Wednesday, February 19, 2014

நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது!
உறவுகளே!
நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது! 2011-இல் மூவரையும் தூக்கிலிட முயன்றபோது தமிழகம் கொந்தளித்தது அது போது , நான் எழுதிய மூன்று கவிதைகளை  இன்று  முதல் இங்கு வெளியிடுகிறேன்!


உயிர்மூன்று ஊசலென கண்முன் ஆட-அதை
உணராது உறக்கத்தில் விழிகள் மூட
மயிர்நீப்பின் உயிர்வாழா. கவரி மானா-அட
மறத்தமிழா சொன்னதெலாம் முற்றும் வீணா
வயிர்நிறைய போதுமென அந்தோ நோக்கே-ஏனோ
வந்ததடா சொந்தமடா அங்கே தூக்கே
கயிர்நீண்டு தொங்குதடா எழுவாய் நீயே-பொங்கும்
கடலாக அலையாகி எதிர்ப்பாய் நீயே

செய்யாத குற்றத்தை செய்தார் என்றே-பழி
செப்பியே சிறைச்சாலை தன்னில் இன்றே
பொய்யாக இருபத்து ஆண்டும் செல்ல-உடன்
போடுவீரே தூக்கெனவே ஆள்வோர் சொல்ல
ஐயாநான் கேட்கின்றேன் இதுநாள் வரையில்-அவர்
அடைபட்டு கிடந்தாரே ஏனாம் சிறையில்
மெய்யாக இருந்தாலே அன்றே அவரை-தூக்கு
மேடையில் ஏற்றினால் கேட்பார் எவரே

வீணாகப் பழிதன்னை ஏற்க வேண்டாம்-அவரை
விடுவிக்க கௌரவம் பார்க்க வேண்டாம்
காணாத காட்சிபல காணல் நேரும்-எதிர்
காலத்தில் இந்தியா உடைந்து சிதறும்
நாணாத தமிழனாய் இருக்க மாட்டோம்-தனி
நாடாக கேட்பதற்கும் தயங்க மாட்டோம்
தூணாக ஒற்றுபட இருந்தோம் நாங்கள்-எம்மை
துரும்பாக நினைத்தீரே நன்றா நீங்கள்

இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்
அடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற
கரக்கமலம் குவித்து உமை வேண்டுகின்றோம்-உயிர்
காத்திடுவீர்! கனிவுடனே என்றேமீண்டும்
உரக்ககுரல் கொடுக்கின்றார் தமிழர்! உண்மை-எனில்
ஒற்றுமைக்கு உலைவைப்பார் நீரே! திண்மை

புலவர் சா இராமாநுசம்

மீள் பதிவு

19 comments :

 1. உங்கள் வேண்டுதல் வீணாகவில்லை !
  த ம 1

  ReplyDelete
 2. உண்மையில் நேற்றுத் தான் கடவுள் கண் திறந்திருக்கிறார்.நீதி நிலைத்திருக்கின்றது.

  ReplyDelete
 3. இரக்கமின்றி உயிர்மூன்றை எடுத்தல் நன்றா-நல்
  இதயமென சொல்லுவதும உம்முள் இன்றா
  அரக்கமனம் பெற்றீரா சிங்களர் போன்றே-தமிழன்
  அடிமையல்ல மேன்மேலும் அவலம் தோன்ற........
  ....................உயிருள்ள வார்த்தைகள் உயிர் கொடுத்தன

  ReplyDelete
 4. பிரார்த்தனை வீண் போகவில்லை ஐயா...

  ReplyDelete
 5. தங்கலது நியாயமான எண்ணமும், பிரார்த்தனையும் வெற்றி பெற்றது ஐயா!!

  ReplyDelete
 6. தங்கள் பிரார்த்தனைக்கு வழி கிடைத்து விட்டது.

  ReplyDelete
 7. நல்லது நடைபெற்றால் சரி! நன்றி!

  ReplyDelete
 8. மூவர் மட்டுமல்ல, எழுவர், விடுதலையே அடையப் போகிறார்கள்! உங்களைப் போன்ற மூத்தோரின் வார்த்தைகள் பலித்துவிட்டன, காலம் கடந்தாவது!

  ReplyDelete
 9. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

  ReplyDelete
 10. சக்தி மிக்க தங்களைப் போன்றவர்களின் வேண்டுதல்களே இந்நேரம்
  நீதி வெல்வதற்கும் வழி வகுத்துள்ளது ஐயா ! தலை வணங்குகின்றேன் .

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...