகட்டும்.வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  15. அன்பு ஐயா,உங்களுக்கு இருக்கும் உற்சாகத்தில் ஒரு கால் பங்காவது எமக்கும் இறை அளிக்கட்டும். தொடர்ந்து எழுத உங்களுக்கு உடல்வலிமையும் அவனே தருவான்.வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  16. ஐநூறாவது பதிவுக்கு
    அன்பான வாழ்த்துகள்..!

    ReplyDelete
  17. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  18. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நலமுடன் தொடர இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  19. ஐநூறு
    ஐயாயிரமாய்
    வளர
    தமிழ்ப் பயிர்
    செழிக்க
    வணக்கமும்
    வாழ்த்துக்களும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  20. மகத்தான சாதனைதான் ஐயா!
    இன்னும் இன்னும் பல ஆயிரம் படைத்திடுங்கள்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  21. ஐநூறு பதிவுகளும் தரமான பதிவுகளாய் அருமையாய் தந்திட்டீர் ஐயா... இன்னும் பல பதிவுகள் தர வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  22. வணக்கம் அய்யா.
    500 ஆவது பதிவிற்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும். உள்ளத்தில் மகிழ்ச்சியும், கரங்களில் பணிவையும் வைத்து தங்களை வணங்கி இன்னும் தாருங்கள் என வேண்டுகிறேன்..

    ReplyDelete
  23. 500க்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  24. 500 - ஆவது பதிவு.... மனமார்ந்த வாழ்த்துகள் புலவர் ஐயா.... மேலும் பல நூறு பதிவுகள் எழுதிட உங்களுக்கு உடல் நிலை ஒத்துழைக்கட்டும்.......

    ReplyDelete
  25. தமிழுக்கு
    முதுமையும் உண்டோ
    இத்தரணியில்...!
    மூப்பில்லா தமிழ்மகளைக்
    காதலிக்கும் தங்களுக்கு
    ஐநூறும் அகரம்போலவே...
    ஆயிரமாயிரம் பதிவுகள்
    வழங்கிடவே
    வேண்டுகிறேன் தமிழன்னையை.._/\_
    அகரம் படிக்காமலே
    எழுதத்துவங்கிய எம்போன்றோருக்கும்
    புலவரது எழுத்தைப் படித்திடவே
    புத்தியிர் பிறந்திடுமே..
    ஆண்டுகள் பல
    ஆரோக்கியத்துடன்
    வாழுமிந்தத் தமிழுமே
    வையகம் போற்றவே..:)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...